Thursday, 26 September 2013

வேப்பிலை கட்டி

வேப்பிலை கட்டி 


வேப்பிலை கட்டி செய்ய என்ன தேவை?


எலுமிச்சை இலை 
நாரத்தை இலை           -ஒரு  பிடி
எலுமிச்சை இலை  -ஒரு பிடி
கருவேப்பிலை          - ஒரு பிடி
வர மிளகாய்               - தேவைக்கு
பெருங்காயம்             - சிறிது
புளி     -                              சிறு எலுமிச்சை அளவு.
கல் உப்பு                         - தேவைக்கு

நாரத்தை இலை 

கருவேப்பிலை 

எப்படி செய்வது?


நாரத்தை  இலை மற்றும் எலுமிச்சை  இலைகளில் நார் பகுதியை நீக்கி விட்டு  சிறு இலைகளாக கிழித்து கொள்ளவும். பின்னர் மிளகாய், புளி, உப்பு, பெருங்காயம் இவற்றுடன் சேர்த்து, நன்கு  கிளறி கிளறி அரைக்கவும்.   உலர்ந்த பாத்திரத்தில்  எடுத்து வைத்து, அவ்வப்போது கலந்து விடவும்.  
பொதுவாக கடைகளில்  சிறு  சிறு உருண்டையாக உருட்டி வைத்து விற்பார்கள். வீட்டு உபயோகத்திற்கு  பொடியாகவே வைத்து பயன்படுத்தலாம்.

 வயிற்று உப்புசம் , நெஞ்செரிச்சல்  ஏப்பம் போன்றவற்றிற்கு   மிகச்சிறந்த  மருந்து இந்த  வேப்பிலைகட்டி. வயிறுக்கு இதம் அளிக்கும் உணவு  இது . மோர்  சாதத்திற்கு தொட்டுக்கொள்ள  அருமையாக இருக்கும்.   நிறைய செய்து வைத்தால்  வாசனை போய்விடும். அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும்.

தஞ்சாவூர் பக்கங்களில் ஓரு நம்பிக்கை . ஐப்பசி மாதத்தில் இந்த வேப்பிலை கட்டியை அரைத்து சாப்பிட்டால் ஐஸ்வர்யம் பெருகும்  என்று. 

  தகவல் உதவி: சீதாலக்ஷ்மி கோபாலசாமி,  ஸ்ரீரங்கம்.

Wednesday, 25 September 2013

சமையலறை தோட்டம் - பகுதி 7: எங்கே கிடைக்கும் நாட்டு விதைகள்?



                    நெல் விவசாயத்திற்கும் சரி, வீட்டு தோட்டத்தில் காய்கறி பயிரிடுவதற்கும் சரி, நாட்டு விதைகளே (country seeds, indigenous seeds, native seeds) சரியான தேர்வு. பாரம்பரிய விதைகளின் மூலம் விளைந்த அரிசி மற்றும் காய்கறிகளில் அதிக சத்தும், மருத்துவ குணங்களும் உண்டு.

                 திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பையில் வாடி வதங்கிய இரண்டு வெற்றிலை, லெமன் சைசில் ஒரு தேங்காய், ரொம்ப வேண்டியவர்களுக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரம் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். மேலே சொன்ன அதே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஒரு புரட்சி செய்தார். அவர் தன் மகள் திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு கொடுத்த தாம்பூல பை சற்றே கனமானது. இரண்டு கிலோ இருக்கும். அத்தனையும் விதை நெல். அதுவும் பாரம்பரிய நெல் விதிகளான, மாப்பிளை சம்பா, கவுனி வகைகள். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 2 கிலோ விதை நெல் போதுமாம். பாரம்பரிய விதைகள் மீது இந்த அளவு ஆர்வம் கொண்டவர்களும் நம்மிடையே, இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.

                       சரி.....நாட்டு விதைகள் (அல்லது பாரம்பரிய விதை ) எங்கே கிடைக்கும். இதோ சில விவரங்கள் ....உங்கள் பார்வைக்கு.

