Monday, 24 February 2014

சென்னையில் சில ஆர்கானிக் நிகழ்வுகள்


ஆர்கானிக் உணவு பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை....


சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள CP Art Centreல் பிப்ரவரி 27 வியாழன் முதல் மார்ச் 1 சனிக் கிழமை வரை (27-02-2014-01-03-2014), ஆர்கானிக் உணவு பொருள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெற இருக்கிறது. சீர்காழி இயற்கை விவசாயிகள் சங்கம் (Sirkazhi Organic Farmers Association-SOFA) இந்த கண்காட்சியை நடத்துகிறது.

ஆர்கானிக் அரிசி வகைகள், அவல், அப்பளம், இயற்கை உரங்கள், விதைகள் ஆகியவை கிடைக்கும்.

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. சீர்காழி இயற்கை விவசாயிகள் சங்கம் என்பது, விவசாயிகள், சுய உதவி குழுக்கள் சேர்ந்து நடத்தும் ஆர்கானிக் உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை அமைப்பாகும். 

சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் உணவு பொருள்களை (certified organic food products) இவர்கள் தயாரிக்கிறார்கள். இவர்களின் முக்கிய விளைபொருள் ஆர்கானிக் அரிசியாகும்.

இந்த அமைப்பில் இணைந்துள்ள சுய உதவி குழு பெண்கள் ஆர்கானிக் அரிசி மாவு, ஆர்கானிக் அப்பளம், ஆர்கானிக் புட்டு மாவு போன்ற பொருள்களை தயாரிக்கிறார்கள். Centre for Indian Knowledge Systems (CIKS) என்ற அமைப்பு இவர்களுக்கு உதவி வருகிறது. NABARD வங்கியின் கடன் உதவியுடன் இவர்களது ஆர்கானிக் முயற்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆர்கானிக் நெல்விதை விற்பனை இவர்களின் சிறப்பான முயற்சிகளில் ஒன்று.

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் அல்லாது சென்னை, சேலம், கோயமுத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதிகளில் இவர்களது பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.


வீட்டு தோட்டக் கலை பயிற்சி 

குரோம்பேட்டையில் உள்ள பயோ ஆர்கானிக் (Bio Organic) இயற்கை உணவு பொருள்கள் விற்பனை கடை இந்த ஒருநாள் பயிற்சியை வரும் மார்ச் 1 சனிக்கிழமை ( 01-03-2014) அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்துகிறது.

இயற்கை உரம், மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய பொருள்கள், பாரம்பரிய காய்கனிகள், விதைகள், சிறுதானிய உணவு ஆகியவை பற்றிய பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி கட்டணம் இல்லை.

குரோம்பேட்டை ராகவா நகரில் உள்ள BBR நலசங்கத்தில் இந்த பயிற்சி நடைபெறும். தொடர்புக்கு-78120 99366.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...