Sunday, 9 March 2014

வாழைக்காய் பொடி

வாழைக்காய் பொடி 
வாழைக்காய் - இரண்டு 
வர மிளகாய் - 7
உளுத்தம் பருப்பு - ஒரு பிடி 
கடலை பருப்பு      - ஒரு பிடி 
பெருங்காயம் - சிறிது 
உப்பு - தேவைக்கு 





       வாழைக்காயை துண்டு போட்டு, ஒரு வாணலியில் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும்.

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயம் இவற்றை சிறிது எண்ணெய் விட்டு, சிவக்க வறுக்கவும்.


வேக வைத்த வாழைக்காய்களை தோல் உரித்து, கைகளால், சிறு துண்டுகளாக உதிர்க்கவும்.



வறுத்த பருப்புகள், வர மிளகாயை, சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.

பொடி கொர கொரப்பாக இருக்க வேண்டும்.

 அறைத்த பொடியோடு வேகவைத்து உதிர்த்த  வாழைக்காய் துண்டுகளையும் சேர்த்து அறைக்கவும்.

வேக வைத்த வாழைக்காய் துண்டுகளில் நீர்  இருக்கக் கூடாது. 

Microwave oven அல்லது OTG (Oven, Toaster, Griller)யில் தண்ணீர் இல்லாமல் வேக வைத்தால் வாழைக்காய் பொடி சுவை நன்றாக இருக்கும்.
வாழைக்காய் பொடி ரெடி

வாழைக்காய் பொடி செய்த அன்றே சாப்பிட்டு தீர்த்து விட வேண்டும். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் சொன்னதையும் கருத்தில் கொண்டு செய்து பார்க்கிறோம்... நன்றி...

Unknown said...

it will last for 2-3 days, if done properly; with right amount of water for boiling; and if not over boiled.

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...