Wednesday, 12 October 2016

தவல வடை - ஜவ்வரிசி சேர்த்தது

      தவல வடை.அரிதாக செய்யப்படும் நொறுக்குத் தீனிகளில் ஒன்று. வடைதானே என்று நினைக்க வேண்டாம். சாதாரண உளுந்து வடை, மசால் வடைகளிளிருந்து முற்றிலும் மாறுபட்ட சுவை. குணுக்கு போன்று நம் பாரம்பரிய டிபன் வகைகளில் தவல வடையும் ஒன்று. ஆங்காங்கே சில உணவகங்களில் மட்டும், குறிப்பிட்ட சிறிது நேரத்தில் மட்டும் தவல வடை போடுவார்கள். டிசம்பர் மாத சங்கீத சபா கேண்டீன்களில் சிலவற்றில் மட்டும், சீசனில் ஒருமுறையாவது தவல வடை கட்டாயம் இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் தவல வடை செய்முறையில் சில சில வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக சிலர் ஜவ்வரிசி சேர்க்கிறார்கள்.

         அறுசுவை  அரசு  நடராஜனின்  சகோதரர்  ஜெயராமன். இவர்  புதல்வர்  பாஸ்கரன். மீனாம்பிகா பாஸ்கரன்  என்றால்  எல்லோருக்கும்  புரியும். இவரிடம்  தொலைபேசியில்  கேட்டறிந்த  தவல வடை  ரெசிப்பி.

இதோ  பாஸ்கரன்  மீனாம்பிகாவின்  தவல  வடை :



துவரம் பருப்பு
உளுத்தம் பருப்பு 
கடலை பருப்பு 
வர மிளகாய் 
தேங்காய் 
ஜவ்வரிசி
சின்ன வெங்காயம் 
எண்ணெய் 
உப்பு 
இஞ்சி 
கருவேப்பிலை  


இவை அனைத்தையும் சம அளவில் போட்டு, ஊற வைத்து, கொர கொரப்பா அறைக்கணும்.

சின்ன வெங்காயம் நைசா வெட்டி மாவில் கலக்கணும்.

தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும்.

இஞ்சியை பொடி பொடியாக வெட்டி மாவு அறைக்கும் முன் சேர்த்துக் கொள்ளவும்.

பின் கருவேப்பிலை சேர்க்கவும்.

தேங்காயை பல் பல்லாக வெட்டி சேர்க்கவும்.

ஜவ்வரிசி முதல் நாள் ஊற வைக்கவும்.

ஊற வைத்த ஜவ்வரிசியை நீர் வடிய பிழிந்து அறைத்த மாவில் சேர்க்கவும்.

ஜவ்வரிசி , வடையின் மொறு மொறுப்புக்காக சேர்க்கப் படுகிறது.

"அரிசிக்கு பதில் ஜவ்வரிசி சேர்க்கிறோம்."

அப்ப அரிசி சேர்ப்பதுதான் original ரெசிபியா?

"இல்லை. ஜவ்வரிசி சேர்ப்பதுதான் original ரெசிபி" என்கிறார் மீனாம்பிகா பாஸ்கரன்.

"தவல அடை?"

"அப்பாவிடம் கேட்கணும்" என்கிறார்.

வாணலியில் எண்ணெய் வைத்து சூடு படுத்தவும்.

ஒரு ஜார்ணியில்  (ஜல்லி கரண்டி) மாவை வடையாக தட்டி, எண்ணெய்யில் மூழ்கும்படி கரண்டியை பிடித்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

பாஸ்கரன் மீனாம்பிகா  ஸ்டைல்  தவல வடை  ரெடி.

இளநீர் இட்லி

குரு ராயர் கேடரிங் சர்விஸ் 

வழங்கும் 

இளநீர் இட்லி



இரண்டு  வருடங்களுக்கு முன்  திருவல்லிக்கேணியில், ஒரு கன்னட மாத்வா வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். காலை டிபன். தோசை சைசில், சற்றே கனம் குறைந்த இட்லி மாதிரியான ஒன்றை பரிமாறினார்கள். வீடு திரும்பிய பின்னரும் அது என்னவாக இருக்கும் என்ற யோசனை. திருமணத்தில் கேட்டரிங் செய்த குரு ராயர் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் வேதப்ரியா நம்பர்   (2844 5237, 98400 51844, 94456 05237) வாங்கி பேசினேன். நான் சாப்பிட்டது இளநீர் இட்லி என்று அறிந்து கொண்டேன். செய்முறையும் சொன்னார். இளநீர் இட்லி போட்டோ வேண்டுமே என்றபோது  இளநீர் இட்லி வீட்டில் செய்வது கடினம். அடுத்த கல்யாண ஆர்டர் வரை காத்திருந்தால் மண்டபத்தில் வந்து போட்டோ எடுத்து கொள்ளலாம் என்றார். ஏனோ கைவரவில்லை. ஹோட்டல்களில் இளநீர் இட்லி செய்வதில்லை. டிசம்பர் சீசனில், சங்கீத சபா கேண்டீன் சிலவற்றில் மட்டும் ஏதாவது ஒரு நாள் இளநீர் இட்லி மெனுவில் உண்டு. பார்த்தசாரதி சபாவில் மௌன்ட் மணி ஐயர் கேன்ட்டீனில் இளநீர் இட்லி போட்ட நாளில் சற்றே தாமதமாக சென்றதால் போட்டோ கிடைக்கவில்லை. எனவே போட்டோ இல்லாமல் ரெசிபி மட்டும் இதோ. முடிந்தால் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்

பச்சை அரிசி - ஒரு படி
உளுத்தம் பருப்பு - 1/2 படி.
இளநீர் - 3
உப்பு - தேவையான அளவு 


செய்முறை


பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். தண்ணீர் வடித்து, 3 இளநீர் ஊற்றி அரைக்க வேண்டும். ஒரு மணி நேரமாவது grinder ஓட வேண்டும்.