      தமிழ்நாட்டில், ஆண்டிற்கு இருமுறை, பாரம்பரிய அரிசி விதை திருவிழா நடைபெறுகிறது. C.R.E.A.T.E.(Consumer Research Education Action Training Empowerment) என்ற இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இந்த திருவிழாவை நடத்துகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம் என்ற ஊரில் இயங்கி வருகிறது இந்த மையம். இந்த மையத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல்விதைகளில்  53 வகைகளை சேகரித்து வைத்திருக்கிறார்கள். விதை திருவிழாக்கள் மூலம் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் வசம் உள்ள பாரம்பரிய விதைகளை மற்றவர்களுக்கு வழங்கும் விதை பரிமாற்றமும் அப்போது நடக்கும். இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெயராமன் அவர்களை தொடர்பு கொள்ள - 04369-2209954, Cell: 94433 20954, E-mail: createjaya2@gmail.com.
இவர்களிடம் பாரம்பரிய காய்கறி விதைகளும் கிடைக்கும்.

                 இதே திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் (92456 21018) என்பவரும் பாரம்பரிய விதை விற்பனை செய்து வருகிறார்

                          நாட்டு காய்கறி விதை விரும்புவோர், திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை அணுகலாம். தமிழ்நாட்டின் 36 பாரம்பரிய காய்கறி விதை வகைகள் அவரிடம் இருக்கின்றன. கத்தரிக் காயில் மட்டும் பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்தரி என்று ஐந்து வகைகளை வைத்திருக்கிறார் இவர்.  தொடர்புக்கு - 94428 16863.

              கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையமும், காய்கறி விதை வாங்க சிறந்த இடம். பச்சை வெண்டை, வெள்ளை வெண்டை, சிகப்பு வெண்டை, நெட்டை புடலை, குட்டை புடலை, மிதி பாகல், நெட்டை பாகல், குட்டை பாகல்,கீரை வகைகள், பீர்க்கன் காய், கொடி அவரை, சுரைக்காய், தக்காளி, கொத்தவரை, பரங்கி, சாம்பல் பூசணி ஆகிய விதைகள் இங்கே கிடைக்கும். காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். 0414 -2212538.

               பாரம்பரிய விதைகள் வாங்க மற்றுமொரு சிறந்த தொடர்பு-கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி. பாரம்பரிய விதை சேகரிப்பாளர் இவர். சேகரித்த பாரம்பரிய விதைகளை வகை படுத்தியுள்ளார் . 09008167819.

            பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் விற்பனை பணிகளை செய்து வருகிறது.
080-26784509, 9449861043, 
FAX-080-26680995.

e-mail: green@greenfoundation.org.in
              gfbangalore@gmail.com
              earthbuddy@gmail.com

            NAVDANYA-அமைப்பு இயற்கை முறையில் விளைந்த (organic), நாட்டு காய்கறி விதைகளை விற்பனை செய்கிறது. navdanya@gmail.com ல் தொடர்பு கொண்டு விதைகள் வாங்கலாம்.

Saturday, 21 September 2013

சமையலறை தோட்டம்-பகுதி-6: வீட்டு தோட்டத்தில் நாட்டு செடிகள்





                             வணிகமும் கலப்பின செடிகளும்                                


ஆயுர்வேத மருத்துவத்தின் முதல் பாடம் இது:

  "  ஒரு வட்டாரத்தில் (limited geographical area),ஏற்படும் வியாதிக்கான மருந்து அதே இடத்திலேயே விளையும்."
                                                                                                                                                                   

" மருந்துக்கான மூலிகை செடிகளை தேடி வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை "   என்பது ஆயுர்வேதத்தின் பால பாடம். குப்பை மேனி, கீழாநெல்லி போன்ற அரிய மூலிகைகள் எல்லாம் தானாக விளைபவை. எந்த விஞ்ஞானியும் கலப்பின மூலிகை செடி (Hybrid Herbal Plant) உருவாக்க வேண்டியதில்லை. 

                        அதே போலதான், நமக்கு உணவாகும் காய்கறி, பழ செடிகளும். சேலம் என்றதும் மாம்பழம் நினைவுக்கு வரும். திருச்சிக்கு அருகாமை பகுதிகளில் விளையும் சிறிய வகை கொய்யா நல்ல சுவை தரும். மதுரை என்றால் மல்லி. கும்பகோணத்தில் விளையும் குண்டு கத்தரிக்காய்...கொழுந்து வெற்றிலை...ஒட்டன்சத்திரம் கத்தரிக்காய்......பண்ருட்டி பலா....திண்டுக்கல் சிறுமலைப் பழம்....

                இவையெல்லாம், நாட்டு செடிகள் (Native Plants, Indigenous Plants or Heirloom Plants) என்று அழைக்கப் படுகின்றன. அதாவது இவையெல்லாம் கலப்பின செடிகள் (Hybrid Plants) அல்ல. 

