ஆடி கூழ் |
ஆடி மாதம் என்பது காற்றடி காலம் . பலமான காற்று வீசும். அந்த காற்று பல்வேறு கிருமிகளையும் நம் மீது பரப்பிவிட்டு செல்லும். அப்போது நமக்கு மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படும். அதற்காகவே நமக்கு அளிக்கபட்டதுதான் இந்த ஆடி கூழ் .
கேழ்வரகு, கம்பு, நாட்டு சோளம் -ஒவ்வொன்றும் ஒரு கிலோ.
இவற்றை மாவு மில்லில் கொடுத்து அரைக்கவும்.
2 லிட்டர் பாலை உறை ஊற்றவும்.
சின்ன வெங்காயம் அரை கிலோ.
பச்சரிசி நொய் - கால் கிலோ.
உப்பு
முதல் நாள் மாலையில்....
மாவை கரைத்து கொள்ளவும்.
அடி கனமான அண்டாவில் 2 லிட்டர் தண்ணீர் கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் ..........
அரிசி நொய் போட்டு, அரை பதம் வெந்ததும் .........
கரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்.
நன்கு வேக விடவும்.
ஈர கையோடு தொட்டால் கையில் ஒட்டாத பதம் வரும் வரை வேக விடவும்.
அடுப்பை தணித்து தட்டை போட்டு மூடவும்.சிறிது நேரம் கழித்து கீழே இறக்கி வைக்கவும்.
மறுநாள் காலை...
நான்கு பங்கு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கரைத்து, கெட்டி தயிர் சேர்த்து கையால் நன்கு கிளறவும்.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நன்கு கலந்து,
கடவுளுக்கு படைத்து, முருங்கை கீரை துவட்டலுடன் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு சாப்பிடவும்.
துள்ளு மாவு : அரிசி மாவுடன் பொடித்த வெல்லத்தை நன்கு கலந்து கையால் பிடித்து சாப்பிடுவது. கூழ் குடிக்கும் முன்னர் சிறிது துள்ளு மாவு சாப்பிடுவது வழக்கம்.
No comments:
Post a Comment