4 மணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி, 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இளநீர் இட்லி ரெடி.

இளநீர் இட்லி குரித்த சில டிப்ஸ்களை வழங்குகிறார் குரு ராயர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் வேதப்ரியா :


சாதாரண grinder ல் அறைக்கும் கல்லில் சிறு சிறு பொத்தல் இருக்கும். அதனால் தான் இட்லி மாவு சூடாகிறது. பொத்து இல்லாமல் grinder செய்து வாங்க வேண்டும்.


அப்போதுதான் மாவு சூடாகாது.


ஒரு மணி நேரம் அறைப்பதால் மாவு நன்கு அறைபடுகிறது. அதனால் soft ஆன இட்லி கிடைக்கிறது.


பெரிய size இட்லி ஊற்ற வசதியாக  தனி இட்லி தட்டு வேண்டும்.


"கல்லில் பொத்து இல்லாத grinder, பெரிய இட்லி தட்டு ஆகியவை தேவைபடுவதால், இளநீர் இட்லியை வீட்டில் செய்ய முடியாது" என்கிறார் வேதப்ரியா.



இளநீர் இட்லி பூப்போல மிகவும் soft ஆக இருக்கும். இளநீர் சேர்ப்பது, grinder கல், நீண்ட நேரம் அரைப்பது ஆகிய விஷயங்கள் பூவினும் மெல்லிய இட்லியை தருகின்றன. 




இளநீர் இட்லி இனிப்பாக இருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். இல்லை. வழக்கமான இட்லி போலதான் இருக்கும். Softness மட்டுமே அதன் தனித்துவம்.



இளநீர் இட்லி கிடைக்காதவர்கள், பாலக்காடு பக்கம் சென்றால் அங்கு கிடைக்கும் Ramassery இட்லி சாப்பிட்டு பாருங்கள்.







அவல் உப்புமா அல்லது ஆலு போஹா

அவல்  உப்புமா 

அவல் - 1 கப்                                                               தாளிக்க:
தயிர் - 1 கப்                                                                  கடுகு
மஞ்சள் தூள்  - 1/2 ஸ்பூன்                                    உளுத்தம்  பருப்பு  
பீன்ஸ் - 8                                                                      நல்லெண்ணெய்  - 6 ஸ்பூன்                          
உருளை கிழங்கு - 2                                                  வர  மிளகாய்  - 3 
கேரட் - 1                                                                        பச்சை  மிளகாய் - 2
                                                                                          கருவேப்பிலை                                                       

அவல்  உப்புமா  :  செய்முறை












கெட்டி அவல் அல்லது சிவப்பு அவல், உப்புமா செய்ய நன்றாக இருக்கும்.






அவலை ஒரு முறை தண்ணீரில் களையவும்.  பின்னர் தயிர்  அல்லது கெட்டியான மோர்  சேர்த்து  பிசிறவும். அவல் மூழ்கும்  அளவுக்கு  தயிர் சேர்க்க  கூடாது. தயிர்  சேர்த்த  பிறகு  உதிர் உதிராக அவல் இருக்க வேண்டும். சிறிது  மஞ்சள்  தூள்  சேர்த்து  நன்றாக  கிளறி  மூடி  வைக்கவும்.

  கால்    மணி  நேரம்  ஊற  வேண்டும்.















பீன்ஸ், உருளை கிழங்கு, கேரட் மூன்றையும்  தண்ணீரில் அலசவும்.







 





உருளை கிழங்கை  தண்ணீர்  சேர்த்து  வேக  வைக்கவும்.  பீன்ஸ், கேரட்   இரண்டையும்   பொடிப்  பொடியாக  நறுக்கவும்.



வாணலியை  அடுப்பில்  வைத்து, சூடு ஏறியவுடன் , 6 ஸ்பூன்  நல்லெண்ணெய்  விட்டு, எண்ணெய்  நன்கு  காய்ந்ததும்,  கடுகு, வர மிளகாய், உளுத்தம்  பருப்பு, கருவேப்பிலை, நீள  வாக்கில் கீறிய  பச்சை  மிளகாய்  சேர்த்து  தாளிக்கவும். எண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.


இப்போது  பொடியாக  நறுக்கிய  பீன்ஸ்  மற்றும்  கேரட்டை  சேர்த்து  நன்கு  வதக்கவும்.




                                                       சிறிது  தண்ணீர் தெளித்து  மூடி போட்டு வதங்க விடவும்.




                                                              நன்கு வதங்கியவுடன்......



                                         வேக வைத்த உருளை கிழங்கை  உதிர்த்து  போட்டு                                                                                                    நன்கு கிளறவும்.





இப்போது தயிரில் ஊற வைத்த அவல் சேர்த்து கிளறவும்.
சிறிது நேரம் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.




                                                                               அவல் உப்புமா ரெடி 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...