Friday, 6 November 2015

மாங்கா வத்தல் குழம்பு

மாங்கா வத்தல் குழம்பு

மாங்கா வத்தல் - கைப்பிடி அளவு 
புளி - கோலி குண்டு அளவு 

சாம்பார் பொடி - 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள்  - சிறிது 

வர மிளகாய், உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை  --தாளிக்க

உப்பு - 1/2 ஸ்பூன்  

நல்லெண்ணெய் - தாளிக்க 

அரிசி மாவு - 1/2 ஸ்பூன் 


குறிப்பு: மாங்கா வத்தல் உப்பு போட்ட வத்தலாக இருந்தால்,  பாதி அளவு உப்பு போட்டால் போதும்.











மாங்கா வத்தல்களை  நன்கு ஊற வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும்.














புளியை ஊற வைக்கவும். மாங்கா வத்தலில் புளிப்பு சுவை இருப்பதால், புளி மிக மிக குறைவாகவே சேர்க்க வேண்டும். 











நன்கு கரைத்த புளி தண்ணீரை அடுப்பில் வைத்து, சூடேறியதும்  2 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும்.












சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.











உப்பு சேர்க்கவும்.


















ஊறிய மாங்கா வத்தலில் இருந்து தண்ணீரை சுத்தமாக வடித்தபின் ,அவற்றையும், புளி கரைசலில் சேர்க்கவும்.












குழம்பு பொடி வாசனை போகும் வரை  அடுப்பை சிம்மில் வைத்து, கொதிக்க விடவும்.











குழம்பு பொடி வாசனை மாறி, மாங்கா வத்தல் நன்கு வெந்ததும், அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து கொட்டி, நன்கு கிளறி, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.










உளுத்தம் பருப்பு, கடுகு, வர மிளகாய் ஆகியவற்றை 
தாளித்து ......










கருவேப்பிலை சேர்த்து, பொரிந்ததும்.....












குழம்பில் கொட்டி, கிளறி விட்டு இறக்கவும்.
மாங்கா வத்தல் குழம்பும்
சுட்ட அப்பளமும் 















மாங்கா வத்தல் குழம்புக்கு தொட்டு சாப்பிட, சுட்ட அப்பளம் சூப்பராக இருக்கும். டாங்கர்மா பச்சடியும் நன்றாக இருக்கும்.

Tuesday, 3 November 2015

வட சென்னை வடை கறி


வடை கறி


சென்னையின், குறிப்பாக வட சென்னையின், தனித்துவமான உணவு வடை கறி.

வடை கறி செய்து காட்டியவர்:   திருமதி.ஜகதீஸ்வரி நட்ராஜன்          
ஜகதீஸ்வரி நட்ராஜன் 
                 

                              வடைகறி                             
தேவையான பொருள்கள்


கடலை பருப்பு - 1 கப் 
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
புதினா தழை - கொஞ்சம் 
இஞ்சி - ஒரு துண்டு 
பூண்டு - 8 பல் 
மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் 
சோம்பு, கிராம்பு ,உப்பு  - தேவையான அளவு  

                              வடைகறி      
செய்முறை 

கடலை பருப்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில், ஊற வைத்த பருப்பை  தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.

தோசை கல்லை சூடாக்கி, குறைந்த அளவு எண்ணெய் தடவி, அரைத்தெடுத்த கடலை பருப்பு மாவை அடை மாதிரி பரவலாக தட்டி, மிதமான தீயில் வேக வைக்கவும். பின் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

ஆறியவுடன், பீஸ் பீசாக பிய்த்து போடவும்.

இஞ்சி பூண்டை விழுதாக  அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் சோம்பு, கிராம்பு போட்டு தாளிக்கவும். தக்காளியை துண்டு துண்டாக போட்டு நன்கு வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின் புதினா போட்டு பிரட்டவும். பச்சை மிளகாய் கீறி போடவும்.

வதக்கிய கலவை மேல், ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு போட்டு, அரை டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.

லேசாக கொதித்ததும் பிச்சு வச்ச கடலை பருப்பு வடை துண்டுகளை போட்டு அடுப்பை simல் வைக்கவும். சிறிது நேரத்தில் வடை துண்டுகள்  gravyயை இழுத்துக் கொள்ளும்.

வட சென்னை புகழ் வடைகறி தயார்.

Sunday, 1 November 2015

வரகு தோசை

வரகு தோசை 
தேவையான பொருள்கள் 

வரகு அரிசி - 3 டம்ப்ளர்
உளுந்து - 3/4 டம்ப்ளர்
உப்பு - தேவையான அளவு

செய்வது எப்படி?

வரகு அரிசி, உளுந்து இரண்டையும் 3 மணி நேரம் ஊற வைத்து, நைசா அரைத்து, உப்பு போட்டு கலந்து வைக்கவும். வரகு, அரிசி இரண்டையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம்.

7-8 மணி நேரம் புளித்த பின் தோசை வார்க்கலாம்.

வழக்கமாக நாம் செய்யும் தோசை போன்றுதான் வரகு தோசையும். சுவையில் பெரிய மாறுதல் இருக்காது. ஆனால் ஆரோக்கியம் அதிகம்.

வரகு கடினமான தானியம் அல்ல. எனவே அரிசி தோசைக்கு ஊறவைக்கும் நேரம்தான் வரகு தோசைக்கும். தோசை வார்த்து எடுக்க ஆகும் நேரமும் சாதாரண தோசைபோலதான்.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...