தீபக் ராஜா |
இந்த post ல் இடம் பெற்றிருக்கும் படங்களை
எடுத்தது திரு. தீபக் ராஜா. பொறியியல் முதல்
ஆண்டு மாணவர். பம்மலில் வசிக்கிறார்.
இவர் எடுக்கும் புகை படங்கள் தொடர்ந்து
'தலைவாழை விருந்தில்' வெளிவரும்.
சூரிய தரிசனம் Photo: Deepak Raja |
மனோரஞ்சிதம் Photo: Deepak Raja |
மிளகாய்-காரம் ஜாஸ்தி Photo: Deepak Raja |
சோத்து கத்தாழை Photo: Deepak Raja |
கருவேப்பிலை Photo: Deepak Raja |
சும்மா....அழகுக்கு Photo: Deepak Raja |
அரளி Photo: Deepak Raja |
சமையலறை தோட்டத்தில் காய்கறி செடிகள், கீரைகள் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டை சுற்றி கொஞ்சமே கொஞ்சம் இடம் இருந்தால் போதும். பலவகை மரங்கள் நடலாம். அதிக பராமரிப்பு இன்றியே தொடர் பலனை அறுவடை செய்யலாம். தென்னை, வாழை, முருங்கை, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, மாதுளை, பப்பாளி, கருவேப்பிலை, வேம்பு, மனோரஞ்சிதம்-இவை அனைத்துமே சமையலறை தோட்டத்திற்கு ஏற்றவை. சமையலுக்கு காய்கள், உடல் நலத்திற்கு பழங்கள், மருந்து பொருளாகும் வேம்பு, பூஜைக்கு மலர்கள்....கைக்கெட்டும் தூரத்தில்.
எங்கோ தொலைவில் அல்ல....சென்னை விமான நிலையத்திற்கு அருகில், நெரிசல் மிகு பம்மலில், இந்த மரங்களை வீட்டை சுற்றி வளர்த்து வருகிறார் என் நண்பர் திரு. கண்ணன். கூடவே சோத்து கத்தாழை (Aloe Vera), மருதாணி, மிளகாய் செடிகள். " இது தவிர தானாக முளைக்கும் 'தப்பு செடிகள்' பல சமயங்களில், களைகளாக இல்லாமல், மூலிகைகளாக அமைந்து விடுவதும் உண்டு" என்கிறார் அவர். மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லியும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குப்பை மேனி யும் அவர் வீட்டு தோட்டத்தில் உண்டு. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மரங்களையும், செடிகளையும், மூலிகை பயிர்களையும் நம் வீட்டு உறுப்பினர்களாக நினைத்து பாருங்கள். இருக்கும் சிறிய இடத்தில் தாவரங்களுக்கும் இடம் கொடுங்கள். எதிர்பார்ப்பிற்கும் மேலான பலன் கிட்டும்.
No comments:
Post a Comment