Tuesday 16 July 2013

சிறு தானிய சமையல்


       மையலறையில் நாம் உபயோகப் படுத்துவது இரண்டே இரண்டு தானியங்கள்தான். ஒன்று அரிசி. மற்றொன்று கோதுமை. சிறு தானியம் என்றால் என்னவென்றே நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் கேழ்வரகு நமக்கு கொஞ்சம் பரிச்சயமான தானியம். அதுவும் சிறுதானியம் என்றெல்லாம் தெரியாது. ராகி, நமக்கு தெரிந்த மூன்றாவது உணவு பொருள். ராகி மால்ட், ராகி தோசை, ராகி இனிப்பு அடை....இவை தாண்டி நம்மால் சிந்திக்க முடியாது. ஒரு விதத்தில் கேழ்வரகு சிறுதானியங்களின் பெரியண்ணன்.

      சில நாட்களுக்கு முன் நானும், எனது நண்பரும் தி.நகர் நடேசன் தெருவில் மிக பிரபலமான ஒரு மளிகை கடைக்கு சென்றோம். அந்த கடையில் சிறுதானியங்கள் விற்கிறார்களா என்று அறிவது எங்கள் நோக்கம். "சாமை, தினை கிடைக்குமா?" என்று நண்பர் கேட்டார். "சாமை தினையா? அப்படின்னா...."என்று சிரித்தார் கடைக்காரர். பதில் பேசாது திரும்பி விட்டோம். நகரில், Organic Shops, காதி தவிர நாம் வழக்கமாக செல்லும் எந்த கடையிலும் சிறு தானியங்கள் கிடைப்பதில்லை. கேழ்வரகு மட்டும் விதி விலக்கு. 

     னால் இளைஞர்கள் மத்தியில் இப்போது ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இன்று ஆர்கானிக் கடை விரித்திருப்போரும், அந்த கடைகளின் நுகர்வோரும் இளைஞர்களே. நுகர்வோரில் பெரும்பான்மையானோர் ஐ.டி. துறையினர். அதனால் தான் போரூர், ஒ.எம்.ஆர். பகுதிகளில் ஆர்கானிக் கடைகள் அதிகம் வந்திருக்கின்றன. ஒ.எம்.ஆர். பகுதியில் ஆர்கானிக் உணவகமே (Organic Hotel) துவங்கப் பட இருக்கிறது. அப்படி வந்தால், பெரும்பாலும் அது நாட்டின் இரண்டாவது ஆர்கானிக் உணவகமாக இருக்கும். இந்தியாவின் முதல் ஆர்கானிக் சிறு தானிய உணவகமான  Café Ethnic ஆந்திராவின் மேடக் மாவட்டத்தில் உள்ள, zaheerabad என்ற சிறு ஊரில் இயங்குகிறது.

   ர்கானிக் கடைகளில் சிறுதானியங்கள் எளிதாக கிடைப்பதால், அவற்றில் என்ன சமைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

      ம்மில் பலருக்கு ஓர் எண்ணமுண்டு. அது..."  நாம் கடந்து வந்த பாதையே சரியானது. அந்த பாதையில் நாம் கண்ட காட்சிகளே உண்மையானவை " என்பதுதான். வேறு பாதையுண்டு. அங்கு காட்சிகள் மாறும் என்று நினைப்பதில்லை. சிறு தானிய சமையல் விஷயத்திலும், நாம் அவ்வாறே, கடிவாளம் போட்ட குதிரையாகவே சிந்திக்கிறோம். கம்பு என்றதும் கம்மங்கூழ் மட்டும் தான் நினைவில் வரும். திணை என்றால் மாவிளக்கு மாவு. தேனும் திணை மாவும் செய்யுளை வேறு உதாரணம் காட்டுவோம். 

     Jonna Roti, Dal-bati-churma என்று கர்நாடகாவிலும், ராஜஸ்தானிலும் நாட்டு சோளத்தில் (Maize அல்ல) விதம் விதமாக கலக்குகிறார்கள். ஆந்திரா, மகாராஷ்டிராவிலும் சிறு தானிய உணவுகள் பிரபலம்.

