சிறுதானிய இனிப்பு ரொட்டி |
பலதானிய மாவு (கம்பு+கேழ்வரகு+நாட்டு சோளம்)- 1 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
ஏலக்காய் - சிறிது
நெய் - ரொட்டியை சுட்டு எடுக்க
பலதானிய மாவு (3 சிறுதானியங்கள் சேர்த்து அரைத்த மாவு)+வெல்லம்+தேங்காய்+ஏலக்காய்+நெய் |
துருவிய தேங்காயை சேர்க்கவும். ஏலக்காய் சேர்க்கவும். நன்கு கிளறி விடவும்.
ஓரளவு வெல்லப்பாகு கெட்டியானதும் மாவை சேர்க்கவும். கை விடாமல் கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் இறக்கி வைத்து.............................
ஆறியதும் சிறிது மாவை கையில் எடுத்து நன்கு உருட்டி சின்ன biscuit போல் தட்டி கல்லில் போடவும்.
சுற்றி சிறிது நெய் விட்டு வேக வைக்கவும்.
சிறுதானிய இனிப்பு ரொட்டி ரெடி |
பொன்னிறமாக சிவந்ததும் திருப்பி போடவும். சூடாக பரிமாறவும்.
இதுவரை நான் சுவைத்த சிறுதானிய சமையல் வகைகளில், இந்த சிறுதானிய இனிப்பு ரொட்டியின் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சாப்பிட சற்றே மொறுமொறுப்பாக இருக்கும். குக்கீஸ் போன்றதொரு சுவை. குக்கீஸை விட ஆரோக்கியமான உணவு....இந்த சிறுதானிய இனிப்பு ரொட்டி.
No comments:
Post a Comment