பருப்பு பொடி |
பருப்பு பொடி
தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு - 200 கிராம்
மிளகு - 2 ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறிது
வர (நீள) மிளகாய் - 5 .
கல்லு உப்பு - தேவைக்கு
வாணலியை அடுப்பில் வைத்து, சூடேறியதும், ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டு, கட்டி பெருங்காய கட்டியை பொரிக்க வேண்டும்.
பருப்பு, மிளகாய், மிளகு எல்லாம் வாணலியில் போட்டு எண்ணெய் இல்லாமல் சிறு தீயில் சிவக்க வறுக்கவும்.
மிளகாயை கையில் வைத்து நசுக்கி பார்த்தால் மிளகாய் உடையணும். இதுதான் சரியான வறுபட்ட பதம்.
ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு, viper ல் வைத்து அரைக்கவும். மிக்ஸிய ஃபுல்லா ஓட விட்டால் சூட்டில் taste காணாமல் விடும்.
சற்றே காற்றாட வைத்திருந்து, பிறகு டப்பாவில் மாற்றி வைக்கலாம்.
வறுத்தெடுத்த நீள மிளகாய், து.பருப்பு&மிளகு |
மிக்ஸியில் அரைக்கவும் |
பருப்பு பொடி ரெடி |
No comments:
Post a Comment