                         இத்தகைய நாட்டு செடிகள் தந்த உணவு மருந்தாகவும் வேலை செய்தது. கலப்பின செடி தந்த உணவு வியாதி தந்தது.

           
 நாட்டு செடிகள் மகரந்த சேர்க்கையால் இனப் பெருக்கம் (Pollination) செய்கின்றன. இதற்கு உறுதுணையாக  வண்டுகள் தேனீக்கள் , வண்ணத்துப் பூச்சிகள் செயல்படுகின்றன. நாட்டு செடி விளையும் தோட்டத்தில் புழுக்களுக்கும் பொன் வண்டுகளுக்கும் கூட வாழும் சூழல் இருந்தது. புழுக்களை உணவாக்கும் பறவைகள் வாழ்ந்தன. பறவைகளின் எச்சத்தில் இருந்து கூட சில செடிகள் முளைத்தன.மொத்தத்தில் நாட்டு செடிகள் ஒரு வாழ்வியல் சூழலை ஏற்ப்படுத்தி இருந்தன.

                 கலப்பின செடிகளுக்கும், மகரந்த சேர்க்கைக்கும் ஸ்நான ப்ராப்தி கூட கிடையாது. பல செடிகளின் குணங்களை இணைத்து, சோதனை கூடத்தில் உருவாக்கம் பெறுகின்றன, கலப்பின விதைகள் (Hybrid seeds). அவற்றிலிருந்து விளையும் உணவை உண்ணும் நாமும்  ஒரு விதத்தில் சோதனைக் கூட எலிகள் தான் (laboratory rats).

                   பல்வேறு இடங்களிலிருந்து, நாடுகளில் இருந்து காய்கறி, பழங்களை இறக்குமதி செய்கிறோம். வேறுபட்ட சீதோஷ்ண நிலையில் விளைந்த உணவுகளை நம் உடல் ஒப்புக் கொளவதில்லை. அதே போலதான் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து வளர்க்கப் படும் செடிகளும், கலப்பின செடிகளும்.

                    கலப்பின செடிகள் வியாபாரிகளுக்குத்தான் நன்மை பயக்கும். நமக்கு நன்மை தருபவை நாட்டு செடிகள்தான். 

     
 வியாபாரத்திற்காக பயிரிடும் முறை வேறு. நம் வீட்டு உபயோகத்திற்காக பயிரிடும் முறை வேறு என்பதை முதலில் நாம் உணர வேண்டும். உதாரணத்திற்கு தக்காளியை எடுத்து கொள்வோம். கலப்பின தக்காளி கெட்டியாக (fleshy) இருக்கும். சீக்கிரம் கெட்டுப் போகாது. பார்க்க அழகாக இருக்கும். பார்க்க ஒன்றுபோல் (uniform appearance) இருக்கும்.ஆனால் சுவை குறைவாக இருக்கும். Pack செய்ய எளிதாக இருக்கும் என்று, செவ்வக வடிவில் கூட  கலப்பின தக்காளி உருவாக்கி இருக்கிறார்கள்.

        நாட்டு தக்காளி, நீர்சத்தோடு (juicy) இருக்கும். சிறியதும், பெரியதுமாக பார்க்க அழகாயிருக்காது. ஆனால் லேசான புளிப்பு மற்றும் இனிப்போடு தூக்கலான சுவை இருக்கும்.

           வியாபார நோக்கில்,  பெரிய பரப்பளவில் ஒரே வகை காய் அல்லது பழவகை பயிரிடப் படும். அந்த மண்ணின் தன்மை என்ன, தண்ணீரின் தன்மை என்ன, அருகில் ஏதாவது மாசு தரும் தொழில் பகுதி (pollutant industries) இருக்கிறதா என எதுவுமே நமக்கு தெரியாது.

           நாட்டு செடிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் பெற்றவை. வறட்சியை தாங்கும் தன்மை நாட்டு செடிகளுக்கு உண்டு. நாட்டு செடிகளுக்கு மருத்துவ குணம் உண்டு. நிலத்தை வளப் படுத்தும். 

         இவற்றையெல்லாம் உணராமல், நாமும் வியாபாரி போல், நம் வீட்டு தோட்டத்தில், கலப்பின செடிகளை பயிரிட்டு அவற்றை உரமும் போட்டு வளர்க்கிறோம்.


