பரங்கி அடை செய்ய....... தேவையான பொருள்கள்
ப ரங்கி துண்டு - 1 கப்
( பொடியாக நறுக்கியது )
பு ழுங்கல் அரிசி - 1 கப்
ப ச்சை அரிசி - ஒரு பிடி
து வரம் பருப்பு - 1/2 கப்
பா சி பருப்பு - 1/4 கப்
நல்லெண்ணெய் - அடை வார்க்க
பெருங்காயம் - சிறிது
வர மிளகாய் - 10
உப்பு - தேவைக்கு
அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஊற வைக்கவும். வற்றல் மிளகாய், கட்டி பெருங்காயம் இரண்டையும் தனித் தனியாக ஊற வைக்கவும். மூன்று மணி நேரம் ஊற வேண்டும். நன்கு ஊறிய மிளகாய்களோடு, ஊறிய அரிசி, பருப்பு கலவை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, மைய அரைக்க வேண்டும். அரிசியோடு சேர்த்து அரைத்தால் மிளகாய் நன்கு மசியும். மிளகாய் நன்கு மசிந்தால்தான் அடை சுவையாக இருக்கும். மசிந்த மிளகாய் கலவை மேல், பெருங்காய கரைசல், ஊறிய அரிசி பருப்புகள் இவற்றை போட்டு கொர கொரப்பாக அரைக்க வேண்டும். அளவாக தண்ணீர் விட்டு அரைத்தால் மாவு கொர கொரப்பாக வரும்.
நறுக்கிய பரங்கி துண்டுகளை அடை மாவில் சேர்த்து, நன்கு கலக்கவும்.
பரங்கி அடை மாவு இப்போது தயார்.
அடை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி துடுப்பால் கல் முழுவதும தேய்த்து விடவும். எண்ணெய் சூடானதும் இரண்டு கரண்டி பரங்கி அடை மாவை ஊற்றி, கரண்டியால் லேசாக அழுத்தம் தரவும்.
அடையை சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வேக வைக்கவும்.
ஒரு தட்டை போட்டு மூடவும். அப்போது தான் அடை நன்கு வேகும்.
பரங்கி அடை ஒரு புறம் நன்கு வெந்ததும் திருப்பி போடவும்.
அடையின் மறுபுறமும் நன்கு வேக வேண்டும்.
பரங்கி காயில் நார்ச் சத்து (Fibre) அதிகம். அடை, பருப்புகள் அதிகமாகவும் அரிசியை குறைவாகவும் கொண்டு தயாரிக்கப் படும் உணவு. மெதுவாகத் தான் ஜீரணமாகும். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பரங்கிக் காய் அடை நல்ல உணவு (Good food for weight reduction ). பட்டினி கிடந்தது உடல் எடையை குறைப்பதை விட எளிதாக பரங்கிக் காய் அடை போன்ற உணவுகளை சாப்பிட்டு எடையை குறைக்கலாம்.
ஒரு தட்டை போட்டு மூடவும். அப்போது தான் அடை நன்கு வேகும்.
பரங்கி அடை ஒரு புறம் நன்கு வெந்ததும் திருப்பி போடவும்.
அடையின் மறுபுறமும் நன்கு வேக வேண்டும்.
பரங்கிக்காய் அடை தயார் |
No comments:
Post a Comment