வேப்பிலை கட்டி |
வேப்பிலை கட்டி செய்ய என்ன தேவை?
எலுமிச்சை இலை |
நாரத்தை இலை -ஒரு பிடி
எலுமிச்சை இலை -ஒரு பிடி
கருவேப்பிலை - ஒரு பிடி
வர மிளகாய் - தேவைக்கு
பெருங்காயம் - சிறிது
புளி - சிறு எலுமிச்சை அளவு.
கல் உப்பு - தேவைக்கு
கல் உப்பு - தேவைக்கு
நாரத்தை இலை |
கருவேப்பிலை |
எப்படி செய்வது?
நாரத்தை இலை மற்றும் எலுமிச்சை இலைகளில் நார் பகுதியை நீக்கி விட்டு சிறு இலைகளாக கிழித்து கொள்ளவும். பின்னர் மிளகாய், புளி, உப்பு, பெருங்காயம் இவற்றுடன் சேர்த்து, நன்கு கிளறி கிளறி அரைக்கவும். உலர்ந்த பாத்திரத்தில் எடுத்து வைத்து, அவ்வப்போது கலந்து விடவும்.
பொதுவாக கடைகளில் சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்து விற்பார்கள். வீட்டு உபயோகத்திற்கு பொடியாகவே வைத்து பயன்படுத்தலாம்.
வயிற்று உப்புசம் , நெஞ்செரிச்சல் ஏப்பம் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து இந்த வேப்பிலைகட்டி. வயிறுக்கு இதம் அளிக்கும் உணவு இது . மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். நிறைய செய்து வைத்தால் வாசனை போய்விடும். அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் பக்கங்களில் ஓரு நம்பிக்கை . ஐப்பசி மாதத்தில் இந்த வேப்பிலை கட்டியை அரைத்து சாப்பிட்டால் ஐஸ்வர்யம் பெருகும் என்று.
தகவல் உதவி: சீதாலக்ஷ்மி கோபாலசாமி, ஸ்ரீரங்கம்.
No comments:
Post a Comment