பல வருடங்களுக்கு முன், திருவையாறில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். கூப்பிடும் தூரத்தில் காவிரி ஆறு. அப்போது தண்ணீர் கரை புரண்டு ஓடியது. மாந்தோப்பு பார்த்த வீடு. வீட்டின் முகப்பில் இரு புறமும் அகண்ட திண்ணைகள். மூன்று படி ஏறி உள்ளே சென்றால் ஹால். ஹாலுக்கு நடுவில் முற்றம். முற்றம் தாண்டியதும், ஹாலுக்கு இடது பக்கமாக கிச்சன். வலது புறம் ஒரு ரூம். இரண்டுக்கும் நடுவில் புழக்கடை கதவு. வெளியே சென்றால், வீட்டிற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் தரும் தோட்டம். வீட்டின் வாசலில் இருந்து தோட்டம் வரை சென்று வந்ததும் கால் வலித்தது.
தகவல் தெரிவிக்காமல் நான் சென்ற போது நேரம் பகல் 12மணி. கொல்லைப்புற தோட்டத்திலிருந்து real garden fresh காய்கள் பறித்து வரப்பட்டன. simple cooking. அரை மணி நேரத்தில் சாப்பாடு இலையில். தலை வாழை இலையில் சாப்பாடு போடுவது விருந்தினருக்கு அளிக்கப்படும் மரியாதை. மாசற்ற இயற்கை சூழலில், காவிரி தண்ணீர் தந்த அற்புத சுவையோடு கூடிய அறுசுவை விருந்து.
தமிழகத்தில் பிராமிணர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாம் வளமான ஆற்றங்கரை ஓரங்கள் தான். பாலாரின் ஓரத்தில் காஞ்சிபுரம், காவிரி டெல்டாவில் தஞ்சை மற்றும் கும்பகோணம், தாமிரபரணி தாலாட்டும் திருநெல்வேலி. இயற்கையின் கொடை அவர்கள் வாழ்வை வளமாக்கியது. கலைகள் வளர்ந்தன. உலகின் புராதன சாப்பாட்டு நாகரிகங்களில் ஒன்று உருவானது. சுவையான, 'ரிச்'சான, ஆரோக்கியமான சாப்பாட்டு முறை அது. பிராமணர்களின் கல்யாண அல்லது பண்டிகை கால உணவு பற்றி பார்ப்போம். எதை சமைப்பது, எப்படி சமைப்பது, எந்த வரிசையில் பரிமாறுவது, எப்படி சாப்பிடுவது என்று வரையறுக்கப்பட்ட சாப்பாட்டு கலாச்சாரம் அது. இதோ உங்களுக்காக..........
பரிமாறும் முறை
இலையை அலம்பி, அதன் நுனி சாப்பிடறவாளுக்கு இட பக்கம் வர்ற மாதிரி போடணும். இலையின் மேல்பக்கம், இலைக்கு வெளியே, இடது ஓரத்தில் தீர்த்தம் ஒரு டம்ளரில் வைக்கணும்.
ஒரு சொட்டு பால் இலைக்கு நடுவில விடணும்.
இலைக்கு நடுவில கீழ் பகுதியில சாதத்தை சாதிக்கணும். உருக்கின நெய்யை, சாதத்து மேல விடணும்.
சாதத்துல குழம்பு
சேக்கணும்.
குழம்பு சாதம் சாப்ட்டப்றம், சாதம் போட்டு சாத்தமுது குத்தணும்.
சாத்தமுது சாதம் சாப்பிடற போதே,
இலையோட மேல்
பக்கத்துல, sweet, காரம்,
ஊறுகாய், கலந்த சாதம் இதெல்லாம் சாதிக்கணும்.
ஊறுகாயை இலையோட இடது பக்க ஓரமா சாதிக்கணும்.
அப்புறம், திருக்கண்ணமுது.
திரும்ப சாதம் போட்டு, தயிர் அல்லது மோர் குத்தணும். மோர் சாதத்துக்கு தேவை பட்டா தொட்டுக்க குழம்பு குத்தலாம்.
திருகண்ணமுதில் அப்பளத்தை நொறுக்கி போட்டு சாப்பிடுறவாளும் உண்டு.
சாதத்துல, சிறிசா பள்ளம் பறிச்சு அதுக்குள்ள குழம்பு, சாத்தமுது, மோர் விட்டு சிந்தாம சிதறாம சாப்பிடுற அழகே அழகு. குறிப்பா, சாத்தமுது இலைய விட்டு ஓடாம பர பரன்னு சாப்பிடுறத விட உசந்த தியானம் இந்த லோகத்துல என்ன இருக்கு?
சமைக்கிற முறை
வெங்காயம், பூண்டு, முருங்கை காய் , சுரைக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, கசப்பு சுவையுள்ள காய்கறிகள் சேர்க்கக்கூடாது. தேங்காய், ஜீரகம் அரைச்சு விட்ட கூட்டு தான் செய்யணும். கறியமுதுக்கு தேங்காய் போடணும். மோர் குழம்பு, இல்லேண்ணா, பருப்பு குழம்பு தான் செய்யணும்.கலந்த சாதம்னாலே அது புளியோதரைதான். குளித்து சுத்த பத்தமா தான் தளிகை பண்ணனும். விறகு அடுப்பில சமச்சா, தேவாமிர்தமா இருக்கும்.
சாப்பிடுற முறை
கை கால் அலம்பிண்டு, இலை முன்னாடி உக்காந்து, பகவானை தியானிக்கணும். சாதம் போட்டு நெய் குத்தின உடன், சாதத்தை தரையில சிந்தாமல் சாப்பிடணும். மேலே குறிப்பிட்ட பரிமாறும் வரிசை கிரமமா சாப்பிடணும். கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் இவற்றை இலையின் வலது பக்க ஓரமா வைக்கணும். சாதத்தை நன்னா பிசைஞ்சு சாப்பிடணும்.சாதத்தை உருட்டக்கூடாது. குழம்பில உள்ள காயை இலையில ஒரு பக்கமா எடுத்து வச்சிண்டு, மோர் சாதத்துக்கு அந்த தான்களை (குழம்பில உள்ள காய்) தொட்டுக்கணும். இலையில் பரிமாறிய பதார்த்தங்கள் எதையும் வீணடிக்கக்கூடாது. சாப்ட்டப்றம், நம்மை விட பெரியவா எழுந்தப்றம் தான் எழுந்துக்கணும். சாப்ட்டு முடிச்சப்றம், இலையை மடிக்கக் கூடாது.
07-06-2013
A VISUAL COMMENT SENT BY SUNDARRAMG THRU' e-MAIL
கை கால் அலம்பிண்டு, இலை முன்னாடி உக்காந்து, பகவானை தியானிக்கணும். சாதம் போட்டு நெய் குத்தின உடன், சாதத்தை தரையில சிந்தாமல் சாப்பிடணும். மேலே குறிப்பிட்ட பரிமாறும் வரிசை கிரமமா சாப்பிடணும். கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் இவற்றை இலையின் வலது பக்க ஓரமா வைக்கணும். சாதத்தை நன்னா பிசைஞ்சு சாப்பிடணும்.சாதத்தை உருட்டக்கூடாது. குழம்பில உள்ள காயை இலையில ஒரு பக்கமா எடுத்து வச்சிண்டு, மோர் சாதத்துக்கு அந்த தான்களை (குழம்பில உள்ள காய்) தொட்டுக்கணும். இலையில் பரிமாறிய பதார்த்தங்கள் எதையும் வீணடிக்கக்கூடாது. சாப்ட்டப்றம், நம்மை விட பெரியவா எழுந்தப்றம் தான் எழுந்துக்கணும். சாப்ட்டு முடிச்சப்றம், இலையை மடிக்கக் கூடாது.
07-06-2013