ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
மார்கழி என்றதும் சிலருக்கு இறைவன் நினைவு. சிலருக்கு குளிரின் நினைவு. சிலருக்குசங்கீதம் நினைவு. எங்களை போன்றவர்களுக்கு சங்கீத சபாவில் கிடைக்கும் சாப்பாட்டு நினைவு. அதிலும் பீட்சா, பர்கர் போன்ற வந்தேறிகளை விரட்டி விட்டு, தலை வாழை இலை போட்டு சுடச் சுட பரிமாறப்படும் நமது பாரம்பரிய சாப்பாடு என்றால் double ok.
முதலில் உங்களை அழைத்து போகப்போவது ஞானாம்பிகா லஞ்ச்சுக்கு.
உள்ளே நுழைந்ததுமே வாங்க வாங்க என்று வரவேற்ப்பு. டோக்கனை வாங்கி கொண்டு உட்கார்ந்தால், பெரிய இலையை போட்டு காய்கறிகளை தாராளமாக பரிமாறுகிறார்கள்.
ஞானாம்பிகா கதம்ப குழம்பு-
|
முதலில் அன்னாசிப்பழ கேசரி. ஆரம்பத்திலேயே இனிப்பை சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும். அதனால் ஒரு துளி வாயில் போட்டுக் கொண்டு ஓரமாக (இலையில்தான்) வைத்துவிட்டு, சாதத்தை நெய் விட்டு பிசைந்தால், கதம்ப குழம்பு வருகிறது. தாராளமாக வார்க்கப்படும் காய்களை சேர்த்து பிசைந்து, கத்திரிக்காய் காரக்கறி மற்றும் மிக்ஸ்ட் வெஜிடபிள் கறியோடு சாப்பிடத் துவங்கினோம். சூடான அப்பளம் வருகிறது. (அவ்வப்போது freshஆக பொறித்துப் போடுகிறார்கள்). இலையின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள வெண்டைக்காய் புளி மண்டி 16 வருடங்களுக்கு முன் இறந்து போன பாட்டியை நினைவுபடுத்துகிறது. (இது அவரது favourite dish. அவ்வளவு அருமையாக செய்வார்)
ஞானாம்பிகா பச்ச சுண்டக்கா வத்த குழம்பு -
|
அடுத்து வருகிறது பச்சை சுண்டைகாய் வத்தக்குழம்பு . மிக அருமையான preparation. காரணம் சுண்டைக்காயின் துவர்ப்பு தாளாமல் பலரும் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். அதுவும் அருமை.
Next எலுமிச்சை பழம் ரசம். பல நேரத்தில் காலை வாரிவிடும் item இது. பொதுவாக எலுமிச்சை ஜூஸ் பிழியும்போது கை பட்டால் கசந்து போய் ரசம் விரசமாகிவிடும் அப்படி இல்லாமல் இங்கு வெகு கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளதை பாராட்ட வேண்டும்.
இறுதியாக மோர். நல்ல கெட்டியான மோர். சில இடங்களில் கங்கையும் காவிரியும் பெருக்கெடுத்து ஓடும் மோர் பாத்திரத்தில். தாராளமாக பரிமாறுகிறார்கள். தொட்டுக்க லெமன் ஊறுகாய்.
மொத்தத்தில் பலே பலே சாப்பாடுன்னா அது ஞானம்பிகாதான்.
ஞானாம்பிகா சாப்பாடு மெனு -சென்னை டிசம்பர் சங்கீத சீசன் |
முகவரி:
ஞானாம்பிகா கேட்டரர்ஸ், ஸ்ரீ தியாக பிரம்ம ஞான சபா, வாணி மஹால், G.N, செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை.
டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரை "சென்னை டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகள்" நடக்கும். அதுவரை மட்டுமே இந்த உணவகம் இயங்கும்.
முந்துவோருக்கே முதல் சாப்பாடு.
சாப்பாட்டு கச்சேரி தொடரும்......
No comments:
Post a Comment