Monday, 24 February 2014

சென்னையில் சில ஆர்கானிக் நிகழ்வுகள்


ஆர்கானிக் உணவு பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை....


சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள CP Art Centreல் பிப்ரவரி 27 வியாழன் முதல் மார்ச் 1 சனிக் கிழமை வரை (27-02-2014-01-03-2014), ஆர்கானிக் உணவு பொருள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெற இருக்கிறது. சீர்காழி இயற்கை விவசாயிகள் சங்கம் (Sirkazhi Organic Farmers Association-SOFA) இந்த கண்காட்சியை நடத்துகிறது.

ஆர்கானிக் அரிசி வகைகள், அவல், அப்பளம், இயற்கை உரங்கள், விதைகள் ஆகியவை கிடைக்கும்.

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. சீர்காழி இயற்கை விவசாயிகள் சங்கம் என்பது, விவசாயிகள், சுய உதவி குழுக்கள் சேர்ந்து நடத்தும் ஆர்கானிக் உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை அமைப்பாகும். 

சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் உணவு பொருள்களை (certified organic food products) இவர்கள் தயாரிக்கிறார்கள். இவர்களின் முக்கிய விளைபொருள் ஆர்கானிக் அரிசியாகும்.

இந்த அமைப்பில் இணைந்துள்ள சுய உதவி குழு பெண்கள் ஆர்கானிக் அரிசி மாவு, ஆர்கானிக் அப்பளம், ஆர்கானிக் புட்டு மாவு போன்ற பொருள்களை தயாரிக்கிறார்கள். Centre for Indian Knowledge Systems (CIKS) என்ற அமைப்பு இவர்களுக்கு உதவி வருகிறது. NABARD வங்கியின் கடன் உதவியுடன் இவர்களது ஆர்கானிக் முயற்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆர்கானிக் நெல்விதை விற்பனை இவர்களின் சிறப்பான முயற்சிகளில் ஒன்று.

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் அல்லாது சென்னை, சேலம், கோயமுத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதிகளில் இவர்களது பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.


வீட்டு தோட்டக் கலை பயிற்சி 

குரோம்பேட்டையில் உள்ள பயோ ஆர்கானிக் (Bio Organic) இயற்கை உணவு பொருள்கள் விற்பனை கடை இந்த ஒருநாள் பயிற்சியை வரும் மார்ச் 1 சனிக்கிழமை ( 01-03-2014) அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்துகிறது.

இயற்கை உரம், மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய பொருள்கள், பாரம்பரிய காய்கனிகள், விதைகள், சிறுதானிய உணவு ஆகியவை பற்றிய பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி கட்டணம் இல்லை.

குரோம்பேட்டை ராகவா நகரில் உள்ள BBR நலசங்கத்தில் இந்த பயிற்சி நடைபெறும். தொடர்புக்கு-78120 99366.

Thursday, 13 February 2014

இயற்கை உணவு-சில சிந்தனைகள்

இயற்கை உணவுக்கும் இந்த மலர்களுக்கும் என்ன தொடர்பு? விடை கடைசி பாராவில்... 

Organic food என்பதனை இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட உணவு என்றும் சொல்லலாம். உயிர்ப்புள்ள உணவு என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் 'organic' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'உயிருள்ள' என்பதுதான். அதேபோல் organic உணவு பற்றி பேசும்போது மேலும் இரண்டு வார்த்தைகளை பற்றி அறிந்திருத்தல் அவசியம். Sustainable farming (தொடரக் கூடிய விவசாயம்), ethical farming (நெறிமுறைக்கு உட்பட்ட விவசாயம்). 

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், இயற்கை உரம், இயற்கை பூச்சிக் கொல்லிகள் இடும் விவசாயம் மட்டுமே organic விவசாயம் அல்ல என்பதை புரிந்து கொல்வதற்காகதான்.

மண்ணை மாசு படுத்தாமல், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து உணவு தரக் கூடிய வகையில் இந்த பூமியை பயன்படுத்துவதும் organic விவசாயியின் கடமை.

அதாவது அரிய இயற்கை வளமான தண்ணீரை தேவைக்கு மட்டும் அளவாக பயன்படுத்துவதும் organic விவசாயியின் பொறுப்பு. அதுமட்டுமல்ல. வெகு தொலைவில் இருந்து கொண்டு வரப் படும் உணவு பொருளை உண்பதுகூட இயற்கைக்கு எதிரான செயலே. அவ்வாறு உணவு பொருளை தொலை தூரத்தில் இருந்து கொண்டு வர பயன்படும் எரிபொருள் (petrol, diesel) அரிய இயற்கை வளமாகும். அவ்வாறு கொண்டு வர பயன்படும் வாகன புகை நம் வாயு மண்டலத்தில் carbon அளவை அதிகரிக்கும். 

எனவே நாம் ஒவ்வொரு கவளம் உண்ணும் போதும் மேலே சொன்னவற்றை நினைவில் கொள்வது நல்லது.

அடுத்து ethical farming பற்றி....அதாவது நம் விவசாய நடவடிக்கைகளால் எந்த உயிரினமும் பாதிக்கப் படக் கூடாது. விவசாயத்திற்கு கால்நடைகளை பயன்படுத்தினால் இயற்கை உரம் தயாரிக்க அது உதவும். அந்த கால்நடைகளின் பயன்படும் வருடங்கள் முடிந்ததும் அடிமாடாக்க கூடாது. இது ethical farming.

கன்றினை கொன்றுவிட்டு பொம்மை கன்று காட்டி பால் கறக்கிறார்கள்....மாடுகளை கொடுமை படுத்துகிறார்கள்...என்று சொல்லி பால் உணவுகளை தவிர்க்கிறார்கள் vegan உணவினை பின்பற்றுகிறவர்கள்.

