தவல வடை.அரிதாக செய்யப்படும் நொறுக்குத் தீனிகளில் ஒன்று. வடைதானே என்று நினைக்க வேண்டாம். சாதாரண உளுந்து வடை, மசால் வடைகளிளிருந்து முற்றிலும் மாறுபட்ட சுவை. குணுக்கு போன்று நம் பாரம்பரிய டிபன் வகைகளில் தவல வடையும் ஒன்று. ஆங்காங்கே சில உணவகங்களில் மட்டும், குறிப்பிட்ட சிறிது நேரத்தில் மட்டும் தவல வடை போடுவார்கள். டிசம்பர் மாத சங்கீத சபா கேண்டீன்களில் சிலவற்றில் மட்டும், சீசனில் ஒருமுறையாவது தவல வடை கட்டாயம் இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் தவல வடை செய்முறையில் சில சில வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக சிலர் ஜவ்வரிசி சேர்க்கிறார்கள்.
அறுசுவை அரசு நடராஜனின் சகோதரர் ஜெயராமன். இவர் புதல்வர் பாஸ்கரன். மீனாம்பிகா பாஸ்கரன் என்றால் எல்லோருக்கும் புரியும். இவரிடம் தொலைபேசியில் கேட்டறிந்த தவல வடை ரெசிப்பி.
அறுசுவை அரசு நடராஜனின் சகோதரர் ஜெயராமன். இவர் புதல்வர் பாஸ்கரன். மீனாம்பிகா பாஸ்கரன் என்றால் எல்லோருக்கும் புரியும். இவரிடம் தொலைபேசியில் கேட்டறிந்த தவல வடை ரெசிப்பி.
இதோ பாஸ்கரன் மீனாம்பிகாவின் தவல வடை :
துவரம் பருப்பு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
வர மிளகாய்
தேங்காய்
ஜவ்வரிசி
சின்ன வெங்காயம்
எண்ணெய்
உப்பு
இஞ்சி
கருவேப்பிலை
இவை அனைத்தையும் சம அளவில் போட்டு, ஊற வைத்து, கொர கொரப்பா அறைக்கணும்.
சின்ன வெங்காயம் நைசா வெட்டி மாவில் கலக்கணும்.
தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும்.
இஞ்சியை பொடி பொடியாக வெட்டி மாவு அறைக்கும் முன் சேர்த்துக் கொள்ளவும்.
பின் கருவேப்பிலை சேர்க்கவும்.
தேங்காயை பல் பல்லாக வெட்டி சேர்க்கவும்.
ஜவ்வரிசி முதல் நாள் ஊற வைக்கவும்.
ஊற வைத்த ஜவ்வரிசியை நீர் வடிய பிழிந்து அறைத்த மாவில் சேர்க்கவும்.
ஜவ்வரிசி , வடையின் மொறு மொறுப்புக்காக சேர்க்கப் படுகிறது.
"அரிசிக்கு பதில் ஜவ்வரிசி சேர்க்கிறோம்."
அப்ப அரிசி சேர்ப்பதுதான் original ரெசிபியா?
"இல்லை. ஜவ்வரிசி சேர்ப்பதுதான் original ரெசிபி" என்கிறார் மீனாம்பிகா பாஸ்கரன்.
"தவல அடை?"
"அப்பாவிடம் கேட்கணும்" என்கிறார்.
வாணலியில் எண்ணெய் வைத்து சூடு படுத்தவும்.
ஒரு ஜார்ணியில் (ஜல்லி கரண்டி) மாவை வடையாக தட்டி, எண்ணெய்யில் மூழ்கும்படி கரண்டியை பிடித்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
பாஸ்கரன் மீனாம்பிகா ஸ்டைல் தவல வடை ரெடி.
No comments:
Post a Comment