Thursday, 29 March 2018

மயிலை அறுபத்து மூவர் திருவிழா

           

பக்தி உலா by வித்யா 


மயிலை அறுபத்து மூவர் திருவிழா 
            இறைவனுக்கு திருவிழா என்பது நமக்கெல்லாம் தெரியும்.  இறைதொண்டர்களுக்கான திருவிழா ஒன்று உண்டு . தெரியுமா?

                 எந்த திருவிழாவுக்கு சென்றாலும் உணவு தயாரித்து எடுத்து செல்ல வேண்டும் அல்லது வீட்டுக்கு வந்த பிறகு உண்ண  தயாரித்து வைத்து விட்டு செல்ல வேண்டியிருக்கும். இதுதான் regular practice. ஆனால்  உண்பதற்கு மூன்று வேளையும் உணவு, குடிக்க நீர், வெயிலுக்கு நீர் மோர், கொறிக்க சுண்டல்.... பிஸ்கட் என்று கூப்பிட்டு கூப்பிட்டு கொடுப்பது எல்லாம் எங்கே தெரியுமா?

         அதுதான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவின்  ஒரு பகுதியாக நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா.

                         
மயிலை அறுபத்து மூவர் விழா-நாயன்மார்கள் உலா 
 
           தருமமிகு சென்னையின் மையப்பகுதியான மைலாப்பூரில் உள்ள நான்கு மாட வீதிகளில் 63 நாயன்மார்கள் (தொண்டர்கள்) வலம் வருகின்றனர். இதன் ஒருபகுதியாக  கண்டு களிக்க வந்திருக்கும் அத்துணை பேரும்  உண்டு, தாகம் தீர்த்து செல்கின்றனர் .

                     எல்லை தெய்வமான கோலவிழி அம்மன் முன் செல்ல,   கணபதி தொடர 63 நாயன்மார்களும் பின்செல்கின்றனர்.  செல்ல பிள்ளையான முருகனுடன் கபாலீஸ்வரரும், உடனுறை கற்பகாம்பாள் தாயாரும்  மாட வீதிகளில் உலா வருகின்றனர். நாயன்மார்கள் பல்லக்குகளில்  பின்னோக்கி அமர்ந்து கபாலீஸ்வரரை வணங்கியவாறே  உலா வருவர்.

       
மயிலை அறுபத்து மூவர் விழா-அருள் மிகு கற்பகாம்பாள் 
இந்த திருவிழாவை கண்டு களிக்க சென்னையின் சுற்றுப்பகுதி அனைத்திலும் இருந்து சுமார் ஐந்து லட்சம் பேர் வரை திரள்கின்றனர். மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பெறும் இந்த திருவிழாவில்தான் கூப்பிட்டு கூப்பிட்டு உணவு வழங்கப்படுகிறது. மேலும் இங்கு அன்னதானம் செய்தாலும்  உணவை வாங்கி உண்டாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு உணவு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை.

          இங்கு வழங்கப்படும் உணவு பட்டியல் இதோ: பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், மிளகு சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், தோசை, கேசரி, கிச்சடி, பிரிஞ்சி சாதம் etc... குடிக்க நீர்மோர், ஜூஸ், பாதாம் மில்க் ரோஸ் மில்க், ஐஸ்கிரீம், சூடான ஏலக்காய் பால் , நன்னாரி சர்பத் , தண்ணீர் packet, கொறிக்க விதம்விதமான சுண்டல். கூடவே பிஸ்கட் பாக்கெட்கள், வெள்ளரி பிஞ்சு, வாழைபழம் etc..

            இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன். சிறு பிள்ளைகளுக்கு பேனா, பென்சில், நோட்புக், ரப்பர், Sharpener  இவையும் வழங்கப்படுகின்றன. வருபவர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் கைகளால் மற்றவர்களுக்கு கொடுக்க சொல்லி பழக்குகிறார்கள். 
             
மயிலை அறுபத்து மூவர் விழா-நீர் மோர் பந்தல் 
             மயிலை வியாபாரிகள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலுக்கு இந்த ஆண்டு பொன்விழா (50வது வருடம்).    அவர்களிடம் பேசியபோது,  நேற்றே சுமார் 150 லிட்டர் பால் வாங்கி. காய்ச்சி உரை ஊற்றப்பட்டு, இஞ்சி, மிளகாய், மல்லி, கருவேப்பிலை, புதினா, பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, கலக்கி,  சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சேர்த்து தரமான நீர் மோராக விநியோகிக்கப்படுகிறது  என்ற தகவல் தெரிய வந்தது.
மயிலை அறுபத்து மூவர் விழா-நீர் மோர் விநியோகம் 

       உலாவரும் இறைவனை தரிசித்து அவர்தம் பாதங்களில் நம் கவலைகளையும் விண்ணப்பங்களையும் வைத்து வணங்கிவிட்டு , வயிறு நிறைய உண்டு மகிழ்ந்து வீடு திரும்பி, அடுத்தவருட பங்குனி திருவிழாவிற்கு காத்திருக்க வேண்டியதுதான்.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...