Organic உணவை பிரபலப் படுத்துவது தன்னலம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. அதாவது நம் உடலுக்கு organic உணவு நல்லது. அதையும் தாண்டி சுற்றுச் சூழலுக்கும், அடுத்த தலைமுறையினரின் உணவு பாதுகாப்பிற்கும் நல்லது செய்யும், நாம் சாப்பிடும் organic உணவு. 

அந்த வகையில் இப்போது organic அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் பிரபலமாகி இருக்கின்றன. ஆனால் organic பூக்கள் கிடைப்பதில்லை. Organic அல்லாத பூக்கள் அதை சூடுவோருக்கு கெடுதல் செய்யாதுதான். ஆனால் மலர் விவசாய தொழிலாளர்களுக்கு அங்கு பயன் படுத்தப் படும் ரசாயனங்களால் பல வியாதிகள் வருகின்றன. Ethical farming அல்லது responsible consumptionஎன்ற அடிப்படையில் நாம் organic பூக்களை வரவேற்கலாம். 

நம் organic விற்பனையாளர்கள் அடுத்த காதலர் தினத்திற்குள் (Valentine's Day), organic பூக்களையும் விற்க துவங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போதே, organic முறையில் பூக்கள் பயிரிடும் சிலர் இருக்கிறார்கள். விற்பனை துவங்கினால் பயிரிடுவோர் அதிகரிப்பர்.

இன்னொரு விஷயம். Organic பூக்கள் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். 

Wednesday, 12 February 2014

சென்னையில் இயற்கை முறை வீட்டுத் தோட்ட பயிற்சி-Workshop on Organic Terrace Gardening


வீட்டுத் தோட்ட பயிற்சி, சிறுதானிய சமையல் பயிற்சி பற்றிய விவரம் அறிய இந்த பக்கத்திற்கு அவ்வப்போது வரவும்

இப்போது இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. பெருநகரங்களில் வசிப்போருக்கு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. கிடைத்தாலும் விலை அதிகம். காரணம்  காய்கறிகள், பழங்கள் வெகுதொலைவிலிருந்து கொண்டுவர வேண்டி இருப்பது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப் படுவது வீட்டுத் தோட்டம். வீட்டில் தோட்டம் அமைப்போர் கூட ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவது நாகரீகம் போல் ஆகிவிட்டது. காரணம் அறியாமை. வீட்டுத் தோட்டத்தில் பூச்சிகளை கட்டுப் படுத்துவது என்பது பலருக்கும் சவாலாகவே இருந்து வருகிறது. அதேபோல் மொட்டை மாடியில் தோட்டம் (Terrace Garden) அமைக்கும் போது கட்டிடம் தாங்கும் வகையில் தொட்டிகள் அமைப்பது, தண்ணீர் வசதி, கட்டிடம் பாதிக்காத வகையில் நீர் வடிகால் வசதி ஆகியவையும் பலருக்கு தெரியாத விஷயங்களே. இந்த பிரச்சினைகளுக்கு  சரியான தீர்வு முறையான பயிற்சி பெறுவதே. 

The Offshoot, Eco Alternatives, Ashvita Bistro இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து வீட்டுத் தோட்டம் பற்றிய பயிற்சியை (Workshop on Organic Terrace Gardening) மாதம் ஒருமுறை நடத்தி வருகிறார்கள். டிசம்பர், ஜனவரி மாத பயிற்சிகள் முடிந்து விட்டன. வீட்டுத் தோட்டத்திற்கான மண் தயாரிப்பு (cocopeat), செடிகள் பயிரிடுவது பற்றிய பயிற்சி முதல் மாதத்தில் வழங்கப் பட்டது. "இயற்கை முறை பயிர் தோட்டம் (organic garden) ஆரம்பித்து, தொடர்ந்து பயிரிடுவது எப்படி?" என்று  ஜனவரி மாத  பயிற்சியில் சொல்லிக் கொடுத்தார்கள். வீட்டுத் தோட்டத்தில் பூச்சி தொல்லையை இயற்கை வழியில் கட்டுப் படுத்துவது பற்றியும் கூறப் பட்டது. 

பிப்ரவரி மாத வீட்டுத் தோட்ட பயிற்சி இந்த வார சனிக் கிழமை அன்று (15-02-2014) நடக்கும். வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு, அறுவடை செய்வது பற்றி பயிற்சி தரப் போகிறார்கள்.

வீட்டுத் தோட்ட பயிற்சி நாள்: 15-02-2014

பயிற்சி நேரம்:                           மாலை  4-6


பயிற்சி தரப் படும் இடம்:     Ashvita Bistro Restaurent,

11, பாவா ரோடு, ஆழ்வார்பேட்டை, 

சென்னை-600 018.

பயிற்சி பெற விரும்புவோர் 9791088189 என்ற எண்ணுக்கு sms செய்யவும். 

பயிற்சி இலவசம்.



மார்ச் மாத வீட்டுத் தோட்ட பயிற்சி, 15-03-2014 சனிக் கிழமை மாலை 4-

6 நடைபெறும். மல்லிகை, துளசி, புதினா, கருவேப்பிலை, வெற்றிலை, 

லெமன் க்ராஸ், உள்ளிட்ட மருத்துவ பயன் உள்ள செடிகள் வளர்ப்பு 

பற்றிய பயிற்சி தரப் படும்.

 இடம்:     Ashvita Bistro Restaurent,11, பாவா ரோடு, ஆழ்வார்பேட்டை, 

சென்னை - 600 018.

