எள்ளு பொடி |
அடுப்பில் கடாய் வைத்து, சூடானதும் எள்ளு போட்டு வறுத்தெடுக்கவும். எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும். எண்ணெய் சேர்த்தால் எள் பொரிந்து வராது.
வறுத்த எள்ளை ஆற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து, சூடானதும், அரை கப் உளுத்தம் பருப்பு, அரை கப் கடலை பருப்பு, பத்து வர (நீள) மிளகாய் போட்டு நிதானமாக வறுக்கவும். நன்கு சிவந்து வந்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்புகள், மிளகாய் மற்றும் கல் உப்பு சேர்த்து அரைக்கவும். முக்கால் பதம் அரை பட்டதும் எள்ளை சேர்த்து நைசாக அரைக்கவும்..
எடுத்த எடுப்பில் எள்ளை சேர்த்து போட்டு அரைத்தால் பருப்பு மசி படாது..
அரைத்த எள்ளு பொடியை சிறிது நேரம் திறந்து வைத்த பின் ஜாடியில் போட்டு மூடி வைக்கலாம்.
வறுத்த எள் |
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு & நீள மிளகாய் வறுத்து எடுத்தது |
No comments:
Post a Comment