சிறுதானிய ரொட்டி |
பலதானிய மாவு |
ஒரு கப் சிறு (பல) தானிய மாவு எடுத்து, 2 ஸ்பூன் எண்ணெய், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
மாவை கிள்ளி , சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டையை கையில் எடுத்து, சிறிது எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும்.
தட்டிய மாவை கல்லில் போட்டு, நிதானமான தீயில் வேக வைக்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி............................
இரண்டு பக்கமும் சிவக்கும் வரை திருப்பி போட்டு வேக வைக்கவும்.
சிறுதானிய ரொட்டி ரெடி |
சப்பாத்திக்கு செய்யும் எந்த சைட் டிஷ்ஷும் இந்த சிறுதானிய ரொட்டிக்கு தொட்டு சாப்பிட ஏற்றதே.
கோதுமை மாவில் இருக்கும் பிசுக்கு , சிறுதானிய மாவில் இருக்காது. எனவே ரொட்டி தட்டும்போது எளிதில் உடைந்து விடும். சிறு சிறு ரொட்டிகளாக தட்டினால் இந்த பிரச்சினை இருக்காது.
விருப்பப் பட்டால் சிறிது கோதுமை மாவு சேர்த்தும் பிசையலாம்.
கோதுமை மாவு நம் சமையலில் அதிகம் சேர்க்கப் படும் பொருள் ஆகி விட்டது. அதற்கு மாற்றாகத்தான் இந்த சிறுதானிய ரொட்டி ரெசிபி. கோதுமை, அரிசி மாவுகளையே சாப்பிட்டு வரும் நமக்கு, நல்ல மாற்றுச் சுவையாக இருக்கும் இந்த சிறுதானிய ரொட்டி.
கோதுமை ஒவ்வாமை
சிலருக்கு கோதுமையில் உள்ள gluten (என்ற புரதச் சத்து ) ஒவ்வாமை இருக்கும். அமெரிக்காவில் இந்த ஒவ்வாமை பிரச்சினை அதிகம். அங்கே உணவு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுத்தக் கூடிய உணவு வரிசையில், முதல் 8 இடத்தில் ஓரிடம் பிடித்திருக்கிறது இந்த gluten allergy. இது celiac disease என்றும் அழைக்கப் படுகிறது.
இது தவிர, கோதுமை ஒவ்வாமை (Wheat Allergy )யும் நிறைய பேரை பாதிக்கிறது. கோதுமை ஒவ்வாமை, celiac disease எனப்படும் gluten allergy ................இவை இரண்டுமே கோதுமை உணவால் ஏற்படும் இருவேறு உடல்நலப் பிரச்சினைகள்.
Gluten Allergy உள்ளவர்களுக்கு, கோதுமை மாவை முகர்ந்தால் கூட ஒத்துக் கொள்ளாது என்கிறார்கள்.
இந்த நோய்க்கு ஒரே தடுப்பு மருந்து கோதுமை உணவுகளை தவிர்ப்பதுதான்.
நம்மூரிலும் இந்த பிரச்சினை இப்போது பரவலாகி வருவதாக கூறப் படுகிறது. அவர்களுக்கு சிறந்த மாற்று உணவு இந்த சிறுதானிய ரொட்டி.
எனவேதான் சிறிது கூட கோதுமை மாவு சேர்க்காமல் இந்த ரெசிபி கொடுத்துள்ளேன்.
No comments:
Post a Comment