Tuesday 20 August 2013

சமையலறை தோட்டம்

Graphics by Sundarramg




உங்களுக்கு தெரியுமா?

               ஒவ்வொரு February மாதமும், உலக நொறுக்கு தீனி மாதமாக (World Snack Food Month) கொண்டாடப் படுகிறது. நொறுக்கு தீனி சங்கமும் (The Snack Food Association), தேசிய உருளை கிழங்கு வளர்ச்சி நிறுவனமும் (National Potato Promotion Board) இணைந்து கொண்டாடும் " உலக நொறுக்கு தீனி மாதம்"  ,  1989 ல் முதலில் நடைமுறைக்கு வந்தது. பிஸ்கட், குக்கிஸ், உருளை கிழங்கு வறுவல் போன்றவற்றை வியாபாரம் செய்யும் உலகளாவிய 500 வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு நொறுக்கு தீனி சங்கம். யாரும் ஒல்லியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து விடக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் துவங்கப் பட்டதுதான் இந்த உலக நொறுக்கு தீனி மாதம். February மாதத்தில் வியாபாரம் 'டல்' லடித்ததை பொறுக்காத பெரு வணிகர்களின் 'ஆடி' கொண்டாட்டம் தான் இந்த " உலக நொறுக்கு தீனி மாதம்" . மேற்கத்திய நாடுகளில் டிசம்பர் முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறை. வாங்கி களைத்த மக்கள், அடுத்து வரும் மாதங்களில் செலவை சுருக்கி விடுவார்கள். இது தான் இந்த February மாத வணிக தந்திரத்தின் காரணம். 

                இதற்கு பதிலடி கொடுக்க கிளம்பியது Kitchen Gardeners International (KGI) அமைப்பு. 2004 முதல், ஒவ்வொரு வருடமும் August மாதத்தின் நான்காம் ஞாயிறு, " உலக சமையலறை தோட்ட தினம்"   ( World Kitchen Garden Day ) ஆக கொண்டாடப் படுகிறது. இந்த வருடம், ஆகஸ்டு 25, World Kitchen Garden Day. நொறுக்கு தீனி சங்கம் போல பணபலம் படைத்த நிறுவனம் அல்ல இது. நல்வாழ்வை நாடும் மக்களின் ஆதரவு தான் இதன் பலம். "தனி மனித முயற்சியில் விளைந்த உணவு தரும் ஆனந்தத்தின் வெளிப்பாடே உலக சமையலறை தோட்ட தினம்.' 

                     அது என்ன 'சமையலறை தோட்டம்?' சமையலுக்கு தேவையான காய்கறி, கீரை, பழ வகைகளை நம் வீட்டிலேயே பயிர் செய்வதுதான் 'சமையலறை தோட்டம்'. Fresh from Garden to Kitchen. 'Oota from thota' என்று கர்நாடகத்துக்காரர் ஒருவர் அழகாக சொன்னார். மொழி பெயர்ப்பு தேவையில்லை என்று நினைக்கிறேன்.

           மலர் வகைகள், புல்வெளிகள் (lawn) இவையெல்லாம் Kitchen Gardenல் சேர்த்தியில்லை. 

              இந்த நடைமுறை நம் சமுதாயத்தில் பல தலைமுறைகளாக வழக்கத்தில் இருந்ததுதான். வீட்டிற்கு பின்னால் கிணறு, வீட்டை சுற்றி தோட்டம்-இவை தான் ஒரு வீட்டிற்கான இலக்கணம். அப்படித்தான் நம் முன்னோர் வாழ்ந்து வந்தனர். இடையில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்தோம். வணிக கலாச்சாரத்தின் கைப்பாவையாகி, நுகர்வோர் என்று அழைக்கப் படுவதில் பெருமிதம் கொண்டோம்.

                         நமக்கு தேவையான காய்கறியை  நாமே  உற்பத்தி செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. உரம் போடாத, பூச்சிக் கொல்லி மருந்தில்லாத ஆரோக்கிய உணவு. புத்தம் புதிய காய்கறியின் சுவை. பொருளாதார சிக்கனம். இதற்கும் மேலாக சுற்று சூழலுக்கும் நன்மை உண்டு. எங்கிருந்தோ கொண்டு வரப் படும் உணவு பொருள் பயணத்திற்கான எரிபொருள் மிச்சம். உலகம் வெப்ப மயமாவதை கொஞ்சம் குறைக்கும் நம் Kitchen Garden முயற்சி. பயிர் செய்வதில்  மனத்திற்கு கிடைக்கும் உற்சாகம், உடலுக்கு கிடைக்கும் பயிற்சி இரண்டும் போனஸ் நன்மைகள்.

                            எப்படி கொண்டாடலாம் உலக சமையலறை தினத்தை?

          உங்கள் விருப்பம்தான். வீட்டு தோட்டம் அமைத்தவர்கள் , நண்பர்களை வீட்டிற்கு அழைத்து, வீட்டில் விளைந்த பொருள்களை கொண்டு விருந்து படைத்து மகிழலாம். இல்லாதவர்கள்  அரை மணி நேரம் அருகில் உள்ள பூங்காவில் இந்த தினத்தை கொண்டாடலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் முயற்சியை துவங்கலாம்.

                   காலி இடமே இல்லாத நகரத்து வீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி? அதுவும் 'zero budget' ல் ? சொல்கிறேன்...அடுத்த post ல்.




No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...