சுவை மிகுந்த கிராமிய உணவு கேழ்வரகு அடை. இதோ...........
எப்படி செய்வது?
கேழ்வரகு மாவு - 1/2 கப்
தண்ணீர்
இளம் முருங்கை இலை - 1/2 கப்
இளம் கருவேப்பிலை
சீரகம்
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு தேவைக்கு
நல்லெண்ணெய்
எப்படி செய்வது?
இளம் முருங்கை இலையாக தேர்வு செய்து, காம்பு நீக்கி ஆய்ந்து கொள்ளவும். இளம் கருவேப்பிலை எடுத்து அதேபோல் ஆய்ந்து வைக்கவும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.
கேழ்வரகு மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, சீரகம் போட்டு, முருங்கை, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தையும் போட்டு, அடை பதத்தில் பிசையவும்.
சின்ன வெங்காயத்தில் இருந்தும் நீர் கசியும். எனவே, தண்ணீர் அதிகம் வேண்டாம். தோசைக்கல்லை அடுப்பில் போட்டு,காய்ந்ததும் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் சூடேறியதும் பிசைந்த மாவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, தோசைக்கல்லில் நேரடியாக அடையாக தட்டவும். இந்த முறையில் கவனம் தேவை. அடுப்பில் கை சுடாமல் செய்ய, நன்கு பழகியவர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள், ஒரு இலையில் லேசாக எண்ணெய் தடவி, பிசைந்த மாவை வடை போல் தட்டவும். அதை அப்படியே எடுத்து தோசைக்கல்லில் போட்டு, வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், திருப்பி போட்டு மறுபுறம் வேக வைக்கவும். இருபுறமும் வெந்ததும் சூடாக சாப்பிடவும். ஆறினால் அவ்வளவாக ருசிக்காது.
இரும்பு சத்து நிறைந்த, திருப்தியான காலை உணவு, கேழ்வரகு அடை.
கேழ்வரகு அடை |
No comments:
Post a Comment