'ஜில்'லுனு ஒரு காபி |
நான் ஒரு காபி பிரியன். பில்டர் காபி, Coffee cream பிஸ்கட், Cold Coffee-இப்படி எந்த வடிவில் coffee கிடைத்தாலும் ஒரு கை பார்த்து விடுவேன்.
Cold Coffee தயாரிப்பு முறை என்னவோ சிம்பிள் தான். ஒரு tablespoon instant காபி பொடி, தேவையான அளவு சர்க்கரை, அரை லிட்டர் பால்-இவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
பாலை நன்கு காய்ச்சி, ஆறியவுடன் freezerல் வைத்து குளிர வைக்கவும்.
Instant காபி பொடியை, சிறிதளவு சூடான தண்ணீரில் போட்டு நன்கு கலக்கவும். தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
இந்த decoction, குளிர்ந்த பால் இரண்டையும் ஒன்று சேர்த்து Blender அல்லது mixie jarல் போட்டு அடிக்கவும். நல்ல நுரை வரும் வரை அடிக்க வேண்டும்.
கோடைக்கேற்ற Cold Coffee ரெடி. விரும்பினால் இதில் ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் போடலாம்.
அதிக குளுமை வேண்டுவோர், கொஞ்சம் ஐஸ் க்யூப் போடலாம். ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும். அதிக குளிர்ச்சி இருந்தால் சுவை தெரியாது. நாக்கிலும், பல்லிலும் படும் போது ஷாக் அடித்த ஃபீலிங் வரக் கூடாது.
Filter Coffee decoction வைத்தும் Cold Coffee போடலாம்.
பெங்களூருவில் Cold Coffee சூப்பராக இருக்கும். சென்னை தியாகராய நகரில் India Coffee Houseன் Cold Coffee நன்றாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன், சென்னை ராதாகிருஷ்ணன் சாலை Woodlands Restaurantல் Cold Coffee சுவைத்தேன். அருமையாக இருந்தது. Instant Coffee பொடி போட்டிருந்தார்கள். வெண்ணிலா ஐஸ்கிரீம் topping. சரியான குளிர்ச்சி மற்றும் சுவை. ஒரு முறை குடித்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment