நார்த்த இலை பொடி |
தேவையான பொருள்கள்
நார்த்த இலை |
நார்த்த இலை
வர மிளகாய்
பெருங்காயம்
உப்பு
எப்படி செய்வது ?
நரம்பு நீக்கி, கிள்ளி வைத்த நார்த்த இலை |
நார்த்த இலைகளை நன்கு சுத்தம் செய்து, நரம்பு நீக்கி, கிள்ளி வைத்து கொள்ளவும். இந்த இலைகளுடன், வர மிளகாய் (வறுக்க வேண்டாம்), உப்பு, பெருங்காயம் சேர்த்து, மிக்சியில் போட்டு அறைக்கவும். விரும்பினால், சிறிது வறுத்த கடுகையும் சேர்த்து அறைக்கலாம்.
நார்த்த இலை பொடி-பஞ்சு போல.... |
நார்த்த இலை பொடி, பார்க்க பஞ்சு இழைகள் போல், நார் நாராக ஆனால் மென்மையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். பித்தம் குறைக்கும். நல்ல பசி கொடுக்கும். வயிற்றில் அமில சுரப்பை கட்டுப் படுத்தும். செய்வதற்கு எளிதான, ஆரோக்கியமான பொடி இது. பொடி கெடாமல் இருக்க உலர்ந்த ஸ்பூனால் அவ்வப்போது கிளறி விடவேண்டும். பொடி நன்கு உலர்ந்து விட்டால் சுவை கூடும்.
நார்த்த இலை பொடி |
1 comment:
Today I will prepare. Thank U sundar
Post a Comment