வரும் மாதங்களில் நடைபெற இருக்கும் வீட்டுத் தோட்ட பயிற்சி பற்றிய 

விவரங்களை அந்தந்த மாதங்களில் இந்த பக்கத்தில் அல்லது Eco 

Alternatives facebook  பக்கத்தில் பெறலாம்.


Sunday, 9 February 2014

சென்னையில் ஆர்கானிக் கடைகள்


தியாகராய நகர் 
மேற்கு மாம்பலம் 
அசோக் நகர் 
நுங்கம்பாக்கம் 
மைலாப்பூர் 
அண்ணா சாலை 
அடையார் 
O.M.R. & E.C.R.
வேளச்சேரி 
கீழ்ப்பாக்கம் 
அண்ணா நகர் 
விருகம்பாக்கம் 
ஆழ்வார் திருநகர் 
போரூர் 
சாலிகிராமம் 
பல்லாவரம் 
பம்மல் 
கீழ்கட்டளை 
குரோம்பேட்டை 
சேத்துப்பட்டு 
பள்ளிக்கரணை 
நங்கநல்லூர் 

சென்னையில் ஆர்கானிக் உணவு வகைகள் விற்பனை கடைகள் எங்கெங்கு உள்ளன? சிறுதானியங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி கூற முடியுமா? என்று பலர் கேட்கிறார்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் ஆர்கானிக் உணவு பொருள்கள் கிடைக்குமா என்று அறிய பலர் விரும்புகிறார்கள். அவர்களுக்கு பதில் தரும் விதமாக சென்னையில் உள்ள ஆர்கானிக் உணவு பொருள் கடைகளை பட்டியல் இட்டுள்ளேன்.

அதற்குமுன் பொதுவாக ஆர்கானிக் கடைகளில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம். இயற்கை உரம் போட்டு பயிர் செய்த உணவு பொருள்கள் ஆர்கானிக் உணவுகள் என்று அழைக்கப் படுகின்றன. நஞ்சில்லா உணவுகள் என்றும் சொல்லலாம்.

ஆர்கானிக் உணவுகளை சோதித்து " இவை ஆர்கானிக் முறையில் விளைவிக்கப் பட்டவை" என்று தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. தரச் சான்றிதழ் பெற்றால்தான் தகுந்த விலை கிடைக்கும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

சென்னையில் கிடைக்கும் ஆர்கானிக் உணவு பொருள்கள் எல்லாம் தரச் சான்றிதழ் பெற்றவை அல்ல. சில கடைகளில் மொத்தமாக தானியங்களை வாங்கி repack செய்து விற்பார்கள். இவை எல்லாம் பெரும்பாலும் Organic சான்றிதழ் பெறாத பொருள்கள்.

எல்லோராலும் அறியப் பட்ட  சில Organic Brands பற்றி இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

1. Morarka Organics  இந்த நிறுவனம் downtoearthorganic என்ற sub-brand மூலம் அன்றாட சமையலுக்கு தேவையான ஆர்கானிக் உணவு பொருள்களை விற்பனை செய்கிறது.

         2. 24 mantra: சாதாரணமாக சமையலுக்கு தேவைப் படும் organic அரிசி, பருப்பு வகைகள், value added organic products கிடைக்கும். 

மேலே சொன்ன இரண்டு நிறுவனங்களும் மிகப் பெரிய நிறுவனங்கள். விலையும் சற்று அதிகம். இவர்கள் பெரும்பாலும் சிறுதானியங்கள் (ஒன்றிரண்டு தவிர) விற்பனை செய்வதில்லை.

3. timbaktu-organic-சிறுதானியங்கள் வாங்க மிகச் சிறந்த brand. விலையும் மிகக் குறைவு.



4. earth360-இதுவும் சிறுதானியங்கள் வாங்க சிறந்த நிறுவனம். சென்னையில் உள்ள நல்ல கீரை நிறுவனம் இவர்களின் தானியங்களைதான் விற்பனை செய்கிறார்கள்.



5. Pronature-சிறுதானியங்கள் தவிர மற்ற organic உணவு பொருள்களை விற்பனை செய்கிறார்கள்.

6. பாரம்பரியம், போஜனம்  - சிறுதானியம் உள்ளிட்ட பல organic பொருள்கள் கிடைக்கும்.

7. Organic tattva - Heritage Fresh Supermarketன் சில கிளைகளில் Organic tattva brand பொருள்கள் கிடைக்கின்றன. 

8. Proorganic - இந்த brand organic உணவு பொருள்கள் Heritage Fresh Supermarket, Spencers, Nilgiris ஆகிய கடைகளில் கிடைக்கின்றன.

இவை தவிரவும் பல சிறிய, பெரிய organic நிறுவனங்கள் உள்ளன. சென்னையில் கிடைக்கும் organic brands பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அதேபோல் அன்றாட சமையலுக்கு தேவையானவற்றை வழங்கும் நிறுவனங்கள் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். Organic ஊட்டச்சத்துக்கள் ( organic food supplements), Organic Tea, Coffee இதுபோன்ற பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நான் இங்கே குறிப்பிடவில்லை.

அடுத்ததாக சென்னையில் இணையத்தில் organic உணவு பொருள் விற்பனை நிலையம் (Online Organic Stores, e-stores).

 
 Vaer Organic - இணையத்தின் வாயிலாக மட்டுமே விற்பனை செய்கிறார்கள். Organic காய்கறிகள், பழங்களும் உண்டு. திங்கள் மட்டும் விடுமுறை. மொபைல்  (9444667070) மூலமாகவும் பொருள்களை order செய்யலாம்.  மொபைல் மூலம் order செய்யும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.  3-5p.m., 5-7p.m., 7-9p.m. ஆகிய மூன்றில் ஒரு நேரத்தை தெரிவு செய்து அந்த நேரத்தில் பொருள்களை பெறலாம். பொருள்களை வாங்கிகொண்டு பணத்தை கொடுக்கலாம்.

