அவல் உப்புமா
அவல் உப்புமா
அவல் - 1 கப் தாளிக்க:
தயிர் - 1 கப் கடுகு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
பீன்ஸ் - 8 நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
உருளை கிழங்கு - 2 வர மிளகாய் - 3
கேரட் - 1 பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை
கருவேப்பிலை
அவல் உப்புமா : செய்முறை
அவலை ஒரு முறை தண்ணீரில் களையவும். பின்னர் தயிர் அல்லது கெட்டியான மோர் சேர்த்து பிசிறவும். அவல் மூழ்கும் அளவுக்கு தயிர் சேர்க்க கூடாது. தயிர் சேர்த்த பிறகு உதிர் உதிராக அவல் இருக்க வேண்டும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும்.
உருளை கிழங்கை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பீன்ஸ், கேரட் இரண்டையும் பொடிப் பொடியாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, சூடு ஏறியவுடன் , 6 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு, வர மிளகாய், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, நீள வாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். எண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.
இப்போது பொடியாக நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வதங்க விடவும்.
நன்கு வதங்கியவுடன்......
வேக வைத்த உருளை கிழங்கை உதிர்த்து போட்டு நன்கு கிளறவும்.
இப்போது தயிரில் ஊற வைத்த அவல் சேர்த்து கிளறவும்.
சிறிது நேரம் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
அவல் உப்புமா ரெடி
No comments:
Post a Comment