Friday, 21 March 2014

வாழைப்பூ அடை

வாழைப் பூ அடை
நான்  முன்னரே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்....அடை ஒரு முழுமையான, ஆரோக்கியமான உணவு. நம்மூரில் ஹோட்டல்களில் கிடைக்கும் அடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, வீட்டில் செய்யும் அடை.  இரண்டு அடை சாப்பிட்டால் போதும். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போலிருக்கும். அனைத்து வகை பருப்புகள், அரிசி, வாழைப்பூ என்று பலவித பொருள்கள் சேர்த்து செய்வதால் இது ஒரு சிறந்த சரிவிகித உணவாகிறது.

வாழைப்பூ வடையை விட அரோக்கியமானது வாழைப்பூ அடை. அடை மாவோடு சரிசம அளவில் வாழைப்பூ சேர்க்க வேண்டும்.







வாழைப்பூ  (பொடிப் பொடியாக நறுக்கியது )     - 2 கப்                           
                                                                                                          



பு ழுங்கல் அரிசி - 1 கப்  


ப ச்சை அரிசி - ஒரு பிடி 

து வரம் பருப்பு - 1/2 கப்    
ளுத்தம் பருப்பு - 1/4 கப்        
க டலை பருப்பு - ஒரு பிடி   
பா சி  பருப்பு - 1/4 கப்
ல்லெண்ணெய் - அடை வார்க்க 

பெருங்காயம் - சிறிது 

வர மிளகாய் - 10

உப்பு - தேவைக்கு 
     

முதலில் அடை மாவு தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

அரிசி பருப்பு வகைகளை ஒன்றாகவும், வற்றல் மிளகாய், கட்டி பெருங்காயத்தை தனித் தனியாகவும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். 

மூன்று மணி நேரம் கழித்து, கைப்பிடி அளவு ஊறிய அரிசி எடுத்து, வற்றல் மிளகாயோடு சேர்த்து நன்கு அரைக்கவும். 

மிளகாய் நன்கு மசிந்ததும், அரிசி, பருப்பு கலவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொர கொரப்பாக அரைக்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் அளவாக சேர்த்தால்தான் மாவு கெட்டியாக இருக்கும். 

கெட்டியான, கொர கொரப்பான மாவுதான் அடைக்கு நல்ல சுவை தரும்.

இனி, வாழைப்பூ அடை வார்ப்போம்....

அடை மாவு 
பொடிப் பொடியாக நறுக்கிய வாழைப் பூ 
அடை மாவில் வாழைப் பூ சேர்த்து நன்கு கலக்கவும் 
வாழைப் பூ அடை மாவு
அடை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அடை மாவை ஊற்றவும்.
மூடி வைத்து நன்கு வேக வைக்கவும் 
திருப்பி போட்டு, சிறிது எண்ணெய் விட்டு, வேக வைக்கவும் 
வாழைப் பூ அடை ரெடி

Thursday, 20 March 2014

முடக்கத்தான் கீரை தோசை

முடக்கத்தான்  கீரை தோசை 


முடக்கத்தான் கீரை...இது முடக்கு நீக்கும் கீரை. அதாவது மூட்டு வலி உள்ளிட்ட பலவித உடல் வலிகளை போக்கும். 'முடக்கு அறுத்தான் கீரை' என்பது முடக்கத்தான் கீரை ஆகியிருக்கும் என நினைக்கிறேன். ஒருவேளை சாப்பிட்டாலே வலி நிவாரணம் கணிசமான அளவில் இருக்கும். வீட்டுத் தோட்டத்தில், அல்லது சிறு தொட்டியில் வளர்க்கலாம். அடிக்கடி சமையலில் சேர்த்து வந்தால் நல்ல பலன் இருக்கும். சிலருக்கு காலையில் தூங்கி எழும்போது உடலில் ஒருவித stiffness இருக்கும். படுக்கையில் இருந்த எழவே சிரமமாக இருக்கும். இந்த கீரை உபயோகித்தால் உடனடியாக இந்த stiffness குறையும்.
முடக்கத்தான் கீரை 

தேவையான பொருள்கள் 

முடக்கத்தான் கீரை  ஆய்ந்த கீரை... - இரண்டு கப் 

புழுங்கல்  அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப் 
வெந்தயம் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு




செய்வது எப்படி?

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும், மூழ்கும் அளவு தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் grinderல் போட்டு நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு கரண்டி மாவை எடுத்து, சுத்தம் செய்து ஆய்ந்த முடக்கத்தான் கீரையும் சேர்த்து, ஒரு மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். அரைத்த மாவை, மீதமுள்ள தோசை மாவோடு நன்கு கலந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை தோசை ரெடி.


முடக்கத்தான் தோசை... வல்லாரை துவையலுடன் 


தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம். வல்லாரை துவையலும் முடக்கத்தான் தோசைக்கு நல்ல combination. இந்த தோசையை தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல் தனியாகவே சாப்பிடலாம். மருத்துவ மூலிகை என்றதும் கசப்பாக, மருந்துபோல் இருக்கும் என நினைக்க வேண்டாம். தோசை சுவை நன்றாகவே இருக்கும். 







ஆய்ந்து, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை 














முடக்கத்தான் தோசை மாவு 












முடக்கத்தான் தோசை  ரெடியாகிறது......












திருப்பிப் போட்டு வேக வைத்தால் முடக்கத்தான் தோசை ரெடி....







முறுகலாகவும் முடக்கத்தான் தோசை வார்க்கலாம் 


Tuesday, 18 March 2014

கிடாரங்கா ஊறுகாய்

கிடாரங்கா ஊறுகாய்







நாம் பொதுவாக நாரத்தை, எலுமிச்சை ஊறுகாய் பயன் படுத்தி இருப்போம். கிடாரங்காய் தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாத காய். இதுவும், நாரத்தை (நார்த்தங்காய்), எலுமிச்சை வகையை சேர்ந்ததுதான். கிடாரங்காய் போன்றே கொளிஞ்சிக்காய், பம்ப்ளிமாஸ் என்று நமக்கு அதிகம் தெரியாத Citrus வகை பழங்கள் பல உள்ளன. 

கிடாரங்காய் நாரத்தையை விட அளவில் பெரிதாக இருக்கும். கடா நாரத்தை ...அதாவது பெருநாரத்தை என்ற அர்த்தத்தில் கிடாரங்காய் என்று பெயர் வந்திருக்கலாம். 

திண்டுக்கல் அருகே தாண்டிக்குடியில் கிடாரங்காய் விளைகிறது.

இருந்தாலும் பரவலாக கிடைப்பதில்லை. தேடிச் சென்றுதான் வாங்க வேண்டும். எனக்கு தெரிந்த வரையில் சென்னை மாம்பலம் மார்க்கட், திருச்சி ஆண்டார் வீதி ஆகிய இடங்களில்  கிடாரங்காய் கிடைக்கிறது.

கிடாரங்காய்  ஊறுகாய், கிடாரங்காய் இனிப்பு பச்சடி, கிடாரங்காய் சாதம் ஆகியவை செய்யலாம். இங்கே சுவையில் சிறந்த கிடாரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கிடாரங்கா 


கிடாரங்கா - 1
மிளகாய் பொடி - 
ஸ்பூன் 
மஞ்சள் தூள்  சிறிது 
நல்லெண்ணெய் 100 மி.லி.
உப்பு - 1 ஸ்பூன் 
கடுகு - தாளிக்க 
தூள் பெருங்காயம் - சிறிது 



                                                         

கிடாரங்காயை  பொடிப் பொடியாக வெட்டவும். 

வாயகன்ற வாணலியை, அடுப்பில் வைத்து, 

வாணலி சூடானதும், 

100மி.லி. நல்லெண்ணெய் ஊற்றி, 

எண்ணெய் சூடானதும்,  கடுகை போடவும். 

