நம்மள கடனாளி ஆக்கி பாக்கறதுல இவிங்களுக்கு என்ன ஒரு சந்தோசம்?
இன்னிக்கி ஆபிஸ்ல ரொம்ப பிஸியா இருந்த நேரம் பாத்து ஒரு போன் வருது. ஏதோ முக்கியமான கால் போல நெனச்சு, பேசினா......
எதிர்முனையில ஒரு பெண் குரல்.
எடுத்த எடுப்புல இப்பிடி கேக்குது:
"சார் ஒங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா?"
"சார் ஒங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா?"
"வேல நேரத்துல இப்பிடி கடுப்ப கெளப்புராங்களே? என்ன செய்யலாம்னு யோசிச்சேன்"
நம்ம வேல கெட்டாலும் இவிங்கள கலாய்ச்சே தீரரதுன்னு முடிவு பண்ணினேன்.
"கடன்தானே குடுத்தா வாங்கிக்கிறேன்"
"சார் உங்களுக்கு எவ்வளவு லோன் வேணும்?"
"15 கோடி போதும்"
எதிர்முனையில் அதிர்ச்சி.
திரும்பவும் சொன்னேன்.
"15 கோடி கடன் வேணும்"
'சார் உங்க சம்பளம் எவ்வளவு?"
"50 லட்சம்"
மீண்டும் எதிர்முனையில் அதிர்ச்சி.
"சார்...."
"நெசமாவே 50 லட்சம் சம்பளம் வாங்குறேன். எவ்வளவு கடன் தருவீங்க? சீக்கிரம் சொல்லுங்க"
"எங்க வேல பாக்குறீங்க"
"மன்னார்&கோ"
அந்த பெண்ணுக்கு மன்னார்&கோ பத்தி தெரியல. பெரிய கடன் பார்ட்டி சிக்கிடிச்சின்னு மேனேஜரே லைன்ல வந்துட்டாரு.
மீண்டும் அதே கேள்விகள். அதே பதில்கள்.
"பத்து பேங்க்ல தனித்தனியா கடன் அரேன்ஜ் பண்ணி தர்றேன். எப்ப சார் உங்கள மீட் பண்ணலாம்?"
நான் கேட்டேன்.
"உங்களுக்கு மன்னார்&கோ தெரியுமா?"
"தெரியும் சார்"
"அந்த கம்பெனி எங்க இருக்கு?"-இது நான்.
"சாரி சார். எனக்கு சரியா தெரியல. இருந்தாலும் அட்ரஸ் குடுத்தா கரெக்டா வந்துருவேன்"
"சரி. அட்ரஸ் அனுப்புறேன். வாங்க. அதுக்கு முன்னால ஒரு தரம் மன்னார்&கோ பத்தி கூகுள் பண்ணிட்டு வாங்க."
"சரிங்க சார்"
லைன் கட்டானது.
கூகுள்ல பாத்திருப்பார்னு நினைக்கிறேன்.
இந்த மார்க்கெட்டிங் கால்களை தவிர்க்க ரூம் போட்டு யோசிக்க வேண்டி இருக்கு.