Thursday, 13 March 2014

கிடாரங்காய் பச்சடி



கிடாரங்காய் இனிப்பு பச்சடி 


கிடாரங்காய் citrus வகையை சார்ந்த காய். எலுமிச்சை, நாரத்தை பயன் படுத்திய அளவு கிடாரங்காயை நாம் பயன்படுத்தியிருக்க மாட்டோம். கிடாரங்காய் பார்க்க சாத்துக்குடியை விட பல மடங்கு பெரிதாக இருக்கும். பித்தத்திற்கு நல்லது. மிகுந்த மருத்துவ குணம் உடையது. சுவையும் மிக நன்றாக இருக்கும்.

தேவையான பொருள்கள் 











முழு கிடாரங்காய் - 1 



வெல்லம்         - இரண்டு  கப் 
கடுகு, வர மிளகாய் - தாளிக்க 
எண்ணெய் - தாளிக்க 






செய்வது எப்படி?













கிடாரங்காயை பொடிப் பொடியாக நறுக்கவும்.




மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும். 

ஏறக்குறைய கூழாகும் அளவு நன்கு வேக வேண்டும்.






வெல்லத்தை பொடிக்கவும்.












வேக வைத்த கிடாரங்காயில் வெல்லம் சேர்க்கவும்.


வெல்லத்தை நன்கு கலந்து சற்று நேரம் கொதிக்க வைக்கவும்.
இறக்கி வைத்து தாளித்துக் கொட்டவும்.

கிடாரங்கா இனிப்பு பச்சடி ரெடி 


கிடாரங்காய் இனிப்பு பச்சடியை Fridgeல் வைத்து ஓரிரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிடாரங்காய் அதிகம் கிடைப்பதில்லை...

குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...

Unknown said...

if kidarangkai is not available, you can prepare this pachchadi with mangai, kichilikkai, narthangai. If you use some puli extract and add some salt, and then season with vathatha milagai, green chillies, ingi etc., and ofcourse jaggery; it will taste good; goes well with idly, dosai, adai, upma and even chappathis
best wishes Latha Sudhakar

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...