Sunday 16 March 2014

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம் 


கோடை வந்து விட்டது. வேப்பம்பூ சீசனும் துவங்கி விட்டது. பங்குனி, சித்திரை மாதங்களில் வேப்பம்பூ பூக்கும். வேப்பமர காற்று உடலுக்கு நல்லது. வீட்டை சுற்றி இரண்டு வேப்ப மரம் நட்டு வைத்தால், மொட்டை மாடியில் வேப்பம்பூ தானாக உதிர்ந்து கிடக்கும். மரத்தில் இருந்து பறிக்கும் பூவை விட, தானாக உதிர்ந்த வேப்பம்பூதான் நன்றாக இருக்கும். 

இவ்வாறு சீசனில் சேகரிக்கும் வேப்பம்பூவை வருடம் முழுதும் பயன்படுத்தலாம். சிலர் மொட்டை மாடியில் வேப்பம்பூ உதிரும் இடத்தில் பேப்பரை விரித்து வைத்து விடுவார்கள். தூசி, தும்பு இல்லாத வேப்பம்பூ கிடைத்து விடும். வேப்பம்பூ காற்று வாங்கும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம்பூவை வாங்கி பயன்படுத்தலாம்.

வேப்பம்பூ பித்தத்தை குறைக்கும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றும். சர்க்கரை வியாதியை கட்டுப் படுத்தும்.

காய வைத்த வேப்பம்பூவை  நன்கு வறுத்து, சுடு சாதத்தில் உப்புடன் சேர்த்து கலந்து சாப்பிடுவது உண்டு. வேப்பம்பூவை வறுத்து வேப்பம்பூ ரசம் செய்யலாம்.



காய்ந்த வேப்பம்பூ - ஒரு பிடி 
புளி - எலுமிச்சை அளவு  
வர மிளகாய் - 4
பெருங்காயம் 
உப்பு






புளியை இரண்டு டம்ப்ளர் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு போட்டு ஒரு கொதி விடவும். கொதி வந்ததும் அடுப்பை simல் வைத்து புளி வாசனை நீங்கும் வரை கொதிக்க விடவும். அரை டம்ப்ளர் தண்ணீர் சேர்க்கவும். லேசாய் நுரைத்தவுடன் கீழே இறக்கவும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வர மிளகாய் (வர மிளகாயை கிள்ளி போடவும்), பெருங்காயம் போட்டு நன்கு வறுக்கவும். வேப்பம்பூவையும் சேர்த்து நன்கு வறுக்கவும். வறுக்கும்போது, வேப்பம்பூ மூழ்கும் அளவு எண்ணெய் ஊற்றி இருக்க வேண்டும்.

பொறித்த வேப்பம்பூ, மிளகாய்களை கொதித்து இறக்கிய ரசத்தில் போட்டு, கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.

வேப்பம்பூ ரசம் ரெடி....

சூடான சாதத்தில் வேப்பம்பூ ரசம் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்.

வேப்பம்பூ 



                                                     புளியை நீர்க்க கரைத்து கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கிள்ளிய வர மிளகாய், கடுகு, பெருங்காயம் சிவக்க வறுக்கவும்.


வேப்பம்பூவையும் போட்டு நன்கு வறுக்கவும். 


நன்கு வறுத்த வேப்பம்பூ 
வறுத்த வேப்பம்பூ, கடுகு, பெருங்காயத்தை கொதித்து, இறக்கி வைத்த  ரசத்தில் சேர்க்கவும். 10 நிமிடம்  மூடி  வைக்கவும்.


வேப்பம்பூ ரசம் ரெடி 


கொதிக்க வைத்த புளிக் கரைசலை அடுப்பில் இருந்து இறக்கி வைத்த பிறகுதான், வறுத்த வேப்பம்பூ சேர்க்க வேண்டும். வேப்பம்பூ சேர்த்தபின் கொதிக்க விட்டால் கசந்து விடும்.

1 comment:

Unknown said...

Alternately use green chillies and more milagai (oorugai milagai); goes good with it and they need not be thrown off; can be swallowed with more satham.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...