அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி |
சோளே பூரி, சன்னா பட்டூரா, சோளே பட்டூரா, சன்னா பூரி - பெயர்கள் பல இருந்தாலும் சுவை ஒன்றுதான். ஆஹா...அற்புதம். வேறு வார்த்தை இல்லை. 'நன்றாக இருக்கிறது' என்று சொல்லக் கூட வாய் திறக்க முடியவில்லை. வாயை திறந்தாலே அதில் பூரியை திணிக்க சொல்கிறது மனம்.
கொண்டை கடலை மசாலாவுடன் பூரி. சன்னா பட்டூரா. பஞ்சாப் பகுதியின் சிறப்பு உணவு.
சிங்கத்தை அதன் குகைக்குள் சென்று சந்திப்பவர்கள் அல்லவா நாம்?
சோளே பூரியை அமிர்தசரஸ் சென்று சாப்பிட்டு வந்தேன்.
அமிர்தசரஸ் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கண்ணா ஸ்வீட்ஸ் (Kanha Sweets). இது ஸ்வீட் ஸ்டால் மட்டும் அல்ல. இனிப்பகத்துக்கு பின்னால், சிறிய உணவகம் இருக்கிறது.
அமிர்தசரஸ் Kanha Sweets ஹோட்டல் |
அமிர்தசரஸ் Kanha Sweets Hotel சோளே பூரி |
காலை ஒன்பது மணிக்கே, காய்ந்த வயிற்றுடன் சென்று விட்டோம். பூரியை ஒரு பிடி பிடிப்பது என்று திட்டம்.
ஹோட்டல் செல்லும் வழியில், திறந்த வெளியில் பூரி சுட்டுக் கொண்டிருந்தார்கள். திறந்த வெளி என்பதால் சுகாதார குறைவு என்று சொல்லி விட முடியாது. அவர்கள் பூரி தயாரிப்பதே கவிதை எழுதுவது போல் ரசனையாக உள்ளது. பூரி மாவை உருட்டி, உள்ளங்கையில் வைத்து பூரி தட்டி விடுகிறார்கள். பலகை, பூரி கட்டை எல்லாம் தேவையில்லை.
தட்டிய பூரியை அவர்கள் கடாயில் வீசும் அழகே அழகு.
பூரி சுடும் காட்சி, வயிற்றை கிள்ளி, பசியை அதிகப் படுத்தியது.
"ஏதோ சாதாரண ஹோட்டலா இருக்கும்" என்று உள்ளே போனால், A.C. Restaurant நம்மை குளு குளு என்று வரவேற்கிறது.
"Variety இல்லாமல் ஒரே டிஃபனுக்கு இத்தனை ரசிகர்களா?"
"கூட்டம் அதிகமாச்சே. நமக்கு பூரி கிடைக்குமா?"
சந்தேகத்துடன் அமர்ந்தோம்.
சிறிது நேரத்தில் கூடை நிறைய பூரியுடன் ஒருவர் நுழைந்தார். ஆளுக்கு ஒரு பூரி போட்டார்.
பூரி ஒன்று. .
சைட் டிஷ் மூன்று.
சைட் டிஷ் மூன்று.
சன்னா மசாலா. வெங்காயம். மாங்காய் இனிப்பு கூட்டு.
ஆம். மாங்காயில் இனிப்பு போட்டு செய்திருந்தார்கள். பெயர் தெரியவில்லை. சுவை தெரிந்தது. நன்றாக இருந்தது.
Star rated item என்றால் சன்னா மசாலாவும் பூரியும்தான்.
அமிர்தசரஸ் Kanha Sweets சோளே பூரி |
Recipe தெரியவில்லை. பூரியில் ஓம சுவையும் சிறிது கார சுவையும் தெரிந்தது. நம்மூர் பூரி போல காற்றில் பறந்து விடும் மெல்லிய பூரி அல்ல. நிறைவான பூரி. தொட்டால் உடைந்து விடும் மொறு மொறு பூரி அல்ல. விண்டு வாயில் போடக் கூடிய strong ஆன பூரி.
நம்மூரில் செட் பூரி என்றால் சின்னதாகவும், சோளே பூரி என்றால் பெரிய சைஸிலும் இருக்கும். ஆனால் அமிர்தசரஸ் Kanha ஹோட்டலில் சோளே பூரி சின்ன சைஸில் தான் இருக்கிறது.
அடுத்த கவலை. ஒவ்வொரு பூரியாக போட்டால் எப்ப சாப்பிட்டு முடிப்பது? கவலைப் படாதீர்கள் என்று பூரி கூடையோடு வந்தார் bearer. ஒரு பூரி சாப்பிட்டு முடிக்குமுன் அடுத்த பூரி வந்து விடுகிறது. ஆளுக்கு ஒரு பூரி என்று போடுவதால், யாருமே காத்திருப்பதில்லை. பூரி கனமாக இருப்பதால் மூன்று பூரிக்குமேல் சாப்பிடுவது கடினம். அது மட்டும் அல்ல. சன்னா மசாலா அருமையாக இருப்பதால், சன்னாவுக்கு பூரியை தொட்டு சாப்பிடும் நிலை.
எங்களுடன் பயணித்த என்னுடைய nieceக்கு Breakfast சாப்பிடும் பழக்கமில்லை. இந்த பூரியின் சுவையில் மயங்கி 3 பூரி தின்றாள் என்பதிலேயே இதன் சுவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment