கிடாரங்கா ஊறுகாய்
நாம் பொதுவாக நாரத்தை, எலுமிச்சை ஊறுகாய் பயன் படுத்தி இருப்போம். கிடாரங்காய் தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாத காய். இதுவும், நாரத்தை (நார்த்தங்காய்), எலுமிச்சை வகையை சேர்ந்ததுதான். கிடாரங்காய் போன்றே கொளிஞ்சிக்காய், பம்ப்ளிமாஸ் என்று நமக்கு அதிகம் தெரியாத Citrus வகை பழங்கள் பல உள்ளன.
கிடாரங்காய் நாரத்தையை விட அளவில் பெரிதாக இருக்கும். கடா நாரத்தை ...அதாவது பெருநாரத்தை என்ற அர்த்தத்தில் கிடாரங்காய் என்று பெயர் வந்திருக்கலாம். திண்டுக்கல் அருகே தாண்டிக்குடியில் கிடாரங்காய் விளைகிறது. இருந்தாலும் பரவலாக கிடைப்பதில்லை. தேடிச் சென்றுதான் வாங்க வேண்டும். எனக்கு தெரிந்த வரையில் சென்னை மாம்பலம் மார்க்கட், திருச்சி ஆண்டார் வீதி ஆகிய இடங்களில் கிடாரங்காய் கிடைக்கிறது. கிடாரங்காய் ஊறுகாய், கிடாரங்காய் இனிப்பு பச்சடி, கிடாரங்காய் சாதம் ஆகியவை செய்யலாம். இங்கே சுவையில் சிறந்த கிடாரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். |
கிடாரங்கா |
கிடாரங்கா - 1
மிளகாய் பொடி -
மிளகாய் பொடி -
2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
நல்லெண்ணெய் - 100 மி.லி.
உப்பு - 1 ஸ்பூன்
கடுகு - தாளிக்க
தூள் பெருங்காயம் - சிறிது
கிடாரங்காயை பொடிப் பொடியாக வெட்டவும்.
வாயகன்ற வாணலியை, அடுப்பில் வைத்து,
வாணலி சூடானதும்,
100மி.லி. நல்லெண்ணெய் ஊற்றி,
எண்ணெய் சூடானதும், கடுகை போடவும்.
கடுகு வெடித்தவுடன், நறுக்கிய கிடாரங்காயை போட்டு, நன்கு கிளறவும். கிடாரங்காய் ஓரளவு வெந்தவுடன் உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். பிறகு, நன்கு கிளறி ஒரு தட்டை போட்டு மூடவும். 5 நிமிட நேரம் வெந்த பிறகு, தட்டை திறந்து, கடாய் ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். சூடு ஆறும் வரை வாணலியிலேயே வைத்திருக்கவும். நன்கு ஆறிய பிறகு, உலர்ந்த பாத்திரத்தில் மாற்றி, உபயோகிக்கவும்.

கிடாரங்காய் ஊறுகாய் பித்தத்திற்கு நல்லது. இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.
மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.
கிடாரங்காய் ஊறுகாய் சாதம் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.
கிடாரங்காய் ஊறுகாய் சாதம் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
நார்த்தங்காய் , எலுமிச்சை ஊறுகாய் அளவு புளிப்பு இருக்காது. இந்த ஊறுகாய் தனிப் பட்ட வாசனையோடு நன்றாக இருக்கும்.
கிடாரங்காயை சிறு சிறு துண்டுகளாக்கவும்.
கிடாரங்காய் ஓரளவு வெந்தவுடன், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி, திரும்பவும் ஒரு தட்டை போட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
கிடாரங்காயை சிறு சிறு துண்டுகளாக்கவும்.
100 மி.லி. எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகை வெடிக்க விட்டு, கிடாரங்காய் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
கிடாரங்காய் ஓரளவு வெந்தவுடன், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி, திரும்பவும் ஒரு தட்டை போட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
5 நிமிடம் கழித்து, மூடியை திறந்து, நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
கிடாரங்கா ஊறுகாய் ரெடி.
அடுப்பை அணைக்குமுன், கடாய் ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளற வேண்டும்.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், ஊறுகாய் சூடு ஆறும்வரை வாணலியில் வைத்திருந்து, சூடு ஆறிய பிறகே பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். காரணம், கடாய் சூட்டில் கிடாரங்கா ஊறுகாய் soft ஆக மாறும். சூடாக பாத்திரத்தில் மூடி வைத்தால் நீர்விட்டு கெட்டுப் போகும்.
1 comment:
படங்களுடன் சிறப்பான விளக்கம்... நன்றி...
செய்து பார்த்திடுவோம்...
Post a Comment