                                 நாட்டு செடிகள்                                     


             குறிப்பிட்ட பகுதியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பயிரிடப் பட்டு வரும் செடிகளை தான் நாட்டு செடிகள் என்கிறோம். நம் மண் வளம், தட்ப வெப்ப நிலை, நீர்வளம் ஆகியவற்றிற்கு, நாட்டு செடிகள் தம்மை பழக்கப் படுத்தி இருக்கும். அவற்றிற்கு அதிக உரமோ, பூச்சிக் கொல்லிகளோ தேவை படாது. குறைந்த பட்சம் 40 வருடங்களாக கலப்பு செய்யாமல், இயற்கை மகரந்த சேர்க்கை மூலம் பயிர் செய்யப் பட்டு வரும் செடிகள், நாட்டு செடிகளாகும்.

             நாட்டு செடிகளுக்கு மாற்றாக நாம் வெளிநாட்டு செடிகளையும், கலப்பின (Hybrid) செடிகளையும்  ஆதரித்து வருகிறோம். 

                        செடிகளின் சமுதாய வாழ்க்கை                     

    
           மனிதனை ஒரு சமுதாய விலங்கு (Man is a social animal) என்பார்கள். அக்கம் பக்கம் இருக்கும் மனிதர்களோடு ஒருவருக்கு இருக்கும் தொடர்பு, சொந்தங்கள், நண்பர்கள் இல்லாமல் ஒரு மனிதன் இல்லை.

             உங்களுக்கு தெரியுமா? நாட்டு செடிகளுக்கும் ஒரு சமுதாய வாழ்க்கை உண்டு. ஒரு பகுதியில் விளையும் மற்ற பயிர் வகைகள், பூச்சிகள் ஆகியவற்றோடு ஒத்துப் போகும் தன்மை நாட்டு செடிகளுக்கு உண்டு. ஒரே பிரதேசத்தில் பல வருடங்களாக விளையும் நாட்டு செடிகளை அருகருகில் வளர்த்தாலும் ஒன்று மற்றதை அழிக்காது. தட்டான் பூச்சி, தவளைகள் என பல உயிரினங்கள் இந்த செடிகளை சார்ந்து வாழும். இந்த உயிரினங்கள் கொசுக்களை கூட கட்டுப் படுத்தும்.

                ஆனால் கலப்பின செடிகளும், பிற பகுதிகளில் இருந்து இங்கு கொணர்ந்து வளர்க்கப் படும் வெளிநாட்டு செடிகளும் robot போன்றவைதான். அவற்றிற்கென பயிர் சமுதாயம் கிடையாது. அவை நம் நாட்டு செடிகளை அழித்து விடும் தன்மை  கொண்டவை. உதாரணத்திற்கு யூகலிப்டஸ் மரத்தை குறிப்பிடலாம். 

    அன்னிய செடிகளும் அவை தரும் allergy நோய்களும்   

              
  பயிர்களின் மகரந்த சேர்க்கை இரு விதங்களில் நடக்கிறது. தேனீ, வண்டு மூலமாக நடக்கும் மகரந்த சேர்க்கை முதல் விதம். காற்றின் மூலம் நடக்கும் மகரந்த சேர்க்கை இரண்டாவது விதம். மகரந்த தூள் (pollen) காற்றில் பரவுவது தான் பல allergy நோய்களுக்கு காரணமாகிறது. பெரும்பாலும் மலர்கள்தான் காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை செய்கின்றன. அதிலும் குறிப்பாக வெளி நாட்டு மலர் செடிகள் தான் காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை செய்கின்றன. நாட்டு செடிகள் உயிர் இனங்கள் மூலமே மகரந்த சேர்க்கை செய்வதால், அவை allergy நோய் ஏற்படுத்துவதில்லை.


                      வீட்டு தோட்டத்தில் நாட்டு செடிகள்                 


   

                ஆரோக்கியமான வாழ்வு, சுவையான உணவு, சுற்று சூழலுக்கு உகந்த பயிர் வகைகள் - இவற்றை விரும்புவோர், வீட்டு தோட்டத்தில் நாட்டு செடிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.



     
உங்கள் வீட்டுக்கு அருகில் வண்ணத்துப் பூச்சியை பார்த்திருக்கிறீர்களா? பொன்வண்டு தெரியுமா? தட்டான் பூச்சி இருக்கிறதா? தவளை சத்தம் கேட்கிறதா? அக்கா குருவியின் ராகத்தை கேட்டிருக்கிறீர்களா? மண்புழுவை கண்டிருக்கிறீர்களா? அட...atleast மண்ணாவது இருக்கிறதா, உங்கள் வீட்டை சுற்றி?

