பத்திய சமையல்
தேவையான பொருள்கள்
சிறிய எலுமிச்சம் பழம் அளவு புளி, மிளகு, சீரகம் தலா மூன்று ஸ்பூன். உப்பு பெருங்காயம் தேவையான அளவு. தாளிக்க எண்ணெய் , கடுகு சிறிதளவு. கருவேப்பிலை இலை சிறிது.
புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். புளிக்கரைசலை அடுப்பில் வைத்து உப்பை போட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து விடவும். புளி வாசனை மாறிய பிறகு, மிளகு சீரகம் இரண்டையும் கொற கொறப்பாக அரைத்து, கொதிக்கும் புளி கரைசலில் சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கருவேப்பிலை போட்டு, நுரை வந்தவுடன் இறக்கி விடவும். கடுகு தாளித்து கொட்டவும்.
சுரம் வந்தவர்கள், இந்த ரசத்தை குழைந்த சாதத்துடன் சாப்பிட்டால் கசந்த வாய்க்கு இதமாக இருக்கும். உடல் வலி குறையும்.
இந்த ரசம் பார்க்க சிறிது கருப்பாக இருக்கும்.
வாய்க்கு வக்கணையாக சாப்பிட மட்டும் தான் food recipe என்றில்லை. உடலுக்கு ஒரு நோவு வரும்போது தான் என்ன சாப்பிடுவது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கே தான் நமது பாரம்பரிய சமையல் முறைகள் கைகொடுக்கின்றன. அதிக சுரம் இருக்கும் போது புழுங்கல் அரிசி கஞ்சியும், சுரம் குறைய தொடங்கிய நிலையில் சுர ரசமும் சாப்பிட்டு பாருங்கள். இதன் பலனை நீங்களே உணர்வீர்கள்.
No comments:
Post a Comment