கொத்தமல்லி கூட்டு |
தேவையான பொருள்கள்
பாசி பருப்பு - 1/4 கப்
சாம்பார் பொடி - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - துளி
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம் - தாளிக்க
உப்பு - தேவைக்கு
பாசி பருப்புக்கு பதில் துவரம் பருப்பு சேர்த்தும் செய்யலாம்.
காரம் விரும்புவோர் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.
விரும்பினால் தேங்காய் துருவல், சீரகம் அரைத்து சேர்க்கலாம்.
கொத்தமல்லி தழை உடலுக்கு குளுமை தரக் கூடியது. பித்தத்தை தணிக்கும். அதிக குளிர்ச்சியான உணவு பொருள்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. அவர்கள் கொத்தமல்லி தழை கூட்டு செய்து சாப்பிடலாம். கொத்தமல்லியின் சத்தும் கிடைக்கும். வேக வைத்து விடுவதால் குளுமையும் குறைந்து விடும்.
அதிகம் டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் தணிக்க வாரம் ஒருமுறை கொத்தமல்லி தழை கூட்டு செய்து சாப்பிடலாம். கீரை கூட்டு, கீரை மசியல் போன்றதுதான் கொத்தமல்லி கூட்டு. கீரைக்கு பதில் கொத்தமல்லி தழை சேர்த்து செய்கிறோம். இதனை கொத்தமல்லி தால் ஃப்ரை என்று கூட கூறலாம்.
பாசி பருப்பை, தண்ணீர் விட்டு, நன்கு வேக வைக்கவும்.
பருப்பு வெந்ததும்........
சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து........ ஒரு கொதி வந்தவுடன் .......
கொத்தமல்லி தழையினை சேர்க்கவும்.
கொத்தமல்லி வெந்து மசிந்ததும், நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
அவசர சமையலுக்கு ஏற்றது கொத்தமல்லி கூட்டு. பத்தே நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.
No comments:
Post a Comment