   
            இவை எல்லாம் கிராமத்து வாழ்வில் தான் சாத்தியம் என்று நினைப்பவரா நீங்கள்? வருந்துகிறேன் நண்பர்களே? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நகர வாழ்விலும் இவை எல்லாம் சாத்தியமே. எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும், வீட்டை சுற்றி வீட்டு தோட்டம் ஒன்று உருவாக்குங்கள். நாட்டு செடிகளை தேடி பயிர் செய்யுங்கள். பறவைகளை வரவேற்க, ஒரு சிறிய பறவை கூட்டினை வீட்டு தோட்டத்தின் ஒரு ஓரத்தில் வையுங்கள். அதில் கொஞ்சம் organic தானியங்களை போட்டு வையுங்கள்.  இருக்கும் சிறிய பொது இடத்தையும் concrete போட்டு மூடாதீர்கள்.



                 
       நாட்டு செடிகளுக்கு எங்கே போவது? நாட்டு விதைகள் எங்கே கிடைக்கும்? சொல்வேன்....அடுத்த post வரை, wait please!

Thursday, 19 September 2013

நார்த்த இலை பொடி



நார்த்த இலை பொடி 








தேவையான பொருள்கள் 



நார்த்த இலை 







நார்த்த இலை 


வர மிளகாய் 

பெருங்காயம் 

உப்பு 



எப்படி செய்வது ?


நரம்பு நீக்கி, கிள்ளி வைத்த நார்த்த இலை 

      நார்த்த இலைகளை நன்கு சுத்தம் செய்து, நரம்பு நீக்கி, கிள்ளி வைத்து கொள்ளவும். இந்த இலைகளுடன், வர மிளகாய் (வறுக்க வேண்டாம்), உப்பு, பெருங்காயம் சேர்த்து, மிக்சியில் போட்டு அறைக்கவும். விரும்பினால், சிறிது வறுத்த கடுகையும் சேர்த்து அறைக்கலாம்.

நார்த்த இலை பொடி-பஞ்சு  போல....

       நார்த்த இலை பொடி, பார்க்க பஞ்சு இழைகள் போல், நார் நாராக ஆனால் மென்மையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். பித்தம் குறைக்கும். நல்ல பசி கொடுக்கும். வயிற்றில் அமில சுரப்பை கட்டுப் படுத்தும். செய்வதற்கு எளிதான, ஆரோக்கியமான பொடி இது. பொடி கெடாமல் இருக்க உலர்ந்த ஸ்பூனால்  அவ்வப்போது கிளறி விடவேண்டும்.  பொடி  நன்கு உலர்ந்து விட்டால்  சுவை கூடும். 

நார்த்த இலை பொடி 


Sunday, 15 September 2013

Bye....Bye......கணேசா!

                                                                                    Photo: Srividya Raman
                பீடத்தில் ஏற்றி வழிபட்ட விநாயகரை வழியனுப்பும் நாள் -நேற்றும் இன்றும். பட்டிணப் பாக்கம் கடற்கரை பக்கம் சென்றிருந்தோம். பக்தர்கள் கூட்டத்தில், க்யூவில் காத்திருந்தார்கள், ஆயிரக் கணக்கான பிள்ளையார்கள். இருட்டும் வரை பார்த்திருந்தோம். கண்ணுக்கெட்டா தொலைவு வரை கணபதி ஊர்வலம்தான். திரும்பி வந்த வழியெங்கும் வந்து கொண்டிருந்தார்கள் வகை வகையான  விநாயகர்கள். 







மாலை நேர வானத்தில் நம் தலைக்கு மேல் வட்டமிட்டு பறந்த விநாயகர் தரிசனம் கண் கொள்ளா காட்சி.(Video by Srividya Raman)

வெங்கட் நாராயணா ரோட்டின் V.I.P. பிள்ளையாரும், வழிகிடைக்காதா கடற்கரைக்கு என்று வண்டியை நிறுத்தி காத்திருந்தார். 


                                                                                                            Photo: Srividya Raman
தேங்காய் கொப்பரையில் செய்யப் பட்ட media darling பிள்ளையார்



Eco-friendly எள்ளு பிள்ளையாரும் அடுத்த வரிசையில் நின்றிருந்தார்.








மண்ணால் செய்யப் பட்ட பிள்ளையார்களை மட்டும் ஏனோ மண்ணிலேயே போட்டு விட்டிருந்தார்கள்.




