திருமதி. சத்தியபாமா, ஸ்ரீரங்கம் |
நாட்டின் சில பகுதிகளில் மட்டும் சில உணவு வகைகள் பிரபலமாயிருக்கும். சில உணவு வகைகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் சிறப்பு உணவாயிருக்கும். இன்னும் சில உணவு வகைகள், குறிப்பிட்ட குடும்பங்களில் மட்டும் வழங்கி வந்திருக்கும். நான் கேள்வியே பட்டிராத ஓர் உணவு, அரிசி வடை. என் மனைவியின் அம்மா வழி பாட்டி, திருமதி. சத்தியபாமா தன் வீட்டில் அடிக்கடி பிரியமுடன் செய்து வந்த உணவு. ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர்.அவர் வீட்டிற்கு சென்றால், எந்த நேரமானாலும் உடனடி டிபன் ஏதாவது செய்து தருவார். அவசரத்தில் செய்தாலும் சுவையில் குறையிருக்காது. அவர் உள்ளன்புடன் செய்து தந்த அரிசி வடை, இன்னமும் அவர்தம் பேத்திகளின் மனதில் சுவை மணக்க வாழ்கிறது. நாம் வழக்கமாக செய்யும் வடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சுவை. தலைவாழை விருந்தின் 25வது போஸ்ட் . திருமதி. சத்தியபாமாவுக்கு சமர்ப்பணம்.
அன்பு, பாசம்--ஒரு கூடை நிறைய
புழுங்கல் அரிசியை புளித்த தயிரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய், வர மிளகாய், பெருங்காயம், உப்பு இவற்றுடன், தயிரில் ஊறிய அரிசியை சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அறைக்க வேண்டும். இலையில் தட்டி, ஒவ்வோன்றாக எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். மிதமான தீயில் பொறித்து எடுப்பது முக்கியம். விருப்பப் பட்டால், அறைத்த மாவில், கருவேப்பிலை சேர்க்கலாம்.
|
இலையில் சிறிது எண்ணெய் தடவி வடையாக தட்டவும் |
1 comment:
Wow! 25th in a short span of time. Hats off!
Post a Comment