Sunday, 25 August 2013

சமையலறை தோட்டம்...பகுதி 3 - ஒரு நாள் பயிற்சி



தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், தகவல் மற்றும் பயற்சி மையம், சென்னை அண்ணா நகரில் இயங்கி வருகிறது. நகர்புற  தோட்ட வளர்ச்சிக்கான , தகவல் மற்றும் பயிற்சி தருவது இந்த மையத்தின் நோக்கம். நகர்புற தொழில் முனைவோர், பெண்கள், வேலை கிடைக்காத பட்டதாரிகள், சுய உதவி குழு பெண்கள், மாணவர்கள், சேவை அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியோருக்கு பயன்தரும் பயிற்சியளிக்கிறது இந்த மையம். 


சமையலறை தோட்டம், மாடி தோட்டம், மலர் அலங்காரம், வீட்டிற்குள் வளரும் தாவரங்கள் பாதுகாப்பும் பராமரிப்பும், போன்சாய் தாவரம், மண்புழு உர தயாரிப்பு, இயற்கை காய்கறி மற்றும் பழங்கள் பயிரிடுதல், சிறுதானிய உணவு தயாரிப்பு - உள்ளிட்ட 21 தலைப்புகளில் ஒரு நாள் பயிற்சிகள், மாதத்திற்கு ஒரு முறை நடத்தப் படுகின்றன.



பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், சிறுதீனிகள், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் வழங்கப் படும்.



இந்த மாத 'சமையலறை தோட்டம்' பயிற்சி, 27-08-2013 செவ்வாய் அன்று நடைபெறுகிறது.

மண்புழு உர  விற்பனையும் செய்கிறது  இந்த மையம். 5 கிலோ மண்புழு உரத்தின் விலை ரூபாய்  60 மட்டுமே.




முகவரி:  

தகவல் மற்றும் பயிற்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்,
U-30, 10 வது தெரு, அண்ணா நகர்,
சென்னை-40.


ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்.

தொடர்பு எண்: 044-26263484



No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...