சென்னையில் மொபைல் (98400 32562 )மூலம் order செய்து organic உணவு பொருள்களை வீட்டில் பெற Dhanyam Organic Super Store தொடர்பு கொள்ளலாம்.

நல்ல கீரை நிறுவனம் Millets Sunday என்ற பெயரில் மாதம் ஒரு நாள் சிறுதானியங்கள் விற்பனை செய்கிறார்கள். சென்னை முழுவதிலும் பரவலாக 55 இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் சிறுதானிய விற்பனை செய்கிறார்கள். சிறுதானிய தேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

இது தவிர பல organic கடைகள் தங்கள் கடைக்கு அருகாமை பகுதிகளுக்கு (அதிகபட்சம் 4 கிலோ மீட்டர் வரை) door-delivery செய்கின்றன.

பெரும்பாலான Heritage Fresh Stores, Nilgiris Supermarkets ஆகியவற்றில் குறிப்பிட்ட சில organic உணவு பொருள்கள் கிடைக்கின்றன.

இனி பகுதி வாரியாக சென்னையில் organic கடைகள் :

தியாகராய நகர்



1. Dhanyam Organic SuperStore: 24, வடக்கு போக் ரோடு, தியாகராய நகர், சென்னை-600 017. வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை-காலை 7.30 முதல் இரவு  9 மணி வரை. ஞாயிறு-காலை 11.30 முதல் இரவு 9 மணி வரை. புதன்,  சனி  கிழமைகளில்   காலை  9 மணியிலிருந்து                                           organic  காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-28157654, 04426201030/9840032562



2. Jaycee greens: 11, New Giri road, T.Nagar, Chennai-600 017. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை. எல்லா நாட்களிலும் காலை 8.30 முதல் organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-43359271




3. Akalpita Green Store: 148/5, ஹபிபுல்லா சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை-காலை 11 முதல் மாலை 7 மணி வரை. வெள்ளி, சனி கிழமைகளில் மதியம் 12 மணி முதல் organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044 – 28345775, 9841027276.

4. F5 Store  (Organic), 27/12, Crescent park Street,Near Natesan Park, T.Nagar, Chennai-600 017. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை-காலை 9 முதல் இரவு 9 மணி வரை. வாரத்தில் மூன்று நாட்களுக்கு organic காய்கறிகள் கிடைக்கும்.
தொலைபேசி: 9952968888, 044-42660336. Dial for Organic Products-9677282828.

5. Organic Mudra : The Organic Store, 8, வைரம் காம்ப்ளக்ஸ்,சர் தியாகராயா சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை 9 முதல் இரவு 9 மணி வரை. Organic Mudra products மட்டும் கிடைக்கும்.
தொலைபேசி9952968888.

6. காதி கிராமோத்யோக் பவன், ரங்கநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. சிறுதானியங்கள், சிறுதானிய மாவுகள், கைக்குத்தல் அரிசி  கிடைக்கும். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை:-காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை.
தொலைபேசி: 044-24347426.

7.  Thayar Dairy, 31, ரங்கநாதன் தெரு,  தியாகராய நகர்,  
சென்னை - 600 017. ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எதிரில்.
சாமை, வரகு, குதிரைவாலி, தினை ஆகிய சிறுதானியங்கள் இங்கு கிடைக்கும். விலை: கிலோ ரூபாய் 100. தானியம் stock இருக்கிறதா என போன் செய்து  விட்டு செல்வது நல்லது. தொலைபேசி044-66585034. 
                                                                                                                                 மேலே செல்ல 

மேற்கு மாம்பலம் 


1. Ultramagic, 36/12, வேலு  தெரு, வல்லப கணபதி கோயில் எதிரில், மேற்கு மாம்பலம். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை-காலை 9.30 முதல் இரவு 8.30 மணி வரை, ஞாயிறு-காலை 10 முதல் மதியம் 1 மணி வரை. வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12 மணிக்கு organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-24716471, 9382022900.

2. Sri Chakkarai Om: 34/180, Lake View Road, West Mambalam. Landmark: Jubilee Road end. Near Rama Anjaneya Temple. Nera Maniraj Kalyana Mandapam. வேலை நேரம்:- திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 10 முதல் மதியம் 1.30 மணி வரை, மாலை 4 முதல் இரவு 9 மணி வரை. ஞாயிறு: காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை. Organic வெண்ணெய் கிடைக்கும்.

வெள்ளிக் கிழமைகளில் காலை 9 மணிக்கு organic காய்கறிகள், பால் கிடைக்கும். சனிக் கிழமைகளில் காலை 9 மணிக்கு organic காய்கறிகள் மட்டும் கிடைக்கும். அலைபேசி: 9840222436.
                                                                                                                        மேலே செல்ல 

அசோக் நகர் 

கிராமியம் நமது பாரம்பரியம், ரிலையன்ஸ்  டிஜிட்டல் பில்டிங், 1st அவின்யு, அசோக் நகர், சென்னை-600 083. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை; காலை 9 முதல் இரவு 9.30 மணி வரை. தினசரி காலையில்  organic காய்கறிகள் கிடைக்கும். Organic பழங்கள், கீரைகளும் கிடைக்கும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பால் கிடைக்கும். சிறுதானியங்கள் கிடைக்கும்.
மொபைல்: 9791166422.
                                                                                                மேலே செல்ல 

நுங்கம்பாக்கம் 


1. Nature's Nest, G 1, Gems Court, Khader nawaz Khan Road, Near Taj Hotel, Nungampaakkam, Chennai-600 034. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை:-காலை 10 முதல் இரவு 8.30 மணி வரை. காய்கறிகள் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும். திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மதியத்திற்குமேல் organic பால் கிடைக்கும்.

