எனது எழுத்துலகில் என் மனைவி சம உரிமை கேட்டதால் இந்த பக்கம் அவரால் நிரப்பப்பட்டுள்ளது. Over to Srividya Raman.
என் கணவரின் ப்ளாக் பற்றி கமெண்ட் போஸ்ட் செய்ய உட்கார்ந்தேன் . மொத்தம் 58 page views வந்த நிலையில் இதை எழுதுகிறேன் sunday evening டிபன் செய்ய வேண்டாம் என்றுதான் organic food mela போகிறேன் என்று சொன்னவுடன் ஒ கே சொன்னேன். போய் விட்டு வந்ததில் இருந்து ஐயோ சாமி முடியல. ஒரே புல்லரிப்புதான் போங்க. கிராமத்து பாஷையிலே சொன்னா காணாததை கண்ட மாதிரி. நடுராத்திரி வரை புலம்பி தள்ளிவிட்டார். அப்படி இருந்துது இப்படி இருந்துது என்று. அடுத்த நாள் அம்மாவிடம் கேட்டேன். வரகு சாமை தெரியுமா என்று. ஓ குருவி சாப்பிடுமே அதானே என்றார். கிராமத்தில் இருந்து வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணிடம் கேட்டேன் . வரகு சாமை எல்லாம் கேள்வி பட்டிருக்கிறாரா என்று. பஞ்ச காலத்தில் சாபபிடுவோம் என்றார். ஆகா கிராமத்தானுக்கே பஞ்ச காலத்தில் சாப்பிடும் உணவு பட்டணத்தில் exhibition போட்டு விற்கிறார்களே என்றுதான் தோன்றியது. ஒ.கே . சென்னை போன்ற சிட்டியில் எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் ஒன்றை யோசித்து பார்த்தால் அடிப்படையில் நம்மை பிடித்துள்ள வெள்ளை மோகம்தான் முழுவதும் அரிசியில் கொண்டு விட்டுவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. எளிய மனிதனின் உணவு சிறு தானியம் . இன்று seed bankல் இருந்து இளைஞர்கள் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் பீட்சா burger இடம் இருந்து விடுதலை பெற்று native food எனப்படும் சிறு தானியம் பக்கம் திரும்பியது சந்தோஷம்தான். அடிப்படையில் ஒன்றை புரிந்து கொள்ளாமல் போனதன் விளைவுதான் (waste)fast food மோகம். . சிறு தானியம் எல்லாம் நம்ம claimate க்கு தகுந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டது . இதை புரிந்து கொள்ளாமல் எதை எதையோ தின்று முடித்துவிட்டு இப்போது குதிரைவாலிக்கு கொடிபிடிக்க தொடங்கி இருக்கிறார்கள். better late than never.
இப்ப எங்க வீட்டில் கொள்ளு துவையல்தான் . வரகு அரிசி பொங்கல்தான். சாமை தயிர் சாதம்தான். சாப்பிட நல்லாதான் இருக்கு . (நல்லா வெட்டு வெட்டுன்னு வெட்டியிருக்காங்க நம்ம ஆளுங்க) நீங்களும் ஒருநாள் வர்றீங்களா ?
1 comment:
Hi,
I would like to invite you to our FB group page...
https://www.facebook.com/groups/265202350295915/
regards
Narasimhan Ramanujam
Post a Comment