Thursday 13 February 2014

இயற்கை உணவு-சில சிந்தனைகள்

இயற்கை உணவுக்கும் இந்த மலர்களுக்கும் என்ன தொடர்பு? விடை கடைசி பாராவில்... 

Organic food என்பதனை இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட உணவு என்றும் சொல்லலாம். உயிர்ப்புள்ள உணவு என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் 'organic' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'உயிருள்ள' என்பதுதான். அதேபோல் organic உணவு பற்றி பேசும்போது மேலும் இரண்டு வார்த்தைகளை பற்றி அறிந்திருத்தல் அவசியம். Sustainable farming (தொடரக் கூடிய விவசாயம்), ethical farming (நெறிமுறைக்கு உட்பட்ட விவசாயம்). 

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், இயற்கை உரம், இயற்கை பூச்சிக் கொல்லிகள் இடும் விவசாயம் மட்டுமே organic விவசாயம் அல்ல என்பதை புரிந்து கொல்வதற்காகதான்.

மண்ணை மாசு படுத்தாமல், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து உணவு தரக் கூடிய வகையில் இந்த பூமியை பயன்படுத்துவதும் organic விவசாயியின் கடமை.

அதாவது அரிய இயற்கை வளமான தண்ணீரை தேவைக்கு மட்டும் அளவாக பயன்படுத்துவதும் organic விவசாயியின் பொறுப்பு. அதுமட்டுமல்ல. வெகு தொலைவில் இருந்து கொண்டு வரப் படும் உணவு பொருளை உண்பதுகூட இயற்கைக்கு எதிரான செயலே. அவ்வாறு உணவு பொருளை தொலை தூரத்தில் இருந்து கொண்டு வர பயன்படும் எரிபொருள் (petrol, diesel) அரிய இயற்கை வளமாகும். அவ்வாறு கொண்டு வர பயன்படும் வாகன புகை நம் வாயு மண்டலத்தில் carbon அளவை அதிகரிக்கும். 

எனவே நாம் ஒவ்வொரு கவளம் உண்ணும் போதும் மேலே சொன்னவற்றை நினைவில் கொள்வது நல்லது.

அடுத்து ethical farming பற்றி....அதாவது நம் விவசாய நடவடிக்கைகளால் எந்த உயிரினமும் பாதிக்கப் படக் கூடாது. விவசாயத்திற்கு கால்நடைகளை பயன்படுத்தினால் இயற்கை உரம் தயாரிக்க அது உதவும். அந்த கால்நடைகளின் பயன்படும் வருடங்கள் முடிந்ததும் அடிமாடாக்க கூடாது. இது ethical farming.

கன்றினை கொன்றுவிட்டு பொம்மை கன்று காட்டி பால் கறக்கிறார்கள்....மாடுகளை கொடுமை படுத்துகிறார்கள்...என்று சொல்லி பால் உணவுகளை தவிர்க்கிறார்கள் vegan உணவினை பின்பற்றுகிறவர்கள்.

Organic உணவை பிரபலப் படுத்துவது தன்னலம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. அதாவது நம் உடலுக்கு organic உணவு நல்லது. அதையும் தாண்டி சுற்றுச் சூழலுக்கும், அடுத்த தலைமுறையினரின் உணவு பாதுகாப்பிற்கும் நல்லது செய்யும், நாம் சாப்பிடும் organic உணவு. 

அந்த வகையில் இப்போது organic அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் பிரபலமாகி இருக்கின்றன. ஆனால் organic பூக்கள் கிடைப்பதில்லை. Organic அல்லாத பூக்கள் அதை சூடுவோருக்கு கெடுதல் செய்யாதுதான். ஆனால் மலர் விவசாய தொழிலாளர்களுக்கு அங்கு பயன் படுத்தப் படும் ரசாயனங்களால் பல வியாதிகள் வருகின்றன. Ethical farming அல்லது responsible consumptionஎன்ற அடிப்படையில் நாம் organic பூக்களை வரவேற்கலாம். 

நம் organic விற்பனையாளர்கள் அடுத்த காதலர் தினத்திற்குள் (Valentine's Day), organic பூக்களையும் விற்க துவங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போதே, organic முறையில் பூக்கள் பயிரிடும் சிலர் இருக்கிறார்கள். விற்பனை துவங்கினால் பயிரிடுவோர் அதிகரிப்பர்.

இன்னொரு விஷயம். Organic பூக்கள் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...