தொலைபேசி: 044-28330077, 044-66751056.

                                                                                                                                                                  மேலே செல்ல


மைலாப்பூர்  - சுற்றியுள்ள பகுதிகள் 

1. Organic Paradise, 100, V.M. Street, Mylapore, Chennai-600 004. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை:- காலை 9 முதல் இரவு 9 மணி வரை. செவ்வாய், சனிக் கிழமைகளில் காலையில் organic காய்கறிகள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-24980219, 9094425206/07

2. Organic Shandy (Formerly Sunday Shandy), 177, Luz Church Road, Mylapore. Next to Mctm school. Near Anjaneyar Temple.


தொலைபேசி: 044- 24991203, 9380691203. சனிக்கிழமைகளில் காலை 11.30 முதல் மாலை 7 மணி வரை organic சந்தை உண்டு. Organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும். ஞாயிறு விடுமுறை. திங்கள் முதல் வெள்ளி வரை  காலை 9 முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை organic மளிகை பொருள்கள், சிறுதானியங்கள் கிடைக்கும். புதன் காலை 9 மணிக்கும், சனி காலை 11 மணிக்கும் Organic பால் கிடைக்கும்.



3. மேத்தா ஜுவல்லரி - C.P. ராமசாமி சாலையில் உள்ள மேத்தா 
ஜுவல்லரியில்  ஒரு organic கடை இருக்கிறது. முகவரி: 43, C.P. ராமசாமி சாலை, ஆர்.ஏ. புரம். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை- காலை 10 முதல் மாலை 6 மணி வரை. ஞாயிறு விடுமுறை. பருப்புகள், அரிசி, தேன், நெய், வெல்லம் போன்றவை கிடைக்கும். எல்லாமே organic தான். சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் கிடையாது.
தொலைபேசி: 044-24662667, 24984707.



4. Kalpakshema, 35, கோபாலபுரம் முதல் தெரு, சென்னை-600 086. வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை-காலை 10 முதல் இரவு 8 மணி வரை. ஞாயிறு- காலை 11 முதல் இரவு 8 மணி வரை. புதன் கிழமைகளில் காலை 11 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும். சனிக் கிழமைகளில் காலை 11 மணிக்கு organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-28111355, 28117652.

5. காதி கிராமோத்யோக் பவன், 326, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-600 086. சிறுதானியங்கள், சிறுதானிய மாவு வகைகள், கைக்குத்தல் அரிசி  கிடைக்கும். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை:-காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை.
தொலைபேசி: 044-23455051, 28351707.


6. VSAP, பாரதி நகர் மெயின் ரோடு முதல் தெரு, மந்தைவெளிப்பாக்கம். மந்தைவெளி St.John's பள்ளியிலிருந்து இடது பக்கம் இரண்டாவது தெரு. 

தொலைபேசி: 9025536649. போன் செய்து விட்டு செல்லவும். குறிப்பிட்ட வேலை நேரம் கிடையாது.

7. Gormei Market, 6, C.I.T. Colony, 2nd main road, Mylapore, Chennai-600 004. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை:-காலை 8.30 முதல் இரவு 9 மணி வரை. சிறுதானியங்கள் கிடைக்கும். வாரத்திற்கு 3 நாட்கள் organic காய்கறிகள் கிடைக்கும். தினசரி காலை 10 மணிக்கு organic பால் கிடைக்கும்.
தொலைபேசி: 044-42172228.
                                                                                                       மேலே செல்ல 

அண்ணா சாலை 

காதி கிராமோத்யோக் பவன், 44, அண்ணா சாலை, சென்னை-600 002. The Hindu அலுவலகம் அருகில். சிறுதானியங்கள், சிறுதானிய மாவுகள், கைக்குத்தல் அரிசி  கிடைக்கும். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை:-காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை.
தொலைபேசி: 044-28584312, 28584313.


                                                                                                        மேலே செல்ல 

அடையார் 

1. அன்னை ஆர்கானிக்ஸ், 8, 1st அவென்யு, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-600 020. கார்ப்பரேஷன் வங்கிக்கு எதிர் கடை. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 6.30 முதல் இரவு 9.30 மணி வரை.

செவ்வாய், சனிக் கிழமைகளில் காலை 10.30 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும்.
தொலைபேசி: 9443206790.

2. Enfield Agrobase, 3, முதல் குறுக்கு தெரு, கஸ்தூர்பாய் நகர், அடையார். வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 9 முதல் மாலை 6 மணி வரை. 

செவ்வாய் கிழமைகளில் காலை 11.30 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும். மற்ற நாட்களில் கீரைகள்                                              கிடைக்கும்.
தொலைபேசி: 044-24425664, 24420605.

3. Econut, E 34, முதல் மாடி, இரண்டாவது அவென்யு, பெசன்ட் நகர், சென்னை-600090. வேளாங்கண்ணி சர்ச் பேருந்து நிலையம் அருகில். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை-காலை 10 முதல் 8 மணி வரை. ஞாயிறு விடுமுறை.  புதன், சனி கிழமைகளில் காலை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலையில் organic காய்கறிகள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-24919592(வீடு), 044-24460699(கடை), மொபைல்:  9444046299
                                           facebook

4. Organic depot, 49, கற்பகம் கார்டன்ஸ் முதல் மெயின் ரோடு, அடையார், சென்னை- – 600 020. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 11 முதல் 7.30 மணி வரை. காய்கறிகள் கிடையாது. நான்கு கிலோ மீட்டர் வரை இலவச டோர் டெலிவரி.
தொலைபேசி:  (044) 64525500 / (+91) 9841424349 / (+91) 9500051619.