    கூழையும், மாவையும் தாண்டிய சிறு தானிய சமையல் செய்வது எப்படி? ரொம்ப சிம்பிள். அரிசியிலும், கோதுமையிலும் செய்யும் எந்த உணவையும் சிறு தானியத்தை பயன் படுத்தியும் செய்யலாம். அதற்கு மேலும் செய்யலாம். சிறு தானியங்கள் சத்தானவை மட்டுமல்ல. மிக மிக சுவையானவையும் கூட. சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொண்டால் போதும். சிறு தானியத்திலும் பச்சை (Raw), புழுங்கல் (Boiled) என்று இரு வகை உண்டு. பச்சை தானியத்தில் சாதம் வடிக்கலாம். வெண்பொங்கல் செய்யலாம். பாயசம் உள்ளிட்ட பல வகை இனிப்புகள் செய்யலாம். ரொட்டி செய்யலாம். புழுங்கல் தானியத்தில் இட்லி, தோசை செய்யலாம். 

    குறிப்பாக சாமை தயிர் சாதமும், வரகரிசிப் பொங்கலும் செய்து பாருங்கள். அரிசி சாதத்திற்கும், சிறுதானிய சாதத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. சிறுதானிய அரிசியின் அளவு மிக சிறியதாக இருக்கும் அவ்வளவுதான். நல்ல flavour இருக்கும். தானியத்திற்கேற்ற தண்ணீர் அளவு, வேக விடும் நேரம் இவை தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே. பழக்கத்தில் பக்குவம் தெரிந்து விடும்.

   ப்போது சிறு தானிய ரெசிப்பிகள் பத்திரிகைகளில் பரவலாக வருகின்றன. ஆறு மாதங்களுக்கு முன் கூட, வார, மாதமிரு முறை இதழ்கள் சிறுதானிய சமையல் குறிப்புகளை வெளியிட்டதில்லை. நிலைமை வேகமாக மாறி வருகிறது. சிறு தானிய சமையலுக்கான பயிற்சி வகுப்புகள் கூட நடத்தப் படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் இந்த பயிற்சி வகுப்புகளை மாதம் ஒரு முறை நடத்தி வருகிறது. காலை 9.30 முதல், மாலை 4.30 வரை பயிற்சி தருகிறார்கள். செய்முறை விளக்கம் உண்டு. சமையல் பொருள்களை நீங்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை. 

ந்த மாத பயிற்சி நடைபெறும் நாள்: 18.07.2013

யிற்சி கட்டணம்-ரூபாய் 400.



17 comments:

Anonymous said...

இது எங்க கிடைக்கும்? ( சென்னை) கடைகள் விவரம் கிடைத்தால் பயன்படுத்த எண்ணும் எங்களை போன்றோருக்கு உதவியாக இருக்கும்.

Traditional Food Blog said...

உங்கள் பெயரும் e-mail முகவரியும் தந்தால், கடைகள் விவரம் அனுப்புவேன். தங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

Kosalram said...

engalidam Siru dhaniya semiya pockets kidaikum.
kambu semiya
Kudhirai vali semiya
Kollu semiya
thinai semiya
varagu semiya
oru packet Rs.30/-
contact 9941435970
Madhuravoyal Chennai

nandriyudan,
C.S.M.Kosalram

Murugesan said...

Raman Krishnamachari said...

உங்கள் பெயரும் e-mail முகவரியும் தந்தால், கடைகள் விவரம் அனுப்புவேன். தங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

MSP.Murugesan
mspmurugesan@gmail.com
சிறுதானியங்கள் கிடைக்கும் கடையின் விவரம் போன் எண்ணும் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

Traditional Food Blog said...

தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சில தினங்களில் அனுப்புகிறேன்.

Traditional Food Blog said...

