'Original' சாந்தி ஸ்வீட்ஸ் |
சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா |
இருட்டு கடை அல்வாவை தேடிச் சென்றால், நெல்லையில் திருட்டுக் கடை அல்வாக்களும் கிடைக்கின்றன.
நெல்லையப்பரின் அருளுக்கு அடுத்த படியாக, அதிகம் தேடப்படுவது இந்நகரில் அல்வா மட்டுமே.
போர்டு இல்லாமல்...மரச் சட்டங்கள் இணைத்த கதவுகளோடு...ஏன் கல்லாபெட்டி கூட இல்லாமல் (ஒரு கூடையில்தான் பணத்தை வாங்கி கொட்டுகிறார்கள்) கோலோச்சுகிறது இருட்டு கடை.
என்பது போன்ற சிறு சிறு உத்திகள் இருட்டு கடையின் மவுசை நூறாண்டுகளாக கட்டி காப்பாற்றி கொண்டு வருகின்றன.
லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை, சாந்தி ஸ்வீட்ஸ், இருட்டு கடை....மீதி எல்லா கடைகளும் டுபாக்கூர்தான் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் கடையை ஒட்டி இடது புறத்தில் நான்கு 'சாந்தி ஸ்வீட்ஸ்' போர்டுகளுடன் மிக நீ...........ள கடை ஒன்று இருக்கிறது.
இந்த கடைக்கு எதிர்த்தாற்போல் (திருநெல்வேலி ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் மிக அருகில்) "இருட்டு கடை அல்வா" என்று கவரில் பிரமாண்டமாக போட்டு அதகளம் செய்கிறார்கள். (கவரில் இருட்டு கடை என்று போட்ட இந்த அல்வா சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள "காதி கிராமோத்யோக் பவன்" வரை வந்து விட்டது. சென்னைவாசிகளும் ஏமாறட்டும் என்ற நல்லெண்ணமோ?)
இருட்டு கடைக்கு அடுத்த கடையே சாந்தி ஸ்வீட்ஸ்தான். இரண்டு கடை தள்ளி சென்றால் மீண்டும் சாந்தி.
திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் தெருவில் நடந்தால்...மூன்று தெருக்கள் சந்திக்கும். எதிர்த்தால் போல் பழைய பஸ் ஸ்டாண்ட். அந்த சந்திப்பில் வலது மூலையில் இருக்கிறது லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை. பெரிய கடை. கூட்டமே இல்லை.
1882 ல் தொடங்கப்பட்ட லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடையில், முந்திரி, நெய், கலர் நிறைய போட்டு கிண்டிய ஸ்பெஷல் அல்வா கிடைக்கிறது. கிலோ ரூபாய் 220. சுவை என்னவோ சுமார்தான். டால்டா போட்ட சாதா அல்வாவும் கிடைக்கிறது. கிலோ ரூபாய் 160.
அப்படியே வலது புறம் திரும்பி, ரோட்டை கிராஸ் செய்து நான்கைந்து கடைகள் தள்ளி நடந்தால் வருகிறது சாந்தி ஸ்வீட்ஸ் ஒரிஜினல் கடை . சிறிய கடைதான். ஆனாலும் எந்த நேரம் சென்றாலும் கூட்டம் அலை மோதுகிறது. கிலோ ரூபாய் 140.
"தாமிரபரணி ஆற்று நீரின் சுவைதான் அல்வாவின் tasteக்கு காரணம்" என்று கூறுகிறார்கள், நெல்லை மக்கள். நீரின் சுவையும் நன்றாகத் தான் இருக்கிறது. ஆற்று நீரில் பாதியை அல்வா கிண்டியே தீர்க்கிறார்கள் நெல்லைவாசிகள்.
நெல்லையப்பரின் அருளுக்கு அடுத்த படியாக, அதிகம் தேடப்படுவது இந்நகரில் அல்வா மட்டுமே.
போர்டு இல்லாமல்...மரச் சட்டங்கள் இணைத்த கதவுகளோடு...ஏன் கல்லாபெட்டி கூட இல்லாமல் (ஒரு கூடையில்தான் பணத்தை வாங்கி கொட்டுகிறார்கள்) கோலோச்சுகிறது இருட்டு கடை.
"சிறிது நேரம்தான் கடை திறந்திருக்கும்"
" லேட்டா போனா அல்வா கிடைக்காது"
ஒரு விஷயம் நன்றாக இருந்தால் உடனே 'காப்பி பேஸ்ட்' செய்து விடுபவர்கள் ஆயிற்றே நாம். இருட்டு கடையை மட்டும் விட்டு வைப்போமா என்ன?
இருட்டு கடைக்கு போட்டியாக ஊரெங்கும் திருட்டு கடைகள். பெயர் திருட்டை சொல்கிறேன்.
லெட்சுமி விலாஸ் ஸ்பெஷல் அல்வா |
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்.
Original சாந்தி ஸ்வீட்ஸ் அருகில் சாந்..........தி ஸ்வீட்ஸ்! |
ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் கடையை ஒட்டி இடது புறத்தில் நான்கு 'சாந்தி ஸ்வீட்ஸ்' போர்டுகளுடன் மிக நீ...........ள கடை ஒன்று இருக்கிறது.
வாருங்கள்...வாருங்கள் என்று கூவி அழைக்கிறார்கள்.
