முடக்கத்தான் கீரை |
தேவையான பொருள்கள்
முடக்கத்தான் கீரை - ஆய்ந்த கீரை... - இரண்டு கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப் வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்வது எப்படி?
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும், மூழ்கும் அளவு தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் grinderல் போட்டு நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு கரண்டி மாவை எடுத்து, சுத்தம் செய்து ஆய்ந்த முடக்கத்தான் கீரையும் சேர்த்து, ஒரு மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். அரைத்த மாவை, மீதமுள்ள தோசை மாவோடு நன்கு கலந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
முடக்கத்தான் கீரை தோசை ரெடி.
முடக்கத்தான் தோசை... வல்லாரை துவையலுடன் |
தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம். வல்லாரை துவையலும் முடக்கத்தான் தோசைக்கு நல்ல combination. இந்த தோசையை தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல் தனியாகவே சாப்பிடலாம். மருத்துவ மூலிகை என்றதும் கசப்பாக, மருந்துபோல் இருக்கும் என நினைக்க வேண்டாம். தோசை சுவை நன்றாகவே இருக்கும்.
ஆய்ந்து, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் தோசை மாவு
முடக்கத்தான் தோசை ரெடியாகிறது......
திருப்பிப் போட்டு வேக வைத்தால் முடக்கத்தான் தோசை ரெடி....
முறுகலாகவும் முடக்கத்தான் தோசை வார்க்கலாம் |
1 comment:
மிகவும் பயனுள்ள கீரை... தோசையாக இதுவரை செய்ததில்லை...
நன்றி...
Post a Comment