              நாங்கள் பீச்சில் இருந்த இரண்டு மணி நேரத்தில், கடலில் கரைக்கப் பட்ட ராட்சச பிள்ளையார்களில் இருவர்தான்  பசுமை பிள்ளையார்கள். மற்ற வேழ முகத்தொரெல்லாம் plaster of paris ல் தான் காட்சி தந்தார்கள். அடுத்த வருடமாவது இந்த நிலை மாற அந்த மூஞ்சுறு வாகனர்தான் அருள்புரிய வேண்டும்.

                                                                          Photo: Srividya Raman
                                  மூஞ்சுறுக்கும் மோட்சம் உண்டு 


                                                                                           Photo: Srividya Raman
                                                 க்யூவில் பிள்ளையார்கள் 

                                                                                       Photo: Srividya Raman
                                                                                        Photo: Srividya Raman
                                                                                      Photo: Srividya Raman
                                                                                      Photo: Srividya Raman
                                                                                  Photo: Srividya Raman

                                                                                     Photo: Srividya Raman

Elephant Gate பகுதியிலிருந்து வந்த படகு விநாயகர் 




                                                                                   Photo: Srividya Raman
நீயும் நானும்......friends

 
                                                                                      Photo: Srividya Raman

                                                                                     Photo: Srividya Raman
                                                                                                                  Photo: Srividya Raman
         பிள்ளையாரை ஏற்றி வந்த வாகனங்கள், மணலில் சிக்கி, திரும்பி செல்ல முடியாமல் தவித்தன. அந்த வண்டிகளை மீட்டு, அனுப்பவும் ராட்சத Crane பயன்படுத்தப் பட்டது. வண்டிகள் வந்து திரும்ப தகர sheet செய்யப் பட்ட ஒரு தற்காலிக பாதை அமைத்தால் விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்படும் தாமதம் குறையும்.

Bye... bye Ganesa. Meet you next year.

சமையலறை தோட்டம்....பகுதி-5: மாடுலர் கார்டன்

திரு. T. தங்கவேலு 
        (Consultant:  Hortitech Services)

          மொட்டை மாடியில் முருங்கை மரம். பக்கத்தில் வாழை மரம். அடுத்து, பச்சை பசேல் கீரைப் பாத்தி. இவை எல்லாம் நெரிசல் மிகு சென்னை பட்டணத்தில், இன்று காணக் கிடைக்கும் காட்சிகள். Zero Budget ல் சமையலறை தோட்டம் அமைக்கலாம் என்று  எழுதி இருந்தேன். சற்று செலவு ஆனாலும் பரவாயில்லை...இன்றே....ஊஹூம்....இப்போதே, வேண்டும் சமையலறை தோட்டம் என்று ஆசை படுவோருக்கு இந்த பக்கம் உதவும்.

      நகரில் பல Nursery கள் இருக்கின்றன்றன. அவற்றில், மலர் செடிகளும், அழகு செடிகளும் கிடைக்கும்.  புல்தரை அமைக்க உதவியும் கிடைக்கும். ஆனால், சமையலறை தோட்டம் அமைப்பதில் சில nursery கள் தான் ஆர்வம் காட்டுகின்றன.

                                                    Photo: Sundarramg
Hortitech Services, Manapakkam



                                                                                   Photo: Sundarramg
இயற்கையோடு இணைந்து......(Hortitech services Office)


      மணப்பாக்கத்தில், ராமாவரம் signal அருகில், இயங்கி வரும் Hortitech Services, (3/233A, மணப்பாக்கம் மெயின் ரோடு, மணப்பாக்கம், சென்னை -600 125.) சென்றால்,  சமையலறை தோட்டம் அமைப்பதில் உங்களுக்கு உதவுவார்கள். தமிழக அரசின் தோட்டக் கலை துறையில், உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற திரு. தங்கவேலு (9442532215) அவர்களால், , "  சென்னை நகரை  மாடி தோட்ட நகராக மாற்ற வேண்டும் "  என்ற நோக்கில் துவங்கப்பட்டது  தான் Hortitech Services. 