Original இருட்டு கடை அல்வா கவரில் பெயரே இருக்காது |
இந்த கடைக்கு எதிர்த்தாற்போல் (திருநெல்வேலி ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் மிக அருகில்) "இருட்டு கடை அல்வா" என்று கவரில் பிரமாண்டமாக போட்டு அதகளம் செய்கிறார்கள். (கவரில் இருட்டு கடை என்று போட்ட இந்த அல்வா சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள "காதி கிராமோத்யோக் பவன்" வரை வந்து விட்டது. சென்னைவாசிகளும் ஏமாறட்டும் என்ற நல்லெண்ணமோ?)
இருட்டு கடைக்கு அடுத்த கடை |
இருட்டு கடைக்கு அடுத்த கடையே சாந்தி ஸ்வீட்ஸ்தான். இரண்டு கடை தள்ளி சென்றால் மீண்டும் சாந்தி.
எங்கெங்கும் சாந்தி |
லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை இனிப்போடு கார வகைகளும் நிறைய உண்டு |
லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடை |
1882 ல் தொடங்கப்பட்ட லெட்சுமி விலாஸ் புராதன லாலா கடையில், முந்திரி, நெய், கலர் நிறைய போட்டு கிண்டிய ஸ்பெஷல் அல்வா கிடைக்கிறது. கிலோ ரூபாய் 220. சுவை என்னவோ சுமார்தான். டால்டா போட்ட சாதா அல்வாவும் கிடைக்கிறது. கிலோ ரூபாய் 160.
Original சாந்தி ஸ்வீட்ஸ் சிப்ஸ், முறுக்கு கூட கிடைக்கும் |
இருட்டு கடை அல்வா ... இப்படித்தான் pack செய்யப் படுகிறது |
இருட்டு கடை அல்வா சிம்பிளாக ஒரு பட்டர் பேப்பரில் சுற்றி, அதிக micron கொண்ட பிளாஸ்டிக் கேரி பாக்கில் தரப் படுகிறது.
Original சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா ...இப்படித்தான் pack செய்யப் படுகிறது |
லெட்சுமி விலாஸ் ஸ்பெஷல்அல்வா ...இப்படித்தான் pack செய்யப் படுகிறது |
இருட்டு கடை அல்வா |
சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா |
லெட்சுமி விலாஸ் ஸ்பெஷல் அல்வா |
தாமிரபரணி ஆறு ...அத்தாளநல்லூர் ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் கோவில் பின்புறம் எடுத்த படம் PHOTO: Srividya Raman |
என்றாலும் நெல்லையப்பரின் நேரடி பார்வையில் உள்ள original இருட்டு கடை அல்வா முதலிடத்தை பிடிக்கிறது. அல்வா தவிர வேறு ஸ்வீட், காரம் விற்காத கடையும் இருட்டு கடை ஒன்றுதான். இரண்டாமிடம் பெறுவது original சாந்தி ஸ்வீட்ஸ். அவ்வளவுதான்.
வந்த வேலை முடித்து train ல் ஏறி உட்கார்ந்தால், coupeன் கதவு தட்டப் படுகிறது. திறந்து பார்த்தால்.........
"திருநெல்வேலி அல்வா வேண்டுமா ?" என்று கவரை நீட்டுகிறார் ஒருவர்.
" உனக்கு வேண்டுமா original இருட்டு கடை அல்வா?" என்று கேட்டேன்.
வந்தவர் 'கப் சிப்'. திருநெல்வேலிக்கே அல்வாவா? வட சென்னைக்கே வடகறியா? ஹா ஹா ஹா
ரயில்வே ஸ்டேஷனிலும் திருட்டு கடை அல்வா! ஆ!!
"திருநெல்வேலி அல்வா வேண்டுமா ?" என்று கவரை நீட்டுகிறார் ஒருவர்.
" உனக்கு வேண்டுமா original இருட்டு கடை அல்வா?" என்று கேட்டேன்.
வந்தவர் 'கப் சிப்'. திருநெல்வேலிக்கே அல்வாவா? வட சென்னைக்கே வடகறியா? ஹா ஹா ஹா
2 comments:
Thinna Thinna thigattatha alwa
padikka padikka boradikkatha ungal katturai
Ippothellam En Veettu kathavu thattappadumpodhellam Aarvam ezhugirathu varupavar kaiyil alwa irukkumo entru!
ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்-ல அல்வா வாங்கறதே ஒரு பெரிய சாதனை தான். அவ்ளோ கூட்டம் இருக்கும். அதே பெயரில் பக்கத்திலேயே ஒரு பத்து கடையில் ஈ ஓட்டிக் கொண்டிருப்பார்கள். சாந்தி ஸ்வீட்ஸ் கூட்டத்தை பார்க்கும் போது 'எப்பவுமே ஒரிஜினலுக்கு மக்களிடம் ஒரு மவுசு உண்டு' என்று தோன்றும்.
நீங்கள் நெல்லை புது பேருந்து நிலையம் பார்க்கவில்லை என்று நினைக்கறேன். அங்கே இருக்கும் சில நூறு ஸ்வீட் கடைகளின் பெயர் எல்லாமே 'சாந்தி ஸ்வீட்ஸ்' தான் :)
Post a Comment