5. Vidhai Organic Store, 1, Sruthi Apartments, Gandhi Nagar, 1st Cross Street, Adyar, Chennai-600 020. வேலை நேரம்: காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை. ஞாயிறு விடுமுறை. காய்கறிகள் கிடையாது.
மொபைல்: 9840698236.

6. Gormei Market, 13, 1st Crescent Park Road, Gandhi Nagar, Adyar, Chennai-600 020. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை:-காலை 10 முதல் இரவு 10 மணி வரை. காய்கறிகள், பால் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-42657733.

7. காதி கிராமோத்யோக் பவன், 16, T.N.H.B. Shopping Complex, இந்திரா நகர், L.B. சாலை, அடையார், சென்னை-600 020. சிறுதானியங்கள் கிடைக்கும். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை:-காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை.
தொலைபேசி: 044-45504014.
                                                                                                      மேலே செல்ல 

O.M.R. &  E.C.R.

1. Terra Earthfood, 10 & 11, சிங்கார வேலன் சாலை, சின்ன நீலாங்கரை. Brown Tree Supermarket அருகில். வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7 முதல் இரவு 9 மணி வரை. Organic காய்கறிகள், பழங்கள் தினசரி கிடைக்கும். Terra Brand organic தின்பண்டங்கள், அனைத்து organic உணவு பொருள்கள், சிறுதானியங்கள் கிடைக்கும்.
மொபைல்: 9940638931.

2. ஆர்கானிக் பசுமையகம், 1/19, ECR ரோடு.(Kottivakkam main road). தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு அடுத்த கட்டிடம். மெகா மார்ட் அருகில். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை: காலை 10 முதல் இரவு 9.30 மணி வரை. ஞாயிறு: காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை. புதன், சனி கிழமைகளில் காலை 11 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-43357031, 9840299080, 9626471727.

3. Avanti Wholesome Grocery, 32, ஜெகநாதன் தெரு, கொட்டிவாக்கம், சென்னை-600 041. RTO அலுவலகம் பஸ் ஸ்டாப். EB Office, சாய்பாபா கோயில் அருகில். நெல்லை நாடார் பள்ளி பின்புறம். வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 9 முதல் மாலை  6 மணி வரை. புதன் கிழமைகளில் காலை 11 மணிக்கு organicகாய்கறிகளும், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு organic காய்கறிகள், பழங்களும் கிடைக்கும்.
தொலைபேசி: 044-24512038, 9962574590.

4. Ever Green Organic Bazzar, (Poison free food) 1/123, Rajiv Gandhi Salai (OMR), padur-603 103. Gem Apartments எதிரில். செவ்வாய் விடுமுறை. மற்ற நாட்களில்: காலை 9 முதல் இரவு 8 மணி வரை. வெள்ளிகிழமைகளில் மாலையிலும், சனிக்கிழமைகளில் காலையிலும் organic காய்கறிகள் கிடைக்கும்.
மொபைல்: 9443346369.
e-mail: tedetrust@rediffmail.com

5. Restore, 150/3, E.C.R. Road, Kottivaakkam, Chennai-600 041. Nera Hyundai Showroom. ஞாயிறு விடுமுறை. வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை: காலை 10 முதல் இரவு 8 மணி வரை. திங்கள், வியாழன், சனிக் கிழமைகளில் காலை 11.30 மணிக்கு organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-24921093.
                                                                                      மேலே செல்ல 

வேளச்சேரி 

1. Verdure Organic, பிளாட் எண். 3, தரை தளம், சபரிஷ் அபார்ட்மென்ட்ஸ், வரதராஜபுறம், வேளச்சேரி. விஜயநகர் பேருந்து நிலையம் அருகில். வேலை நேரம்: காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை. மீண்டும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை. ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை. செவ்வாய், சனி கிழமைகளில் காலை 11 மணிக்கு organic காய்கறிகள், பழங்கள், பால் கிடைக்கும். சிறுதானியங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-66581727.


2. Pasumai Organic & Naturals, 26/10, Dhandeeswaram main Road, Velachery, Chennai-600 042. Near Latha Supermarket. Opposite to Casual Moods Textiles. வேலை நேரம்: காலை 10.30 முதல் இரவு 8.30 மணிவரை. ஞாயிறு: காலை 10 முதல் மதியம் 1 மணி வரை. பால்கிடையாது.  வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கும், சனிக்கிழமைகளில் காலையிலும் organic காய்கறிகள் கிடைக்கும். காய்கறிகள் தேவைக்கு போனில் சொல்லி விட்டு செல்லவும்.சிறுதானியங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-66758067.
                                                                                                       மேலே செல்ல 


கீழ்ப்பாக்கம் 

கோர்மெய் (Gormei) மார்க்கெட், 20/8, ராஜரத்தினம் தெரு, கீழ்பாக்கம், சென்னை-ஈகா தியேட்டர் அருகில். வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை:-காலை 9 முதல் இரவு 9 மணி வரை. திங்கள் தவிர மற்ற நாட்களில் organic காய்கறிகள் காலை 8.30 மணி முதல் கிடைக்கும். Organic பால் தினசரி காலை 8.30 மணிக்கு கிடைக்கும்.சிறுதானியங்கள் கிடைக்கும். 
தொலைபேசி: 044-43807222.
                                                                                                       மேலே செல்ல 

அண்ணா நகர் 

1. Organic Paradise, No.1, Dr. Ambedkar Street, Pulla Avenue, Shenoy Nagar, Chennai-600 030. Opposite to Zaithoon Restaurant. திருவிக பூங்கா அருகில். அண்ணா நகர் நாயுடு ஹால் அருகில். வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 9 முதல் இரவு 9 மணி வரை. செவ்வாய், சனி கிழமைகளில் காலை 9 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும். 3 கிலோ மீட்டர் வரை இலவச டோர் டெலிவரி.
தொலைபேசி: 044-2664 0233, 91765 55233 & 91760 07233.



