Wednesday, 16 July 2014

ஆடிப் பால்

ஆடிப் பால்  








முற்றிய தேங்காய் - 1
ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 கப் 
வெல்லம்







"தேங்காய் பால் பிழிவது எப்படி?" என்று தனியாக கொடுத்துள்ளேன்.

மூன்று முறை பிழிந்த தேங்காய் பால்
ஒன்றாக கலந்து.....




முற்றின தேங்காயை துருவிக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து, 2 டம்ப்ளர் தண்ணீர் விட்டு, மிக்சியில் போட்டு, நன்கு அரைக்கவும். அரைத்த தேங்காயை வடிகட்டியில் போட்டு, நன்கு பிழியவும். பின் மீண்டும் தேங்காயை மிக்சியில் போட்டு, 1 டம்ப்ளர் நீர் விட்டு, அரைத்து, மேலே சொன்னது போல் பால் பிழியவும். 


இவ்வாறு மூன்று முறை பிழிந்தவுடன், மூன்று தர தேங்காய் பாலையும் ஒன்றாக சேர்த்து,அடுப்பில் வைத்து, வெல்லம் சேர்த்து, அடுப்பை simல் வைத்து கிளறவும். லேசாக நுரைத்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும். 


சிலர் அரை ஸ்பூன் அரிசியை ஊறவைத்து, தேங்காயுடன் சேர்த்து அரைப்பதுண்டு. பால் திக்காக இருக்கும். ஆனால் taste கொஞ்சம் மட்டம்தான்.
 அடுப்பில் வைத்து,
சூடேறியதும்.....

சிலர் வெல்லத்திற்கு பதில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பார்கள். ஆனால் வெல்லத்தின் சுவையும், ஆரோக்கியமும் சர்க்கரையில் வராது.

வெல்லம் சேர்த்து...........







ஆடி அழைத்து வரும் என்பது நமது நம்பிக்கை. பண்டிகை சீசனின் முதல் பண்டிகை ஆடி 1. ஆடி பதினெட்டு, ஆவணி அவிட்டம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை  என்று ஆடி முதல் நாள் பண்டிகையை தொடர்ந்து பண்டிகைகள் வரிசை கட்டி வரும். 

அடுப்பை simல் வைத்து.....
கிளறி.......








ஆடி முதல் நாளில் வடை, அப்பளம், மோர்குழம்பு, பச்சடி என்று அமர்க்களமான விருந்து சாப்பாடு செய்வார்கள். பாயசத்திற்கு பதில் ஆடிப் பால் செய்வார்கள். 

திருமணமான முதல் வருடம் வரும் ஆடி முதல் நாளில் புது மண தம்பதியினரை பெண் வீட்டிற்கு அழைத்து, விருந்து வைத்து, ஆடிப் பாலை வெள்ளி டம்ப்ளரில் தருவார்கள். 

லேசாக நுரைத்தவுடன் அடுப்பை அணைக்கவும். 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...