                                                  Photo: Sundarramg

                                                Photo: Raman Krishnamachari




                            Photo: Raman Krishnamachari
Cocopeat
         
             Coco peat எனப் படும் தேங்காய் நாரின் மக்கிய துகள்கள், தோட்டத்திற்கான மண்ணாக பயன்படுத்தப் படுகிறது. எடை குறைவு. எனவே மாடியில் தோட்டம் அமைக்கும் பொது இந்த coco peat பயன் படுத்தினால்   கட்டடத்திற்கு பாரம் இருக்காது. நீர் உறிஞ்சும், மற்றும் நீர் தேக்கும் தன்மை அதிகம். ஆகவே அடிக்கடி தண்ணீர் விட தேவையில்லை. Grow bag என்றழைக்கப் படும் 'வளர் பை'களில் கூட செடி வளர்க்கலாம். செலவு குறையும். தொட்டி அல்லது grow bag இன்னொரு விதத்திலும் நல்லது. இவற்றில் செடி வளர்ப்பது கட்டடத்திற்கு பாதுகாப்பானது. நீர் கசிவு இருக்காது.


                                              Photo: Raman Krishnamachari
கொத்தவரை செடி 



                  இந்த coco peat மற்றும் செம்மண் 60 க்கு 40 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். தொட்டியில் இந்த கலவை நிரப்பி, ஒரு மாதம் வளர்ந்த செடியோடு தருவார்கள். கத்தரி, வெண்டை, தக்காளி, பாகற்காய், கொத்தவரை, புடலங்காய், அவரை, பீன்ஸ், மிளகாய் - இப்படி எந்த காய்கறி செடி விருப்பமோ அது கிடைக்கும்.

                                     Photo: Sundarramg
வெண்டை செடி 


                         Photo: Raman Krishnamachari
பாகற் செடி 



                                                                                      Photo: Sundarramg
Grow Bag ல்  வாழை மரம் 




                                                            
                 
                                                                 Photo: Sundarramg
தொட்டியில் செடி முருங்கை 



                                                      Photo: Sundarramg
கீரை விளைவிக்க.....பெரிய, வட்ட தொட்டி 


            Photo: Raman Krishnamachari
கீரை விளைவிக்க.......சிறிய தொட்டி 





     சற்றே உயரமான தொட்டியில் வாழை மரம். முருங்கை மரம். செடி முருங்கையாம். வழக்கமான முருங்கை மரத்தை விட குறைவான உயரமே வளரும். வாழையும் அப்படிதான். செடி முருங்கை ஆறு மாதத்திற்கு இலை தரும். ஆறு மாதத்திற்கு காய் தரும். ஒரு மரத்திலிருந்து ஒரு ஆறு 





மாத சீசனுக்கு, 250 முருங்கை காய் கிடைக்குமாம். பப்பாளி கூட தொட்டியில் வளர்க்கலாம்.


உடனே வீடு கட்ட  pre - fabrication technology உதவுகிறது. வசதியான சமயலறைக்கு modular kitchen உதவுகிறது. சமையலறையின் பல பாகங்களையும் தனி தனியாக எடுத்து வந்து, உங்கள் வசதி படி, ஒருங்கிணைத்து  வடிவமைப்பது தான் modular kitchen. மேலே சொன்ன உடனடி தோட்டத்தை, modular garden என்று கூட அழைக்கலாம். (Modular Garden சொல்லாக்கம்.........  Sundarramg)

நீங்கள் நினைத்தவுடன்  உங்கள் வீட்டில் தோட்டம் பூத்து குலுங்கும்.













கீரை வளர்க்க வட்ட வடிவில் தொட்டி தயாரித்திருக்கிறார்கள். தொட்டியை வீட்டு மாடியில் வைத்து, மண் நிரப்பி கீரை பயிரிடலாம். 










இரண்டு அளவுகளில் இந்த தொட்டி கிடைக்கிறது. ஒரு குடும்பத்திற்கு தேவையான கீரையை இந்த தொட்டியில் பயிர் செய்து விடலாம்.







                                                                                                                                                                   Photo: Sundarramg
தாவர அணிவகுப்பு 

                                                                                                                                          Photo: Sundarramg
பசுமை படருது......

மொட்டை மாடியை விளை நிலமாக கருதினால், சென்னையில் விளைநில இடம் கொட்டிக் கிடக்கிறது என்று கூறலாம். பொழுது போக்காக காய்கறி விவசாயத்தில் ஈடுபடலாம்.

