தேங்காய் பால் |
ஒரு தேங்காயும், இரண்டு டம்ப்ளர் தண்ணீரும் எடுத்துக் கொள்ளவும். தேங்காயை உடைத்து, துருவிக் கொள்ளவும்.
துருவிய தேங்காயை மிக்சியில் போட்டு லேசாக சுற்றவும்.
தேங்காய் துருவல் ஓரளவு மசிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு சுற்றவும். இரண்டு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து சுற்றியபின், மசிந்த கலவையை எடுத்து வடிகட்டவும். ஒருமூடி தேங்காய் துருவலுக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீர் என்ற கணக்கில் இரண்டு டம்ப்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இது முதல் தரமான கெட்டி தேங்காய் பால்.
வடிகட்டியபின் மிஞ்சும் தேங்காய் துருவல் சக்கையுடன் மீண்டும் ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து, மிக்சியில் போட்டு நன்கு சுற்றவும். மசிந்தவுடன் வடிகட்டவும். இது இரண்டாம் தர தேங்காய் பால்.
திரும்பவும் மிஞ்சும் தேங்காய் துருவல் சக்கையுடன் இன்னொரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து, மிக்சியில் சுற்றி வடிகட்டவும். இது மூன்றாம் தர தேங்காய் பால்.
வடிகட்ட வேண்டிய தேங்காய் பால் (வலது) |
முதல் தர தேங்காய் பால் ரெடி |
முதல்தர தேங்காய் பால் மட்டுமே படங்களில் காட்டப் பட்டுள்ளது.
தேங்காய் அதிகம் விளையும் கேரளப் பகுதிகளில் சமையலில் தேங்காய் பால் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக அட பிரதமன், கடலை பருப்பு பிரதமன், பாசிபருப்பு பாயசம், கேரளா ஸ்டைல் stew ஆகியவற்றில் தேங்காய் பால் பயன்படுகிறது. அட பிரதமன் போன்ற கேரளா ஸ்டைல் பாயசங்கள் செய்ய தேங்காய் பால் பிழியும் போது, முதல் பால் எடுக்க மிகக் குறைவான தண்ணீரே சேர்ப்பார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் பால் எடுக்க சற்று அதிகமான தண்ணீர் சேர்க்க வேண்டும்.
பால் பணியாரம், பால் கொழுக்கட்டை, கூட்டு, குருமா ஆகியவை செய்யவும் தேங்காய் பால் பயன்படுகிறது .
ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இனிப்பு சேர்த்த தேங்காய் பால் சிறந்த side dish ஆகிறது.
தேங்காய் பால் சாதம் செய்வதுண்டு.
தேங்காய் பாலில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து, ஆடி முதல் நாளில் ஆடிப் பால் செய்வார்கள்.

வெந்தய தோசையும்...வெல்லம் சேர்த்த தேங்காய் பாலும் |
ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இனிப்பு சேர்த்த தேங்காய் பால் சிறந்த side dish ஆகிறது.
தேங்காய் பால் சாதம் செய்வதுண்டு.
தேங்காய் பாலில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து, ஆடி முதல் நாளில் ஆடிப் பால் செய்வார்கள்.
No comments:
Post a Comment