ரவா தோசை PHOTO: K. Raman
தற்போது டான்சானியாவில் வசித்துவரும், எனது மிக நெருங்கிய நண்பர் திரு. வெங்கட கிருஷ்ணனின் விருப்பத்தின்படி இந்த ரெசிபி பதிவு செய்யப் படுகிறது.
|
தேவையான பொருள்கள்
பாம்பே ரவா - 1 டம்ப்ளர்
அரிசி மாவு - 1 டம்ப்ளர்
பச்சை மிளகாய் - 3
கருவேப்பிலை - 5 அல்லது 6 கருவேப்பிலை இலைகள் போதும்
மிளகு சீரக தூள் - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தேங்காய் பல் (விருப்பப் பட்டால்) - சிறிதளவு
பொடியாக நறுக்கிய தேங்காய் பல் (விருப்பப் பட்டால்) - சிறிதளவு
சின்ன வெங்காயம் (விருப்பப் பட்டால்)
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 2 டம்ப்ளர்
செய்முறை
ரவா, அரிசி மாவு இரண்டையும் கலந்து, தண்ணீர் ஊற்றி, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். கெட்டியாக இல்லாமல் நீர்க்க கலந்து கொள்ளவும்.
ஊறிய பின், ரவை நன்கு கரைந்து இருக்கும். இதுதான் சரியான பக்குவம். அதில் மிளகு சீரக பொடி, ரொம்ப பொடிப்பொடியா நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை (கிள்ளி போடவும்), அதுக்கு மேல விருப்பப் பட்டால் பொடிப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய் பல், உப்பு எல்லாம் கலந்து தோசையாக ஊற்றவும். முக்கியமாக, தோசையை கரண்டி வைத்து தேய்க்க கூடாது. அப்படியே ஊற்றி விட்டு வெந்ததும் திருப்பிப் போட வேண்டியதுதான்.
மறுபக்கம் வெந்ததும் தோசை பிய்ந்து போகாமல் பக்குவமா எடுத்து பரிமாறவும்.
அவ்வளவுதான். ரவா தோசை ரெடி.
அவ்வளவுதான். ரவா தோசை ரெடி.
ரவா தோசை மாவு தண்ணியா இருக்க வேண்டியது அவசியம். எனவே ஊறிய பின் மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
தோசையை மெல்லிசாக ஊற்ற வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பழகினால் பழக்கத்தில் வந்துவிடும்.
நல்ல 'ரிச்'சான ரவா தோசை வேண்டும் என்றால், முந்திரி பருப்பை இரண்டாக்கி, நெய்யில் வறுத்து, மாவில் சேர்க்கலாம்.
மிளகு, சீரகத்தை நைசாக அரைக்காமல் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்.
ரவா தோசை முறுகலாக செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
ரவா தோசை முறுகலாக செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.