சென்னையில் இருக்கும் ஆர்கானிக் கடைகள் முழு விவரம் (சிறுதானியம் கிடைக்கும் இடங்கள், தொலைபேசி எண் உள்பட)அறிய பார்க்கவும்:http://thalaivazhaivirundhu.blogspot.in/2014/02/blog-post.html

Kosalram said...

Varagu Arisi engalidam kidaikkum.

Vilai miga kuraivu.

1 kilo = 65/- rs

Wholesale and retail available.

5kg, 10kg bags available.

contact:
C.S.M.KOSALRAM
99414 35970
CHENNAI

Suchhitra said...

I would like to replace with these grains, I would like to attend class also, and the shops in and around Mylapore where I can get these grains.

Traditional Food Blog said...

You can refer this link for the list of Organic shops in and around Mylapore (where you can get all types of millets)-http://thalaivazhaivirundhu.blogspot.in/2014/02/blog-post.html#my
For training on millet cooking I would refer the Information and Training centre of the Tamil Nadu Agricultural University (at Anna nagar, Chennai). They conduct one day training programme on millet cooking once in a month. Contact number-044-26263484

Traditional Food Blog said...

You can also get lot of millet based recipes in this blog-'thalaivazhaivirundhu'.

Unknown said...

எங்களிடம் தினை, வரகு, பனி வரகு, சாமை, குதிரைவாலி, ராகி, நாட்டு சோளம், கம்பு உள்ளது. நாங்கள் அனைத்து சிறுதானியங்களையும், நீங்கள் குறைந்தது 5 கிலோ ஆர்டர் கொடுத்தால் உங்களது இல்லத்திற்ககே வந்து டெலிவரி செய்து விடுவோம்.


விலை குறைவு மற்றும் பாலிஷ் செய்யாத சிறுதானியங்கள்.

ஜெயகுமார்
9884680695.
gemexportsqueries@gmail.com

Unknown said...

Hi, we have All Sirudhaniyam (Millets).

Like Thinai, Saamai, Varagu, Pani Varagu, Kuthiraivali, Ragi, Kambu, Naatu Cholam, Thinai Upma Rava, Thinai Idly Rava, Saamai Upma Rava, Saamai Idli Rava, Pani Varagu Upma Rava, Kambu Flour, Cholam Flour, Ragi Flour, Ragi Flour (Sprouted), Nutri Mix (Saththu Maavu), Sirudhaniya Adai Flour.

If you give order to us, we'll Deliver to your Doorsteps. Please order morethan 5 kgs. Thank you.

Jayakumar
9884680695
gemexportsqueries@gmail.com.

Anonymous said...

Dear Sir,

Thanks for sharing the valuable info.

Kindly request you to inform the next session for the "சிறு தானிய சமையல்"..

Thanks in advance,
Sathees
sathees03@gmail.com

Anonymous said...

Hi!! We are from mambakkam, near by vandaloor. We also sale sirudhanyam, varagu, saamai,kudhiravaali, thinai etc. Pure oils like red sesame oil, black sesame oil, coconut oil, castor oil, n nutri health mix, karupatti,panangkarkandu, varagu flour, and all sirudhanyam flour items, sirudhanyam mix, pongal mix etc available.

Traditional Food Blog said...

You have mentioned only your place-Mambakkam. But forgot to mention your contact number. Please provide your contact and product details for the benefit of readers.

Unknown said...

உங்க அலைபேசி எண் கொடுங்க அல்லது 9597401481 இதற்கு call பன்னி சொல்லுங்க அல்லது pugal0602@gmail.com ku மொத்த விலைவிவரம் அனுப்புங்க

Traditional Food Blog said...

Dear Pugalendhi Annamalai....சென்னையில் இருக்கும் ஆர்கானிக் கடைகள் முழு விவரம் (சிறுதானியம் கிடைக்கும் இடங்கள், தொலைபேசி எண் உள்பட)அறிய பார்க்கவும்:http://thalaivazhaivirundhu.blogspot.in/2014/02/blog-post.html

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...