Friday, 15 June 2018

ஜாலியன்வாலா பாக்

பள்ளி படிக்கும் காலங்களில் சுற்றுலா அழைத்து செல்லும்போது இது எதற்கு அனாவசியமாக என்று நினைத்ததுண்டு. ஆனால் என் எண்ணத்தை தகர்த்தது சமீபத்திய எனது ஜாலியன் வாலாபாக் பயணம்.
வாழ்க்கையில் ஒருமுறையேனும் கண்டு வரவேண்டிய இடம் இது. பள்ளி பாடபுத்தகத்தில் ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் ஜெனரல் டயரால் ஏராளமான மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர் என்று படித்து அந்த செய்தியினை கடந்திருப்போம்.
ஆனால் இந்த இடத்தை நேரில் காணும்போது மட்டுமே அந்த நிகழ்வின் கொடூரம் புரிகிறது. 
மிக குறுகிய சந்தின் வழியே உள்ளே நுழைந்த ஆங்கிலேய படையினர் வெளியேறும் வழியை (மிகப்பெரிய கதவு) அடைத்து ஏராளமானவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். ஓரமாக இருக்கும் ஒரு கிணற்றில் குதித்து பலர் உயிர் துறந்துள்ளனர்.
இவர்கள் எல்லாம் யார்?
அப்படி உயிர் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இப்படி நாட்டை நேசிக்கும் அளவுக்கு நாடு என்ன செய்தது?
பல கேள்விகள் என் மனதுள்ளே.
இதை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராமல் போகாது
ஒரு சுவர் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த இடங்களை கண்ணாடியிட்டு பாதுகாத்து வருகின்றனர்.
இந்த இடம் பஞ்சாபின் அமிர்தசரசில் பொற்கோவிலுக்கு சிறிது தூரம் முன்னதாக உள்ளது. வெளியே வரும் வழியில் ஜெனரல் டயரை இங்கிலாந்து வரை சென்று சுட்டு கொன்று மரண தண்டனை பெற்ற தியாகி உத்தம்சிங்கின் அஸ்தி இங்கு ஒரு குடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. எத்தனை சின்ன வயதில் எவ்வளவு பெரிய தியாகம்!
இதுபோன்ற இடங்களை நேரில் சென்று பார்க்கும்போது மட்டுமே பெற்ற சுதந்திரத்தின் அருமை புரியும். தேசப்பற்று மிக்க அடுத்த தலை முறையை உருவாக்க நாம் பிள்ளைகளை இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டியது அவசியம். .

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...