|
வாழைப் பூ அடை
நான் முன்னரே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்....அடை ஒரு முழுமையான, ஆரோக்கியமான உணவு. நம்மூரில் ஹோட்டல்களில் கிடைக்கும் அடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, வீட்டில் செய்யும் அடை. இரண்டு அடை சாப்பிட்டால் போதும். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போலிருக்கும். அனைத்து வகை பருப்புகள், அரிசி, வாழைப்பூ என்று பலவித பொருள்கள் சேர்த்து செய்வதால் இது ஒரு சிறந்த சரிவிகித உணவாகிறது.
வாழைப்பூ வடையை விட அரோக்கியமானது வாழைப்பூ அடை. அடை மாவோடு சரிசம அளவில் வாழைப்பூ சேர்க்க வேண்டும்.
வாழைப்பூ (பொடிப் பொடியாக நறுக்கியது ) - 2 கப்
து வரம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
க டலை பருப்பு - ஒரு பிடி
பா சி பருப்பு - 1/4 கப்
நல்லெண்ணெய் - அடை வார்க்க
பெருங்காயம் - சிறிது
வர மிளகாய் - 10
உப்பு - தேவைக்கு
|
முதலில் அடை மாவு தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அரிசி பருப்பு வகைகளை ஒன்றாகவும், வற்றல் மிளகாய், கட்டி பெருங்காயத்தை தனித் தனியாகவும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
மூன்று மணி நேரம் கழித்து, கைப்பிடி அளவு ஊறிய அரிசி எடுத்து, வற்றல் மிளகாயோடு சேர்த்து நன்கு அரைக்கவும்.
மிளகாய் நன்கு மசிந்ததும், அரிசி, பருப்பு கலவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொர கொரப்பாக அரைக்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் அளவாக சேர்த்தால்தான் மாவு கெட்டியாக இருக்கும்.
கெட்டியான, கொர கொரப்பான மாவுதான் அடைக்கு நல்ல சுவை தரும்.
இனி, வாழைப்பூ அடை வார்ப்போம்....
|
அடை மாவு |
|
பொடிப் பொடியாக நறுக்கிய வாழைப் பூ |
|
அடை மாவில் வாழைப் பூ சேர்த்து நன்கு கலக்கவும் |
|
வாழைப் பூ அடை மாவு |
|
அடை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அடை மாவை ஊற்றவும். |
|
மூடி வைத்து நன்கு வேக வைக்கவும் |
|
திருப்பி போட்டு, சிறிது எண்ணெய் விட்டு, வேக வைக்கவும் |
|
வாழைப் பூ அடை ரெடி |
1 comment:
வாழைப் பூ எப்போது சேர்க்க வேண்டும் என்று வீட்டில் கேட்டார்கள்... பிறகு படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்னார்கள்... நன்றி...
Post a Comment