2. Dhanyam organic superstore, AC 128, சாந்தி காலனி பிரதான சாலை, 4 வது அவென்யு, ஸ்ரீ மித்தாய் எதிர்புறம், அண்ணா நகர். வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 7.30 முதல் இரவு 9 மணி வரை. புதன், சனிக் கிழமைகளில் காலையில் organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தொலைபேசி: 044-26201030.



3. Organic Green Store, 30/2, I Block,1st Avenue,Anna Nagar East. Near Chinthamani signal. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை:காலை 9.30 முதல் இரவு 8.30 மணி வரை. புதன், வெள்ளி, சனிக் கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும்.தொலைபேசி: 044-26221308.

         4. Vayal organic Store, near Mogappair West Bus stop and opp. to Amudha matriculation school. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 10 முதல் இரவு 9 மணி வரை. சனிக் கிழமைகளில் காலை 11 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும் .
     தொலைபேசி: 044-26533806.

        5. குறிஞ்சி ஆர்கானிக்ஸ், 10/1011, E.B. ரோடு, முகப்பேர் (கிழக்கு), சென்னை-600 037. Grandeur Apartments எதிரில். மசூதி சாலை பேருந்து நிறுத்தம் அருகில். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை: காலை 10 முதல் மதியம் 1 மணி வரை. மீண்டும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை. வெள்ளிக் கிழமைகளில் organic காய்கறிகள கிடைக்கும். வேண்டுவோர் புதன் கிழமையே order கொடுத்து விட வேண்டும். சிறுதானியங்கள் கிடைக்கும்.
     மொபைல்: 9884667760.

       6. Eat Well Organics, 39, 2nd Block, Dr. J.J. Nagar East, Mogappair East, Chennai-600 037. ராஜ் நர்சிங் ஹோம் எதிரில். வேலை நேரம்:  திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 10 முதல் மதியம் 1.30  மணி வரை. மீண்டும் மாலை 4 முதல் இரவு 9.30 மணி வரை. காய்கறிகள், பால் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும். 
     தொலைபேசி:044-43550873
     மொபைல்: 9840960872.
                                                                                                             மேலே செல்ல 
          
விருகம்பாக்கம் 

         1. Greenica Organic bazaar, 4/79, இளங்கோ நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை; காலை 9 முதல் இரவு 7 மணி வரை. ஞாயிறு: காலை 9 முதல் பிற்பகல் 4 மணி வரை. உணவு இடைவேளை: பிற்பகல்  2 முதல் 3 மணி வரை. காய்கறிகள் கிடையாது.
     தொலைபேசி: 9444035770.

                                                                 மேலே செல்ல 
ஆழ்வார் திருநகர் 
    
         1.  Aditya’s organic & naturals, 130 D, காந்தி சாலை, ஆழ்வார் திருநகர் , சென்னை-600 087. Near Guha Textiles & Mega Mart. வெள்ளி, சனிக் கிழமைகளில் organic காய்கறிகள் கிடைக்கும்.
        மொபைல்: 9282405360.



          2. Eco Health Organic Store, 262, காமராஜ் சாலை, ஆழ்வார் திருநகர். வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை 11 முதல் இரவு 9 மணி வரை. ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் மட்டும் கடை உண்டு. வெள்ளிக் கிழமைகளில் மாலையிலும் சனிக் கிழமைகளில் காலையிலும் organic காய்கறிகள் கிடைக்கும். பால் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும்.
                              அலைபேசி:        9840492639.
                                                                                          மேலே செல்ல 
      
போரூர் 

        1. Ecocare, 3, ராமகிருஷ்ணா நகர், 3 வது அவென்யு, போரூர், சென்னை-600 106.  வேலை நேரம்: காலை 9 முதல் இரவு 7 மணி வரை. ஞாயிறு விடுமுறை. காய்கறிகள், சிறுதானியங்கள் கிடையாது.


        தொலைபேசி: 044-43800612,9444146807.



    2. ஆரோக்ய சந்தை , பிளாட் எண்: 7, முகலிவாக்கம் பிரதான சாலை, மதனந்தபுரம், முகலிவாக்கம், போரூர், சென்னை-600 106. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை:- காலை 7 முதல் இரவு 9 மணி வரை.
    அறுசுவை பாரம்பரிய சிறுதானிய இயற்கை ஆரோக்கிய உணவகம் உள்ளது.வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.
   இயற்கை மருத்துவம் மற்றும் யோகாசன பயிற்சியும் உண்டு. சிறுதானிய சமையல் பயிற்சியும் உண்டு. தொலைபேசி: 044 - 24825336,044  - 64611100, 9710999333,9789999333,9551233444.



