கும்பகோணம் கடப்பா PHOTOS: Srividya Raman |
செய்து காட்டியவர்: திருமதி.சுந்தரவல்லி ராஜகோபாலன்
2 உருளை கிழங்கையும், அரை கப் பாசி பருப்பையும் தனியே வேக வைக்கவும்.
வேக வைத்த உருளை கிழங்கை தோல் உரித்து பாசி பருப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.
2 தக்காளி, 2 பெரிய வெங்காயம் இவற்றை பொடிப்பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் (4) கீறி போடவும்.
இஞ்சி, பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு, பட்டை, சோம்பு பொரிக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி அளவு வதங்கியதும் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
அரை டம்ப்ளர் தண்ணீர் விட்டு, அடி கனமான பாத்திரத்தில் வைத்து, சிறிது சூடேறியதும், கடாயில் போட்டு வதக்கிய கலவையை நன்கு கலந்து, கொதிக்கும் முன் இறக்கி விடவும். கொதி வந்தால் கசந்து விடும்.
அடுப்பில் இருந்து இறக்கி கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அலங்கரிக்கவும்.
பூரிக்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
கும்பகோணத்தின் மிக பிரபலமான உணவுகளில் ஒன்று கடப்பா. தஞ்சை மண்ணின் சாப்பாட்டு ரசனைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கடப்பா. உருளை கிழங்கும், பாசி பருப்பும், காவிரி தண்ணீரும் சேர்ந்து ஓர் அற்புத சுவையை தரும்.
நாம் மறந்து வரும் உணவுகளில் ஒன்று கடப்பா. தஞ்சை மண்ணில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் மட்டும், அரிதாக எப்போதாவது இதை வீட்டில் செய்கிறார்கள். பெரும்பாலான ஹோட்டல்களிலும் இந்த கடப்பா கிடைப்பதில்லை. மேற்கு மாம்பலம் தஞ்சாவூர் மெஸ், சேத்துப்பட்டில் MSG Kitchen, திருச்சி சங்கர விலாஸ் என்று மிகச் சில உணவகங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த கடப்பா.
பூரி-பாசந்தி, பூரி-கடப்பா என்று விதம் விதமாக ரசித்து சாப்பிட்டு இருக்கிறார்கள் அன்றைய கும்பகோணத்து மக்கள்.
No comments:
Post a Comment