குரு ராயர் கேடரிங் சர்விஸ்
வழங்கும்
இளநீர் இட்லி
இரண்டு வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில், ஒரு கன்னட மாத்வா வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். காலை டிபன். தோசை சைசில், சற்றே கனம் குறைந்த இட்லி மாதிரியான ஒன்றை பரிமாறினார்கள். வீடு திரும்பிய பின்னரும் அது என்னவாக இருக்கும் என்ற யோசனை. திருமணத்தில் கேட்டரிங் செய்த குரு ராயர் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் வேதப்ரியா நம்பர் (2844 5237, 98400 51844, 94456 05237) வாங்கி பேசினேன். நான் சாப்பிட்டது இளநீர் இட்லி என்று அறிந்து கொண்டேன். செய்முறையும் சொன்னார். இளநீர் இட்லி போட்டோ வேண்டுமே என்றபோது இளநீர் இட்லி வீட்டில் செய்வது கடினம். அடுத்த கல்யாண ஆர்டர் வரை காத்திருந்தால் மண்டபத்தில் வந்து போட்டோ எடுத்து கொள்ளலாம் என்றார். ஏனோ கைவரவில்லை. ஹோட்டல்களில் இளநீர் இட்லி செய்வதில்லை. டிசம்பர் சீசனில், சங்கீத சபா கேண்டீன் சிலவற்றில் மட்டும் ஏதாவது ஒரு நாள் இளநீர் இட்லி மெனுவில் உண்டு. பார்த்தசாரதி சபாவில் மௌன்ட் மணி ஐயர் கேன்ட்டீனில் இளநீர் இட்லி போட்ட நாளில் சற்றே தாமதமாக சென்றதால் போட்டோ கிடைக்கவில்லை. எனவே போட்டோ இல்லாமல் ரெசிபி மட்டும் இதோ. முடிந்தால் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்
பச்சை அரிசி - ஒரு படி
உளுத்தம் பருப்பு - 1/2 படி.
இளநீர் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். தண்ணீர் வடித்து, 3 இளநீர் ஊற்றி அரைக்க வேண்டும். ஒரு மணி நேரமாவது grinder ஓட வேண்டும்.
4 மணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி, 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இளநீர் இட்லி ரெடி.
இளநீர் இட்லி குரித்த சில டிப்ஸ்களை வழங்குகிறார் குரு ராயர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் வேதப்ரியா :
சாதாரண grinder ல் அறைக்கும் கல்லில் சிறு சிறு பொத்தல் இருக்கும். அதனால் தான் இட்லி மாவு சூடாகிறது. பொத்து இல்லாமல் grinder செய்து வாங்க வேண்டும்.
அப்போதுதான் மாவு சூடாகாது.
ஒரு மணி நேரம் அறைப்பதால் மாவு நன்கு அறைபடுகிறது. அதனால் soft ஆன இட்லி கிடைக்கிறது.
பெரிய size இட்லி ஊற்ற வசதியாக தனி இட்லி தட்டு வேண்டும்.
இளநீர் இட்லி பூப்போல மிகவும் soft ஆக இருக்கும். இளநீர் சேர்ப்பது, grinder கல், நீண்ட நேரம் அரைப்பது ஆகிய விஷயங்கள் பூவினும் மெல்லிய இட்லியை தருகின்றன.
இளநீர் இட்லி இனிப்பாக இருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். இல்லை. வழக்கமான இட்லி போலதான் இருக்கும். Softness மட்டுமே அதன் தனித்துவம்.
இளநீர் இட்லி கிடைக்காதவர்கள், பாலக்காடு பக்கம் சென்றால் அங்கு கிடைக்கும் Ramassery இட்லி சாப்பிட்டு பாருங்கள்.
No comments:
Post a Comment