கடுகு வெடித்தவுடன், நறுக்கிய கிடாரங்காயை போட்டு, நன்கு கிளறவும். கிடாரங்காய் ஓரளவு வெந்தவுடன் உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். பிறகு, நன்கு கிளறி ஒரு தட்டை போட்டு மூடவும். 5 நிமிட நேரம் வெந்த பிறகு, தட்டை திறந்து, கடாய் ஓரத்தில்  எண்ணெய் பிரிந்து வரும்  வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். சூடு ஆறும் வரை வாணலியிலேயே வைத்திருக்கவும். நன்கு ஆறிய பிறகு, உலர்ந்த பாத்திரத்தில் மாற்றி, உபயோகிக்கவும்.



கிடாரங்காய் ஊறுகாய் பித்தத்திற்கு நல்லது. இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். 

மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.

கிடாரங்காய் ஊறுகாய் சாதம் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.



நார்த்தங்காய் , எலுமிச்சை ஊறுகாய் அளவு புளிப்பு இருக்காது. இந்த ஊறுகாய் தனிப் பட்ட வாசனையோடு நன்றாக இருக்கும்.



கிடாரங்காயை சிறு சிறு துண்டுகளாக்கவும்.




100 மி.லி. எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகை வெடிக்க விட்டு, கிடாரங்காய் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.


கிடாரங்காய் ஓரளவு வெந்தவுடன், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி, திரும்பவும் ஒரு தட்டை போட்டு மூடி வைத்து  வேக வைக்கவும்.





5 நிமிடம் கழித்து, மூடியை திறந்து, நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.


கிடாரங்கா ஊறுகாய் ரெடி.

அடுப்பை அணைக்குமுன், கடாய் ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளற வேண்டும்.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், ஊறுகாய் சூடு ஆறும்வரை வாணலியில் வைத்திருந்து, சூடு ஆறிய பிறகே பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். காரணம், கடாய் சூட்டில் கிடாரங்கா ஊறுகாய் soft ஆக மாறும். சூடாக பாத்திரத்தில் மூடி வைத்தால் நீர்விட்டு கெட்டுப் போகும்.

Sunday, 16 March 2014

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம் 


கோடை வந்து விட்டது. வேப்பம்பூ சீசனும் துவங்கி விட்டது. பங்குனி, சித்திரை மாதங்களில் வேப்பம்பூ பூக்கும். வேப்பமர காற்று உடலுக்கு நல்லது. வீட்டை சுற்றி இரண்டு வேப்ப மரம் நட்டு வைத்தால், மொட்டை மாடியில் வேப்பம்பூ தானாக உதிர்ந்து கிடக்கும். மரத்தில் இருந்து பறிக்கும் பூவை விட, தானாக உதிர்ந்த வேப்பம்பூதான் நன்றாக இருக்கும். 

இவ்வாறு சீசனில் சேகரிக்கும் வேப்பம்பூவை வருடம் முழுதும் பயன்படுத்தலாம். சிலர் மொட்டை மாடியில் வேப்பம்பூ உதிரும் இடத்தில் பேப்பரை விரித்து வைத்து விடுவார்கள். தூசி, தும்பு இல்லாத வேப்பம்பூ கிடைத்து விடும். வேப்பம்பூ காற்று வாங்கும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம்பூவை வாங்கி பயன்படுத்தலாம்.

வேப்பம்பூ பித்தத்தை குறைக்கும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றும். சர்க்கரை வியாதியை கட்டுப் படுத்தும்.

காய வைத்த வேப்பம்பூவை  நன்கு வறுத்து, சுடு சாதத்தில் உப்புடன் சேர்த்து கலந்து சாப்பிடுவது உண்டு. வேப்பம்பூவை வறுத்து வேப்பம்பூ ரசம் செய்யலாம்.



