Sunday 11 August 2013

கம்பு வெல்ல கொழுக்கட்டை

திரு. கண்ணன் 
எனது நண்பர் திரு. கண்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். ராமநாதபுரம் அருகில் உள்ள அச்சுந்தன் வயல் கிராமத்திலிருந்து சென்னை வந்து settle ஆனவர். தன் கிராமத்து உணவு வழக்கம் பற்றி நிறைய பேசுவார். கம்பு, வரகு போன்ற தானிய உணவுகளை கிராமத்து மக்கள் விரும்பி உட்கொண்டதில் துவங்கி........ இன்று அதே கிராமத்து மக்கள், தம் வயலில் விளைந்த தானியங்களை விற்று விட்டு, அரிசி வாங்கி சாப்பிடுவது வரை......... ஏராளமான செய்திகள் அவர் பேச்சிலிருந்து கிடைக்கும். அவருடன் ஒரு மணி நேரம் பேசி விட்டு பார்த்தால், வயக்காட்டு சேறு நம் காலை நனைத்திருக்கும். சென்னையிலிருந்து நம் மனம் வெகு தொலைவு சென்றிருக்கும்.  

அவர் சொன்ன recipe கம்பு வெல்ல  கொழுக்கட்டை. திரு. கண்ணனின் உணவு குறிப்புகளை இனி அடிக்கடி  தருவேன். 

கம்பு  வெல்ல  கொழுக்கட்டை 


தேவையான பொருள்கள் 


கம்பு 


பாசி பருப்பு 




ஏலக்காய்



தேங்காய் 



தேங்காய் துருவல் 




வெல்லம் 

கம்பு -150 கிராம்.
பாசி பருப்பு -75 கிராம்.
ஒரு சிறிய தேங்காய் மூடி -துருவியது .
வெல்லம் -துருவியது -125 கிராம்.
ஏலக்காய் -4

செய்முறை 


கம்பு தானியத்தை மூழ்குமளவு தண்ணீரில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன், கைகளால் நன்கு அலசி தண்ணீரை வடிக்கவும். கம்பு தானியத்தில் உள்ள உமி நீங்கும் வரை  ( மூன்று அல்லது நான்கு முறை) தண்ணீர் விட்டு அலசவும். தண்ணீரை வடித்த பின், கம்பு தானியத்தை சிறிது நேரம் உலற விடவும். நன்கு உலர்ந்த பின், வாணலியில் போட்டு வறுக்கவும். கம்பு லேசாக சிவக்க துவங்கும். ஒன்றிரண்டு கம்பு பொறிய ஆரம்பிக்கும். அப்போது வறுப்பதை நிறுத்தி, ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஆற விடவும்.

பாசி  பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும். வறுத்த பாசி பருப்பையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

ஏலக்காயை லேசாக வறுக்கவும்.

வறுத்த கம்பு, பாசி பருப்பு, ஏலக்காய் மூன்றையும் மிக்சியில் போட்டு நன்கு அறைக்கவும். 

அறைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெல்லம் துருவல் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். பத்து நிமிடம் கழித்து மாவை உருண்டைகளாக பிடிக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. வெல்லம் கலந்து பத்து நிமிட நேரத்தில் வெல்லத்திலிருந்து நீர் கசிய துவங்கும். இந்த நீரே உருண்டையாக பிடிக்க போதுமானது.

பிடித்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, பத்து பதினைந்து நிமிட நேரம் நீராவியில் வேக விடவும்.

சுவையான, ஆரோக்கியமான கம்பு  வெல்ல  கொழுக்கட்டை தயார்.

நான் organic வெல்லம் மட்டுமே பயன் படுத்துகிறேன். காரணம் organic வெல்லம் சுத்தமாக இருக்கிறது. சாதாரண வெல்லத்தை நீரில் கரைத்து, அதில் கலந்துள்ள தூசிகளை வடிகட்டுவார்கள். Organic வெல்லத்தில் அந்த வேலையில்லை. இனிப்பு சுவையும் சரியாக இருக்கிறது. படத்தில் காட்டியுள்ள வெல்லம் மைலாப்பூர் Sunday Shandy யில் வாங்கியது. கம்பு  Adyar Restore ல் வாங்கியது.

 வறுத்த கம்பு+பாசி பருப்பு+
ஏலக்காய் மாவு 

கம்பு கொழுக்கட்டை
வேக வைக்கு முன் 

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...