உங்கள் வீட்டு மொட்டை மாடியில் 500 சதுரடி இடம் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். குறைந்த பட்சம், 15 தொட்டிகளில் காய்கறி செடிகளும், ஒரு வாழை மரம், ஒரு முருங்கை மரம் (எல்லாம் தொட்டியில்தான்), ஒரு கீரை தொட்டியும்  (இதில் இரண்டு வகை கீரை பயிர் செய்யலாம். ஒரு பகுதியில் உள்ள கீரை வளர்வதற்குள், மற்றொரு பகுதியில் உள்ள கீரையை பயன் படுத்தலாம்) அமைக்கலாம். உங்கள் வீட்டிற்கான காய்கறி கிடைத்து விடும். ஒரு மாதம் வளர்ந்த 15 செடிகள், தொட்டி, மண்ணோடு உங்கள் வீட்டு மாடியில் குடியேற, சுமாராக 4500 ரூபாய் செலவாகும்.

"  உங்கள் வீட்டு  காம்பவுண்ட் சுவரை சுற்றி இரண்டடி இடம் இருந்தால் போதும். 25 செடிகள் தொட்டிகளில் வளர்க்கலாம் " என்கிறார் திரு. தங்கவேலு. 

" தனி வீட்டில் வசிப்போருக்கு, வீட்டை சுற்றி மண் தரை இருந்தால் கூட, அவர்களும் தொட்டிகளில் (அல்லது grow bag ல்) செடி வளர்க்கலாம். இதில்தான் செலவு குறையும். தொட்டிகளில் ஒரு செடிக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு செம்மண், இயற்கை உரம் நிரப்பலாம். மண் தரையை தோட்டத்திற்காக செப்பனிடும் போது, அதிக மண் மற்றும் உரம் தேவைப்படும் " என்பது திரு. தங்கவேலுவின் கருத்து.


                                                                                    Photo: Sundarramg
கத்தரி செடி 




ஒரு மாதம் வளர்ந்த செடி ஒன்று மட்டும் போதும் என்றால், தொட்டி, மண்ணோடு  சேர்த்து 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. Grow bag என்றால் இன்னமும் விலை குறைவு. பொதுவாக மாடி தோட்டத்திற்கு, Grow bag சரியான தேர்வு.

                                                Photo: Raman Krishnamachari

                      Photo: Raman Krishnamachari
மஞ்சள் செடி 


ஒரு கிலோ செம்மண்  5 ரூபாய். செம்மண்ணோடு, மாட்டு சாணம் மற்றும் கோழி கழிவு கலந்த கலவை, ஒரு கிலோ 8 ரூபாய். மண்புழு உரமும் கிடைக்கிறது. 

 விதைகள், தண்ணீர் தெளிப்பான்களும்  (water spray bottles) கிடைக்கும்.
Photo: Raman Krishnamachari

தோட்ட வேலை ஆள், தோட்ட அமைப்பு குறித்த ஆலோசனை (consultancy) வேண்டும் என்றாலும் நீங்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம். மண்ணை சமன்படுத்த தேவை படும் சிறிய கருவிகளும் இங்கு கிடைக்கும்.

பாம்பு நடமாட்டத்தை தடுக்கும் ஒருவகை lemon grass செடியை இங்கே காண முடிந்தது. இன்னொரு வகை lemon grass செடி, டீயில் கலந்து குடிக்க கூடிய lemon grass oil தயாரிக்க உதவுகிறது. அந்த வகை lemon grass செடியும் இன்னும் கொஞ்ச நாட்களில் இங்கே கிடைக்கும்.


                     Photo: Sundarramg
லெமன் கிராஸ் செடி - பாம்பு நடமாட்டம் தடுக்கும் 






மொட்டை மாடியில் செடி வளர்ப்பதில் வசதி, பிரச்சினை இரண்டுமே உண்டு. தேவையான சூரிய வெளிச்சம் கிடைப்பது வசதி. அதே சூரிய ஒளி தான் பிரச்சினையும் கூட. அதிக சூரிய ஒளியை தடுக்க பசுமை வலைகள்  கிடைக்கின்றன. அவை 50 சதவிகித சூரிய ஒளியை தடுத்து விடும். இந்த வலைகளும், வலையை கட்ட சவுக்கு கட்டைகளும் கூட Hortitech Services ல் உண்டு.                                                                                                       Photo: Raman Krishnamachari



                                         Photo: Raman Krishnamachari
பூ....பூவாய் பூத்திருக்கு 

                                                                                          பூக்களை பறிக்காதீர்கள்                                    
                                                                                                                                                                     Photo: Sundarramg
                                                                                                        

                                  Photo: Sundarramg
பசுமை 


சென்னையில் சமையலறை தோட்டம் அமைக்கும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்திருப்பதை Hortitech services ல்  இருந்த ஒரு மணி நேரத்திலேயே உணர முடிந்தது. 

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...