சென்னை டிசம்பர் மாத சங்கீத சீசன் முடிந்ததும் நடன நிகழ்ச்சிகள் தொடரும். 'நடனம்' என்றதும் தன் நினைவில் நிற்கும் பல சுவாரசிய நிகழ்வுகளை அசை போடுகிறார் ........
ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
அடுத்தாக நடன கச்சேரி.
நண்பரது மகள் நடன கச்சேரி. வழக்கம் போல் "சேர்த்த" கூட்டத்தில் நாங்களும் உண்டு. உள்ளே போய் உட்கார்ந்தோம். Three fold invitation கையில். பெரிய ஹால்... அதீத உள் அலங்காரங்கள். முதலில் எல்லோருக்கும் ஜூஸ் சப்ளை ஆனது. கூடவே ஸ்வீட்-காரம். சாப்பிட்டு ஏப்பம் விட்டதும் திரை விலகியது.
நண்பரின் மகள் ஆட ஆரம்பித்தாள். 3 பாட்டுக்கு டான்ஸ் முடிந்தது.
இடைவேளை விட்டார்கள்.
மேடையை ஆக்கிரமித்தது ஒரு கூட்டம். நடனம் ஆடிய பெண்ணின் குருவின் குருதான் chief guest.
அணிந்திருந்த கண்ணாடியை பக்கத்தில் இருந்தவரிடம் ஞாபகமாக கொடுத்து விட்டு மேடை ஏறினார் குருவின் குரு. தன்னிடம் நடனம் பயின்று, இன்று குருவாக தன மாணவி உயர்ந்திருப்பதில் (சம்பாதிப்பதில்) சற்றே கடுப்பாகி இருந்தார் குருவின் குரு.
"இது பெரிய கலை. எல்லோராலும் செலவு செய்ய முடியாது. இது பணக்காரர்களின் கலையாக மாறி விட்டது" என்று ஏதேதோ புலம்பினார். இப்படி செலவு செய்ய தயாராக உள்ள அப்பன் எவனும் என்னிடம் சிக்கவில்லையே என்ற பொறாமை அப்பட்டமாக வெளிப்பட்டது.
பட்டுப் புடவை பார்சல் ஒன்றை பரிசாக பெற்றுக் கொண்டு கீழே இறங்கினார் குருவின் குரு. நிகழ்ச்சி முடிந்தது. அனைவரும் பரிசு பொருள்களுடன் சென்றிருந்தோம். உறவினர் மகளிடம் கொடுத்துவிட்டு வந்தவுடன் வாசலிலேயே எல்லோருக்கும் takeaway பார்சலாக இரவு உணவு கொடுக்கப்பட்டது.
பிறகொரு நாள் நண்பரிடம் விசாரித்தோம்....
"எவ்வளவு செலவு?" என்று.
மூச்சை பிடித்துக் கொள்ளுங்கள். ஜஸ்ட் ஐந்து லட்சம் சொச்சம்தான்.
என்ன பெருமைக்குடா இப்படி செலவு செய்யறீங்க?
கலாட்டா தொடரும்.....
1 comment:
உங்கள் பதிவுகளை அனேகமாக எல்லாம், படித்துவிட்டேன். நல்ல ரசனையா நகைச்சுவையா எழுதறீங்க. பிளாக்கில் எழுதுங்களேன். எழுத விஷயமா இல்லை? சமையல் குறிப்புகளே நிறைய போடலாம். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
கச்சேரி கலாட்டா பகுதிகள் முழுவதும் மிக நன்றாக இருக்கு.
அல்வாவைப் பற்றிய இடுகைகள் - நன்றாக இருக்கு. ஆனால் உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் நான் ஒத்துப்போகவில்லை. நெல்லையிலேயே பெஸ்ட் அல்வா என்று என்னைக்கேட்டால் (என்னைத்தான் கேட்கணும். ஊர்க்காரன் நான், நாக்கு கொஞ்சம் நீளம்தான், அதிலும் இனிப்பில்) ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் (பஸ் ஸ்டான்ட். எப்படி கண்டுபிடிக்கறது. ரோடுக்கு அந்தப் பகுதியிலிருந்து எந்தக் கடைல கூட்டம் அள்ளுது என்று பாருங்க. அதுதான் ஒரிஜினல்) அல்வாதான் ரொம்ப பெஸ்ட். அதுக்கு அடுத்ததா இருட்டுக்கடை (அதுவும் வாங்கி மூணு நாள் கழிச்சு அவன்ல வச்சு சுடவச்சு சாப்பிடற பிஸினஸ் கூடாது). இதை விட்டால், ஜங்ஷன் மேம்பாலத்தில் பாலஸ் டி வேல்ஸ் போற வழில இருக்கிற நிறைய லாலாக் கடைகள்ல ஒண்ணு-படம் பார்த்துட்டுத்தான் சொல்லணும். மிக்சர்னா, அதுவும் சாந்தி ஸ்வீட்ஸ்தான். (சில சமயம் பூண்டு வாசனை வருது. வாங்கிக்கிட்டு வரவங்க, மறந்துபோய் வேற சாந்தில வாங்கிடறாங்கன்னு நினைக்கறேன்). சாந்தி ஸ்வீட்ஸ்லயும் கன்சிஸ்டன்சி மிக்சர்ல நான் பார்க்கலை.
லக்ஷ்மி விலாஸ் அல்வாலாம் உண்மையா அல்வாவில் சேர்த்தி கிடையாது. அவங்க 87களில், தினமும் சென்னைக்கு பார்சல் அனுப்பி, தி நகர் மற்ற இடங்களில் மாருதி வேனில் இரவு விற்பனை நடக்கும். இப்போவும் மாம்பலம் போன்ற இடங்களில் கிடைக்கும் (அவங்க அனுப்பறதுதான்). அது தேறாது.
உங்களை மீண்டும் தளத்தில் எழுதுங்கோ என்று சொல்வதுதான் இந்தப் பின்னூட்டத்தின் நோக்கம்.
Post a Comment