தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.
குறைந்த அளவு தண்ணீரை, மெதுவாக ஊற்றி அரைக்கவும். தண்ணீர் குறைவாக விட்டால்தான், சட்னி கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.
தண்ணீர் அளவு அதிகம் ஆகாமலும், அதே நேரத்தில் தேங்காய், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய் - இவை நன்கு மசியும் படியும் அறைக்க வேண்டும்.
தேங்காய் சட்னி ரெடி |
பெருங்காயம், கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
இப்போது சுவையான தேங்காய் சட்னி ரெடி.
அதிக அளவில் தேங்காய் சட்னி செய்வதாக இருந்தால், கிரைண்டரில் அறைக்கலாம். சூடேறாமல் சுவையாக இருக்கும். கெட்டிச் சட்னி அறைக்க கிரைண்டரே வசதி.
இட்லி, தோசை, பொங்கல்-இந்த மூன்றுக்கும் தேங்காய் சட்னி சிறந்த துணை உணவு. அதிலும் கெட்டிச் சட்னி இன்னமும் விசேஷம்.
தேங்காய் சட்னி+நொய் உப்புமா+சூப்பர் காம்பினேஷன் |
2 comments:
கொஞ்சம் கர கரவென்று இருக்கவேண்டாமோ? நீங்கள் மைய அரைக்கச் சொல்லுகிறீர்கள். எப்படி பெருங்காயத்தைத் தாளிப்பீர்கள் (பொடிப் பெருங்காயம் கருகிவிடாதா?)
கரகர என்று இருப்பது அவரவர் taste பொறுத்தது. அடுப்பு எரியும்போதே கட்டி பெருங்காயத்தை போட்டு பொறித்து தாளிக்க வேண்டும். தூள் பெருங்காயமாக இருந்தா அடுப்பை அனைத்து விட்டு கடுகு உ.பருப்பு உள்ள சூடான எண்ணெயில் தூவி பொறிக்க வேண்டும்.
Post a Comment