காய்ந்த வேப்பம்பூ - ஒரு பிடி 
புளி - எலுமிச்சை அளவு  
வர மிளகாய் - 4
பெருங்காயம் 
உப்பு






புளியை இரண்டு டம்ப்ளர் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு போட்டு ஒரு கொதி விடவும். கொதி வந்ததும் அடுப்பை simல் வைத்து புளி வாசனை நீங்கும் வரை கொதிக்க விடவும். அரை டம்ப்ளர் தண்ணீர் சேர்க்கவும். லேசாய் நுரைத்தவுடன் கீழே இறக்கவும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வர மிளகாய் (வர மிளகாயை கிள்ளி போடவும்), பெருங்காயம் போட்டு நன்கு வறுக்கவும். வேப்பம்பூவையும் சேர்த்து நன்கு வறுக்கவும். வறுக்கும்போது, வேப்பம்பூ மூழ்கும் அளவு எண்ணெய் ஊற்றி இருக்க வேண்டும்.

பொறித்த வேப்பம்பூ, மிளகாய்களை கொதித்து இறக்கிய ரசத்தில் போட்டு, கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.

வேப்பம்பூ ரசம் ரெடி....

சூடான சாதத்தில் வேப்பம்பூ ரசம் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்.

வேப்பம்பூ 



                                                     புளியை நீர்க்க கரைத்து கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கிள்ளிய வர மிளகாய், கடுகு, பெருங்காயம் சிவக்க வறுக்கவும்.


வேப்பம்பூவையும் போட்டு நன்கு வறுக்கவும். 


நன்கு வறுத்த வேப்பம்பூ 
வறுத்த வேப்பம்பூ, கடுகு, பெருங்காயத்தை கொதித்து, இறக்கி வைத்த  ரசத்தில் சேர்க்கவும். 10 நிமிடம்  மூடி  வைக்கவும்.


வேப்பம்பூ ரசம் ரெடி 


கொதிக்க வைத்த புளிக் கரைசலை அடுப்பில் இருந்து இறக்கி வைத்த பிறகுதான், வறுத்த வேப்பம்பூ சேர்க்க வேண்டும். வேப்பம்பூ சேர்த்தபின் கொதிக்க விட்டால் கசந்து விடும்.

Saturday, 15 March 2014

வாழைப்பூ கூட்டு

வாழைப் பூ கூட்டு
வாழைப் பூ - 1
துவரம் பருப்பு - 100 கிராம்  
சாம்பார் பொடி - 1 1/2 ஸ்பூன் 

புளிக் கரைசல் - சிறிய  எலுமிச்சை அளவு புளி எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும்.

பச்சை மிளகாய் - 1
உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கடுகு, பெருங்காயம் - தாளிக்க

கருவேப்பிலை - சிறிது 
மஞ்சள் பொடி - சிறிது 
தக்காளி - விரும்பினால் 





















துவரம் பருப்பை வேக வைக்கவும். 






வாழைப் பூவை கள்ளன் நீக்கி ஆய்ந்து, பொடிப் பொடியாக நறுக்கி  மோர் கலந்த தண்ணீரில் போடவும். மோர் சேர்க்கவில்லை என்றால் வாழைப் பூ கறுத்து விடும்.





புளி கரைசல் 






நறுக்கிய வாழைப் பூவை புளி ஜலத்தில் வேக வைக்கவும்.


ஒரு கொதி வந்தவுடன் சிறிது மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


வாழைப் பூ நன்கு வெந்தவுடன், துவரம் பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைக்கவும்.

கூட்டு கெட்டியானவுடன் தாளித்து கொட்டி, இறக்கவும்.

கூட்டு நீர்த்து இருந்தால், சிறிது அரிசி மாவை கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து கொட்டி கொதி வந்ததும் இறக்கவும்.

காரம் தேவைப் படுபவர்கள்  வாழைப் பூவோடு ஒரு பச்சை மிளகாய் கீறி சேர்த்து வேக வைக்கலாம்.

பருப்பு ரச  சாதத்திற்கு, வாழைப் பூ கூட்டு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

விரும்பினால் ஒரு தக்காளி பொடியாக நறுக்கி, வாழைப் பூவோடு சேர்த்து வேக வைத்து போடலாம்.

வாழைப்பூ கூட்டு ரெடி 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...