     3. தூய்மை ஆர்கானிக் மார்க்கட், ஜெயபாரதி நகர், போரூர், சென்னை-600 106. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 8 முதல் இரவு 9 மணி வரை. ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 முதல் மதியம் 1 மணி வரை. மீண்டும் மாலை 6 முதல் இரவு 8.30 மணி வரை. காய்கறிகள் கிடையாது. பால் தினமும் காலையில் கிடைக்கும். சிறுதானியங்கள் கிடைக்கும்.
     தொலைபேசி: 044-24827429.

                                                                     மேலே செல்ல              
  சாலிகிராமம் 

              1. Organic Bay, Salma Apartments backside, Abusali Street, Saligramam, Chennai-600 093. வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை: காலை 9 முதல் இரவு 8.30 மணி வரை. இடைவேளை: 2 - 4.  ஞாயிறு விடுமுறை.காய்கறிகள், பழங்கள் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும்.
   தொலைபேசி: 044-66752675.

         2. 37 B, sastri 1st Cross Street, Nehru Nagar, Saligramam, Chennai-600 093. காய்கறிகள், பழங்கள் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும். சனிக் கிழமைகளில் காலை நேரத்தில்  கீரை கிடைக்கும். முன்பதிவு அவசியம். கடை கிடையாது. எனவே வேலை நாட்களில் மாலையிலும், சனி, ஞாயிறுகளில் பகலிலும் போன் செய்து விட்டு செல்ல வேண்டும். 
     மொபைல்: 9791022791.
                                                                                     மேலே செல்ல 

பல்லாவரம் 


       1. Organic ways,ப்ளாக் 18A, ஜெயின்ஸ் கிரீன் ஏக்கர்ஸ், பஜார் ரோடு, ஜாமீன் பல்லாவரம்,  பல்லாவரம், சென்னை-600 043. வேலை நேரம்: காலை 10-1.30. மாலை 5.30-8.30. ஞாயிறு விடுமுறை. திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் காலை 9.30 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும்.
    தொலைபேசி: 044-22660097, 044-22663022.
    மொபைல்: 9566047888, 9962576848.

                                                                         மேலே செல்ல 
                
பம்மல்

     கணேஷ் சூப்பர் மார்க்கட், திருநீர்மலை பிரதான சாலை, மூவேந்தர் நகர், பம்மல்,சென்னை-600 075. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 9முதல் இரவு 10 மணி வரை. வெள்ளிக் கிழமைகளில் organic காய்கறிகள் கிடைக்கும். பால் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும். Organic அல்லாத பொருள்களும் கிடைக்கும்.
    தொலைபேசி: 044-22485775.
                                                                                                         மேலே செல்ல 

        கீழ்கட்டளை 

      Organic Abode, 100, மேடவாக்கம் பிரதான சாலை, கீழ்கட்டளை. கீழ்கட்டளை பேருந்து நிலையம் அருகில். noodle kings மாடியில். திங்கள் விடுமுறை. வேலை நேரம்: காலை 9.30 முதல் இரவு 8.45 மணி வரை. வெள்ளிக் கிழமைகளில் மாலையில்  organic காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
     மொபைல்: 9840399334. 
                                                                                                         மேலே செல்ல 

              குரோம்பேட்டை 

     பயோ ஆர்கானிக் ( Bio Organic ), 96, ராஜேந்திர பிரசாத் சாலை, குரோம்பேட்டை, சென்னை-600 044. நீல்கிரிஸ் எதிர்புறம். 
    வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை; காலை 8.30 முதல் இரவு 10 மணி வரை. வெள்ளிக் கிழமைகளில் காலை 11 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும்.பால் கிடையாது. சிறுதானியங்கள் கிடைக்கும்.   
    தொலைபேசி: 044-66583043, 7812099366. 
                                                                  மேலே செல்ல 

      சேத்துப் பட்டு 

         
   Farm Shop, 3, 13th Avenue, Harrington Road, Chetpet, Chennai-600 031. Chinmaya Heritage Centre Auditorium அருகில்.வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை: காலை 10.30 முதல் இரவு 8 வரை. ஞாயிற்றுக் கிழமைகளில்: காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை. மீண்டும் மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை. செவ்வாய், புதன், வெள்ளிக் கிழமைகளில் காலை 10.30 மணிக்கு organic காய்கறிகள் கிடைக்கும். வெள்ளிக் கிழமைகளில் organic பழங்கள் கிடைக்கும். திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு organic பால் கிடைக்கும். அனைத்து சிறுதானியங்களும் கிடைக்கும்.
     தொலைபேசி: 044-28360491, 9094794203.

                                                                             மேலே செல்ல    

  பள்ளிக்கரணை 

     
    Imayam Organics, 1 A, பாப்பம்மாள் காம்ப்ளக்ஸ், நாராயணபுரம் முதல்    பிரதான சாலை, I.I.T. காலனி, பள்ளிக்கரணை, சென்னை-600 100. வேலை நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை; காலை 9.30 முதல் இரவு 10 மணி வரை. உணவு இடைவேளை: பிற்பகல்  1.30 முதல் 2.30 மணி வரை. வெள்ளிக்கிழமைகளில் மாலையில் organic காய்கறிகள் கிடைக்கும். எல்லா நாட்களிலும் காலையில் organic கீரைகள் கிடைக்கும். சிறுதானியங்கள்கிடைக்கும்.
     மொபைல்: 8754476750. 
                                                                 மேலே செல்ல              

 நங்கநல்லூர் 

        சிதம்பரம் ஸ்டோர்ஸ், 4 வது பிரதான சாலை, நங்கநல்லூர்.தொலைபேசி: 044-22245550. தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்கள் மட்டும் கிடைக்கும். விலை: கிலோ-ரூபாய் 110.
                                                                                                                                      மேலே செல்ல 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...