சென்னையின், குறிப்பாக வட சென்னையின், தனித்துவமான உணவு வடை கறி.
வடை கறி செய்து காட்டியவர்: திருமதி.ஜகதீஸ்வரி நட்ராஜன்
ஜகதீஸ்வரி நட்ராஜன் |
வடைகறி
தேவையான பொருள்கள்
கடலை பருப்பு - 1 கப்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
புதினா தழை - கொஞ்சம்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 8 பல்
மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
சோம்பு, கிராம்பு ,உப்பு - தேவையான அளவு
வடைகறி
செய்முறை
கடலை பருப்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் காலையில், ஊற வைத்த பருப்பை தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
தோசை கல்லை சூடாக்கி, குறைந்த அளவு எண்ணெய் தடவி, அரைத்தெடுத்த கடலை பருப்பு மாவை அடை மாதிரி பரவலாக தட்டி, மிதமான தீயில் வேக வைக்கவும். பின் திருப்பி போட்டு வேக வைக்கவும்.
ஆறியவுடன், பீஸ் பீசாக பிய்த்து போடவும்.
இஞ்சி பூண்டை விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் சோம்பு, கிராம்பு போட்டு தாளிக்கவும். தக்காளியை துண்டு துண்டாக போட்டு நன்கு வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின் புதினா போட்டு பிரட்டவும். பச்சை மிளகாய் கீறி போடவும்.
வதக்கிய கலவை மேல், ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு போட்டு, அரை டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
லேசாக கொதித்ததும் பிச்சு வச்ச கடலை பருப்பு வடை துண்டுகளை போட்டு அடுப்பை simல் வைக்கவும். சிறிது நேரத்தில் வடை துண்டுகள் gravyயை இழுத்துக் கொள்ளும்.
வட சென்னை புகழ் வடைகறி தயார்.
No comments:
Post a Comment