சென்னை டிசம்பர் மாத சங்கீத சீசன், சங்கீத ரசிகர்களுக்கு மட்டும் அல்ல. உணவு பிரியர்களுக்கும் தான். அவர்கள் வசதிக்காக, கேண்டீன் உள்ள சபாக்களை மட்டும் வரிசை படுத்தி உள்ளேன். சில சபாக்களில், காலை காபி, டிபன், மதிய உணவு, மாலை டிபன் என்று அதகளம் செய்வார்கள். இன்னும் சில சபாக்களில் மதிய உணவும், மாலை நேரத்தில் இனிப்பு, டிபன், காபி என்று அசத்துவார்கள். மற்ற சபாக்களில், மாலை நேர உணவு கச்சேரி மட்டும் நடத்துவார்கள். குறிப்பாக, உணவு கச்சேரி என்று முடிவடைகிறது என்ற தகவல் பலருக்கும் உபயோகமாக இருக்கும். நாட்டிய திருவிழாவின் போது உணவு கச்சேரி இருக்காது. இந்த தகவல்கள், உணவு கச்சேரி முடிந்த பிறகு போய் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க உதவும்.
உங்களுக்காக இதோ "உணவு கச்சேரி" schedule.
மயிலாப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
சபா கேண்டீன் கச்சேரி நாள்
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா மவுண்ட் மணி ஐயர் 14 டிசம்பர் 2016 - 5 ஜனவரி 2017
வித்யாபாரதி கல்யாண மண்டபம்
பீம சேன கார்டன் தெரு
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் பாஸ்கரன் மீனாம்பிகா 10 டிசம்பர் 2016 - 1 ஜனவரி 2017
கிளப் (காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)
முசிறி சுப்பிரமணியம் சாலை
மியூசிக் அகாடமி மின்ட் பத்மநாபன் 15 டிசம்பர் 2016 - 1 ஜனவரி 2017
டி.டி.கே. சாலை
நாரத ஞான சபா மாம்பலம் சாஸ்தாலயா 14 டிசம்பர் 2016 - 1 ஜனவரி 2017
டி.டி.கே. சாலை (காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை )
தியாகராய நகர்
சபா கேண்டீன் கச்சேரி நாள்
தியாக பிரம்ம ஞான சபா மாம்பலம் ஞானாம்பிகா 10 டிசம்பர் 2016-3 ஜனவரி 2017
வாணி மஹால் (காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை)
ஸ்ரீ கிருஷ்ண ஞான சபா ஸ்ரீ கிருஷ்ணா பவன் 11 டிசம்பர் 2016-2 ஜனவரி 2017
20, மஹாராஜபுரம் சந்தானம் சாலை
சென்னை கல்சுரல் அகாடமி ஸ்ரீ ராகவேந்திரா கேடரர்ஸ் 9 டிசம்பர் 2016-4 ஜனவரி 2017
ராமராவ் கலாமண்டபம்
ஹபிபுல்லா சாலை
முத்ரா சேஷா கேடரர்ஸ் 12 டிசம்பர் 2016- 1 ஜனவரி 2017
ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி
கிருஷ்ணா தெரு
தியாகராய நகர்
பாரத் கலாச்சார் கதிர்வேல் கேடரர்ஸ் 10 டிசம்பர் 2016-16 ஜனவரி 2017
பாரத் கலாச்சார் கதிர்வேல் கேடரர்ஸ் 10 டிசம்பர் 2016-16 ஜனவரி 2017
ஸ்ரீ Y.G.P. ஆடிட்டோரியம்
17, திருமலை சாலை
தியாகராய நகர்
தியாகராய நகர்
காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை
சபா கேண்டீன் கச்சேரி நாள்
சென்னையில் திருவையாறு பல நிறுவனங்களின் 18-25 டிசம்பர் 2016
உணவு ஸ்டால்கள்
உணவு ஸ்டால்கள்
தமிழ் இசை சங்கம்
சபா கேண்டீன் கச்சேரி நாள்
ராஜா அண்ணாமலை மன்றம் உணவு வசதி செய்யப் பட்டுள்ளது 21 டிசம்பர் 2016 - 1 ஜனவரி 2017
2 comments:
இதை வருஷா வருஷம் போடக்கூடாதா? இதைவிட நீங்கள் 'இசைக் கச்சேரி' டிசம்பர் சீசனுக்கு வேறு என்ன நல்லது செய்துவிடமுடியும்?
தங்கள் கருத்துக்கு நன்றி. கேண்ட்டீன் நடத்துபவர்கள் பெரும்பாலும் அதே சபாக்களில்தான் "கச்சேரி" நடத்துகிறார்கள். இந்த schedule பெரும்பாலும் மாறுவதில்லை. புதிதாக ஏதாவது ருசித்தால் என் "கச்சேரி" யை blogல் தொடங்கி விடுவேன்.
Post a Comment